படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

Tom Cruise-இன் BMW கார் 'Mission: Impossible 7’ படப்பிடிப்பின்போது திருடு போகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

Tom Cruise, நம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர். தற்சமயம் ஹாலிவுட்டில் வெற்றிக்கரமான திரைப்பட தொடரான Mission: Impossible-இன் 7ஆம் பாகத்தில் நடித்துவரும் இவருக்கு தான் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

வேறொன்றும் இல்லை, அவரது BMW கார் திருடு போகியுள்ளது. அதுவும் இந்த திருட்டு அவரது Mission: Impossible படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்திருப்பதுதான் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் நிறுத்தி இருந்த கார் காணாமல் போகியிருந்தால், யாராவது ஆள் இல்லாத நேரமாக பார்த்து திருடி சென்றிருக்க வேண்டும் என நினைத்து கொள்ளலாம்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

ஆனால் படப்பிடிப்பு என்றால், எப்படி இருந்தாலும் சற்று கூட்டம் இருக்கும். இருப்பினும் எப்படியோ காரை ஆட்டை போட்டுள்ளனர். கார் மட்டுமின்றி காரின் உள்ளே சில பவுண்ட்கள் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. திருடுப்போகியுள்ள Tom Cruise-இன் BMW கார் மாடல் X7 ஆகும்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி இங்கிலாந்தில் Birmingham நகரில் உள்ள கிராண்ட் ஓட்டலிற்கு வெளியே தனது BMW X7 காரை நிறுத்திவிட்டு Tom Cruise உள்ளே சென்றுள்ளார். பிறகு நிறுத்தப்பட்டிருந்த கார் காணவில்லை என பாடிகார்ட் வந்து கூறிய பிறகு தான் நடிகருக்கு கார் திருடுப்போனது தெரியவந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

இங்கிலாந்தில் இதுகுறித்து வெளியிடப்படும் செய்திகள், திருடர்கள் ஸ்கேனரை பயன்படுத்தி சொகுசு காரின் சாவி-இல்லாத ignition fob-இல் இருந்து வெளிவரும் சிக்னலை க்ளோன் செய்து, Tom Cruise-இன் காரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர். இது திட்டமிட்டு செய்யப்பட்ட திருட்டு என்றே தோன்றுகிறது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

ஏனெனில் படப்பிடிப்பிற்காக Birmingham-க்கு வந்த Tom Cruise இந்த BMW X7 காரில் தான் நகரத்தில் உலா வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டிருக்கலாம். அல்லது கிராண்ட் ஓட்டலுக்கு இவர் வந்ததை பார்த்த பிறகு யாராவது இந்த திருட்டை அரங்கேற்றி இருக்கலாம். அல்லது Tom Cruise-இன் கார் என்று கூட தெரியாமல் இந்த கார் திருட்டு நடந்திருக்கலாம்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

எப்படியோ, காருடன் காரில் இருந்த பொருட்களும் திருடர்கள் தூக்கி சென்றனர். இந்த சொகுசு காரில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கண்காணிப்பு கருவியின் மூலம் போலீஸாரால் காரை மீட்க முடிந்துள்ளது. இருப்பினும் காருக்குள் இருந்த பொருட்களை மீட்க முடியவில்லை. கார் மீட்கப்பட்ட போதிலும், கார் திருடு போனது தெரிந்தவுடன் பாடிகார்ட்களிடம் Tom Cruise மிகவும் கோபமடைந்ததாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

மேலும் இதனை கடுமையாக விமர்சித்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவிலும் BMW X7 எஸ்யூவி விற்பனையில் உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.95.84 லட்சத்தில் இருந்து ரூ.1.64 கோடி வரையில் உள்ளன. நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த BMW எஸ்யூவி காரை ஆறு விதமான நிறத்தேர்வுகளில் பெறலாம்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

இந்த லக்சரி எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின்களும் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 340 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டீசல் என்ஜின் 265 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

இதில் பெட்ரோல் என்ஜின் தேர்வு X7 xDrive40i M Sport என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. டீசல் என்ஜின் உடன்தான் மூன்று விதமான வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இந்த லக்சரி எஸ்யூவி காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை பெட்ரோல் வேரியண்ட்டில் 6.1 வினாடிகளிலும், டீசல் வேரியண்ட்களில் 7 வினாடிகளில் எட்டிவிடலாம்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரபல நடிகரின் BMW கார் திருட்டு!! கை வரிசையை காட்டிய ‘பலே’ திருடர்கள்!

முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் BMW X7 காரில் அதிகப்பட்சமாக 6 பேர் நன்கு சவுகரியமாக அமர்ந்து செல்லலாம். இரண்டாவது இருக்கை வரிசையில் இரு கேப்டன் இருக்கைகளை கொண்ட இந்த BMW சொகுசு காருக்கு இந்தியாவில் விற்பனையில் Mercedes-Benz GLS & Volvo XC90 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tom Cruise's BMW Stolen During Filming Of 'Mission Impossible 7'.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X