ஒரு வழியா உருப்படியா ஒரு விஷயத்தை பண்ணப்போறாங்க! சுங்கசாவடிகளில் வரப்போகுதும் முக்கிய அப்டேட்!
சுங்கச்சாவடிகளில் எவ்வளவு டிராஃபிக் இருக்கிறது என்பதை ரியல் டைமில் கண்காணிப்பதற்கான புதிய கருவியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு டிராஃபிக் இருக்கிறது? விதிமுறையை மீறி அதிக டிராபிக் இருக்கிறதா என்பதை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவதில் பல்வேறு விதமான பிரச்சனைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது. முக்கியமாக நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் வாகனம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

குறைவான பயண நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அதில் பயணம் செய்யும்போது வேகமாக பயணம் செய்துவிட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாக மக்கள் பல கருதுகிறார்கள். இந்த குழப்பத்தை போக்க தான் ஃபாஸ்ட்டேக் கார்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு கூட்டம் குறைந்துள்ளது என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. தற்போதும் பல்வேறு நேரங்களில் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் உள்ள மெஷின்கள் சரியாக வேலை செய்யாதது, ஃபாஸ்ட் டேக் கார்டு சரியாக ரீசார்ஜ் செய்யாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது இருக்கிறது.

இதில் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு நேரம் வாகனம் நிற்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. மத்திய அரசின் தகவல் படி மூன்று நிமிடத்திற்கு மேல் ஒரு வாகனம் சுங்கச்சாவடியில் நிற்க கூடாது என்ற கொள்கையை வகுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் தற்போது செய்து வருகின்றன. இந்நிலையில் இப்படியாக சுங்கச்சாவடியில் நிற்கும் வாகனங்களை கண்காணிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்திய நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சாஃப்ட்வேரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி முதல் 100 சுங்கச்சாவடிகளில் இப்படியான கண்காணிப்பு சாஃப்ட்வேரை பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாஃப்ட்வேர் குறிப்பிட்ட சுங்கச்சாவடி இருக்கும் இடத்தை காட்டும்.

சுங்கசாவடி இந்தியாவில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற தகவலை கொடுக்கும். மேலும் அங்கு எவ்வளவு நீளத்திற்கு வாகனங்கள் நிற்கிறது என்ற தகவலையும் கொடுக்கும். ஒரு வாகனம் புதிதாக அங்கு வந்து அங்கு வந்து நிற்க வேண்டும் என்றால் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்ற தகவலையும் வழங்கும்.
இது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வளவு நேரம் வாகனம் நிற்கலாம்? எவ்வளவு தூரத்திற்கு வாகனத்தை காத்திருக்க வைக்கலாம் என்ற விதிமுறை இருக்கிறது. இந்த விதிமுறையை தாண்டி தற்போதைய காத்திருப்பு காலம் அல்லது வாகனத்தின் க்யூ அதிகமாக இருக்கும் போது எச்சரிக்கை வழங்கும் வகையில் இந்த சாஃப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சாஃப்ட்வேர் ஒவ்வொரு மணி நேர டிரெண்ட் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் எப்படியான டிராபிக் இருந்தது. ஒவ்வொரு மாதமும் எப்படியான டிராபிக் இருந்தது உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இதனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த டிராபிக் எப்படி என்பதை கணக்கிட்டு இந்த முறையும் அதேபோன்ற டிராபிக் வருமா என்பதையும் கணக்கிட வசதியாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல் இந்த சாஃப்ட்வேரில் குறிப்பிட்ட பகுதியில் வெப்பநிலை எப்படி இருக்கிறது என்ற தகவலையும் வழங்கும். இதன் மூலம் மழை பெய்யும் போது டிராபிக் எப்படி இருக்கிறது, அதிக வெயில் இருக்கும் போது டிராபிக் எப்படி இருக்கிறது என்பதையும் கண்காணிக்க முடியும். மேலும் உள்ளூர் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெறும் இதன் மூலம் குறிப்பிட்ட பண்டிகை வரும்போது டிராபிக் எப்படி இருக்கிறது என்பதையும் கணக்கிட வசதியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தேசிய நெடுஞ்சாலைத்துறை அனைத்திற்கு இப்படியான சாஃப்ட்வேர் நிச்சயம் தேவையாக இருக்கிறது. இதன் மூலம் டிராஃபிக் டிரெண்ட் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகளை செய்ய இது வசதியாக இருக்கும். இதன் காரணமாகவே இது சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரு நல்ல வழி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









