மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

ஓசூரில் தயாரிக்கப்பட்ட பைக்கை, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பயன்படுத்தி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

மிஷன் இம்பாசிபில் (Mission Impossible) திரைப்பட தொடருக்கும், ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூசுக்கும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மிஷன் இம்பாசிபில் தொடரில், இதுவரை ஆறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 7வது திரைப்படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகிறது.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

இந்த திரைப்படத்தில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) பைக்கை, டாம் க்ரூஸ் பயன்படுத்துகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவர் முக கவசம் அணிந்தபடி, பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவின.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

இந்த வரிசையில் மிஷன் இம்பாசிபில் 7 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை டாம் க்ரூஸ் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. டாம் க்ரூஸால் பயன்படுத்தப்படும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும்.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

அதுவும் தமிழ் நாட்டில் என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக், இந்திய சந்தையில் இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு தயாரிப்பாகும். பிஎம்டபிள்யூ மோட்டாராட் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

ஓசூரில் அமைந்துள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கிருந்துதான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்தந்த சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளில், 313 சிசி, வாட்டர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்மில் 34 ஹெச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது. இதன் பிஎஸ்-6 வெர்ஷன் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

இதனுடன் மற்றொரு பிரபலமான மாடலான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் (BMW G 310 R) பைக்கின் புத்தம் புதிய பிஎஸ்-6 வெர்ஷனும், இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய பைக் மாடல்களும், கடந்த அக்டோபர் 8ம் தேதிதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன.

மேட் இன் ஓசூர் பைக்கை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற நடிகர் டாம் க்ரூஸ்! கேக்கும்போதே கெத்தா இருக்கு

பிஎஸ்-4 மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த 2 புதிய மாடல்களின் விலையையும், பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. ஆனால் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட இன்ஜினுடன், 2 பைக்குகளும் புதிய அவதாரம் எடுத்துள்ளன. எனவே வரும் நாட்களில், இந்த இரண்டு பைக்குகளும் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tom Cruise Rides Hosur-Made BMW G 310 GS. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X