தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தெந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை முற்றிலுமாக நீக்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இது வீண் செலவை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் தான் சுங்க கட்டணங்களை செலுத்த முடியும். பணம் மூலம் செலுத்த வேண்டும் என்றால் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி விட்டார்கள்.

இந்நிலையில் நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் சுங்கச்சாவடி கடக்கும்போது அதற்கு முன்னர் பல்வேறு அறிவிப்பு பலகைகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக சுங்கச்சாவடி சுங்க கட்டணம் எவ்வளவு? சுங்கச்சாவடி உள்ள வசதிகள் என்னென்ன? உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் கொண்ட பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். இது வாகன ஓட்டிகளின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள் ஆகும். இந்த அறிவிப்பு பலகையில் முக்கியமான ஒரு அறிவிப்பு பலகை இடம் பெற்றிருக்கும்.
அதில்தான் இந்த சுங்க சாவடியில் எந்தெந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இருக்கும். பொதுவாக பிரதமர் பயணிக்கும் வாகனம், மாநில முதல்வர்கள் பயணிக்கும் வாகனம், குடியரசுத் தலைவர் பயணிக்கும் வாகனம், கவர்னர் பயணிக்கும் வாகனம், தலைமை நீதிபதிகள் பயணிக்கும் வாகனம், இப்படியான குறிப்பிட்ட சில நபர்கள் பயன்படுத்தம் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் மத்திய அரசில் தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இப்படியாக எந்தெந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என வைக்கப்பட்டுள்ள பலகையை முற்றிலுமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த பலகைகள் இருப்பதால் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், இந்த பலகைகள் பராமரிக்க அதிகமான செலவு செய்ய வேண்டியது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யார் யாருக்கெல்லாம் சுங்கச்சாவடியில் இருந்து சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளை அவர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டாம். அந்த கார்டுகளை அவர்கள் காரில் பொருத்தினால் அந்த கார் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது தானாக சுங்கச்சாவடிகள் திறந்து விடும். கட்டணம் இதுவும் கார்டிலிருந்து கழிக்கப்படாது.
இப்படியாக ஃபாஸ்ட் டேக் கார்டுகள் வழங்கப்பட்டு விட்டதால் இந்த அறிவிப்பு பலகை தேவை இல்லை என தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஒரு நபர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்லும் போது மற்றொரு கார் கட்டணம் செலுத்தாமல் சென்றால் அது குறித்து பொதுமக்களுக்கு கேள்வி எழும் என்பதால் பொதுமக்களுக்கு முன்கூட்டியே குறிப்பிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பு செய்திருந்தனர்.
தற்போது அனைத்து கார்களும் ஃபாஸ்ட் டேக் கார்டு முறையில் சுங்கச்சாவடிகளை கடக்க முடியும் என்பதால் இந்த அறிவிப்பு பலகை தேவை இல்லை என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. விரைவில் இந்த அறிவிப்பு பலகை நீக்கிவிட்டு இதற்கு பதிலாக வேறு அறிவிப்புகள் கொண்ட பலகைகள் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தேர்தல் நடப்பதால் இதை உடனடியாக அகற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் புதிய அரசு வந்தவுடன் இதற்கான உத்தரவு எல்லாம் முறையாக பெறப்பட்டு பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ ஆர்டர்கள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான முடிவுகள் மட்டுமே கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெளிநாடுகளிலும் இப்படியான சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியாக கடந்து செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் விஐபி யாக இருந்தாலும் சுங்க கட்டணம் செலுத்தி விட்டு தான் சுங்கச்சாவடியை கடந்து செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் சுங்க கட்டணம் செலுத்தியதற்கான பணத்தை அரசு திரும்ப வழங்கும் முறையை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் நபர்கள் அனைவருக்கும் தாங்கள் தாங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பது தெரியும். மேலும் கட்டணம் செலுத்த வேண்டிய நபர்களுக்கும் அது குறித்த போதிய விழிப்புணர்வு வந்துவிட்டதால் இந்த அறிவிப்பு பலகை தேவையில்லை. இதை மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசு முடிவு எடுத்தது நிச்சயம் வரவேற்கத்தக்கது.


Click it and Unblock the Notifications









