ரூ1000 இலவச ஃபாஸ்டேக் ரீசார்ஜ் ஆகனுமா? உடனே இதை போட்டோ எடுத்து போடுங்க!
தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் பயணிக்கும் போது சுத்தம் இல்லாத சுகாதாரமற்ற கழிவறைகளை நீங்கள் கண்ட புகார் அளித்தால் உங்களது வாகனத்தின் ஃபாஸ்ட்டேக் கார்டில் ரூ1000 வரவு வைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை கழிவறை வசதிதான். குறிப்பாக பெண்களுடன் பயணிக்கும்போது அவர்களுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாமல் திண்டாடுகிறார்கள். அப்படியே இருந்தாலும் அது சுத்தம் மற்றும் சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள கழிவறைகளில் சுத்தத்தை கண்காணிக்க புதிய யுக்தியை அரசு கையில் எடுத்துள்ளது.

இதன்படி காரில் செல்லும் பயணிகள் தங்கள் பயணத்தில் சுகாதாரமற்ற அசுத்தமான கழிவறையை கண்டறிந்து அதை ஆதாரத்துடன் புகார் அளித்தால் அவர்களது ஃபாஸ்ட்டேக் கார்டில் ரூ1000 ரீசார்ஜ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரம் இல்லாத கழிவறைகளை அரசு கண்டறிந்து அதை சுத்தம் செய்ய அறிவுறுத்தல்களை செய்யும். ஆனால் இதில் சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
இந்த ரூ1000 வழங்கும் திட்டம் அக்டோபர் 31ம்தேதிவரை மட்டும் வழங்கப்படும். இதை புகார் அளிக்க நீங்கள் ராஜ்மார்க் யாத்ரா என்ற ஆப் மூலம் மட்டுமே புகார் அளிக்க வேண்டும். இதில் உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி புகார் அளித்தால் அதில் நீங்கள் படம் எடுக்கும் போது நீங்கள் எந்த லோகேஷனில் இருந்து படம் எடுக்கிறீர்கள் எந்த தேதி மற்றும் நேரத்தில் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவல் இடம் பெறும். இப்படியான புகைப்படத்துடன் ஆதாரம் வழங்கினால் மட்டுமே அதை உறுதிசெய்ய முடியும்.

இந்த புகார் அளிக்கும் போது புகார் அளிப்பவரின் ஃபாஸ்டேக் எண், வாகன எண், செல்போன் நம்பர் எல்லாம் பதிடு செய்ய வேண்டும். இப்படியாக நீங்கள் புகைப்படம் எடுக்கும் கழிவறை தேசிய நெடுஞ்சாலை துறையால் கட்டுமானம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ள கழிவறையாக இருக்க வேண்டும். இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வர வேண்டும் அந்த கழிவறைகள் சுத்தமாக இல்லை என்றால் மட்டுமே புகார் அளிக்க முடியும். நீங்கள் நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்க், ரெஸ்டாரென்ட், தாபா பகுதகளில் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாக இல்லை என்றால் இதில் புகார் அளிக்க முடியாது.
இப்படியாக ஒரு வாகன பதிவெண்ணிற்கு ஒரு முறை மட்டுமே ரூ1000 சன்மானம் வழங்கப்படும். எத்தனை ரிப்போர்ட் வழங்கினாலும் அதிகபட்சம் ரூ1000 மட்டுமே ஒரு வாகன பதிவெண்ணிற்கு மட்டுமே வழங்கப்படும். அதே நேரம் ஒரே கழிவறையை அதிக நபர்கள் புகார் அளித்தால் முதலில் புகார் அளித்தவருக்கு மட்டுமே சன்மானம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
மேலும் ராஜ் மார்க் யாத்ரா செல்போன் செயலி மூலம் புகார் அளித்தால் மட்டுமே சன்மானம் வழங்கப்படும். இப்படியாக வழங்கப்படும் புகார்களில் உள்ள புகைப்பட ஆதாரங்கள் எடிட் செய்யப்பட்டதாகவோ அல்லது தேதி மாற்றப்பட்டதாகவோ, ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்ததாகவோ இருக்க கூடாது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக வரும் புகார்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதில் முதலில் படங்களை எல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்கப்படும். அதில் பிழையாக கண்டறியப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் அங்கேயே தானாக ரிஜெக்ட் செய்யப்படும். அடுத்ததாக அதில் பாஸ் செய்யப்படும் படங்கள் எல்லாம் மேனுவலாக கண்காணிக்கப்படும். அதில் உண்மை தன்மை கண்டறியப்பட்டவர்களுக்கே இந்த சன்மானம் வழங்கப்படும். நியாமான நபர்களுக்கு மட்டுமே சன்மானம் கிடைக்க இந்த விதிமுறையை வகுத்துள்ளனர்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன. நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது,. சாலையில் பயணிப்பவர்களுக்கு போதுமான வசதியை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கழிவறை வசதி முக்கியம் என்பதால் இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சுத்தம் இல்லாமல் இயங்கும் கழிவறைகள் கண்டறிப்பட்டு சரிய செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சுத்தமான கழிவறையை பேணுவது நமது கடமையாகும். நாம் கழிவறையை பயன்படுத்தும்போதுஅது பொது சொத்து அதை சேதப்படத்தக்ககூடாது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








