சுங்கசாவடி கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு! இனிமே இவ்வளவு ஜாஸ்தி பணம் கட்டணுமா?

தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ரூபாய் 5 முதல் ரூபாய் 240 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏன் உயர்த்தப்பட்டுள்ளது? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழக முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு கடந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வாகனங்கள் சுங்க கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். கார் முதல் மிகப்பெரிய கனரக வாகனங்கள் வரை சுங்க கட்டணம் வசூலாகி வருகிறது.

tamilnadu toll charges hike

சுங்க கட்டண விதிகளின்படி கடந்த 2008 ஆம் ஆண்டு மொத்த விற்பனை விலை குறியீட்டின்படி தான் சுங்க கட்டணங்கள் விலை உயர்த்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதியும் மீதமுள்ள 28 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

மொத்த விற்பனை விலை குறியீடு என்பது ஒரு நாட்டின் பண வீக்கத்தை மதிப்பிடும் ஒரு முக்கியமான குறியீடாக பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இதில் வரும் குறியீட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 27 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.

tamilnadu toll charges hike

தற்போது மீதமுள்ள 28 சுங்கச்சாவடி களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஒவ்வொரு விதமான வகையில் கட்டணம் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூபாய் 5 முதல் அதிகபட்சம் ரூபாய் 240 வரை சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே சுங்க கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக மக்கள் மத்தியில் பெரும் புகார்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகள் இதனால் அதிகம் சிரமப்படுவார்கள் என்ற பேச்சு அதிகமாக எழுந்துள்ளது.

சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வால் அத்தியாசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தற்போது பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலும் ஒரு நகரம் மட்டும் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தான் விற்பனையாகி வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளின் கட்டணம் நேரடியாக அத்தியாவசிய பொருட்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகின்றனர்.

தற்போது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் கார்டு முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முன்னரே காடுகளை ரீசார்ஜ் செய்து கொண்டு பின்னர் தான் சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஃபாஸ்ட் டேக் கார்டில் பணம் இல்லை என்றால் அவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மத்திய அரசு இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளின் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்து விட்டு ஜிபிஎஸ் முறையிலான கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக பல தொழில்நுட்ப ஆய்வுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் தற்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் அதிகமாக இருப்பதாக புகார் வருகிறது. தற்போதைய விலை ஏற்றம் மொத்த விற்பனை விலை குறியீடு மூலமாக தான் ஏற்றப்பட்டது என்றாலும், இது நேரடியாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விலை ஏற்றத்திற்கு முன்னர் சுங்கச்சாவடிகளில் தற்போது உள்ள விலை நிர்ணயம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

Article Published On: Friday, September 1, 2023, 12:15 [IST]
English summary
Toll fees will increase at 28 toll plazas in tamil nadu from september 1
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+