ஆஸ்கர் வென்ற நடிகரின் கார் ஆசையை நிறைவேற்றிய ஒரு இளம்பெண்ணின் துணிகரம்... அபாரம்..!!
ஆஸ்கர் வென்ற நடிகரின் கார் ஆசையை நிறைவேற்றிய ஒரு இளம்பெண்ணின் துணிகரம்... அபாரம்..!!
2 முறை ஆஸ்கர் விருதுகள், உலகளவிலான புகழ், 300 பில்லியன் டாலருக்கு சொத்து என்று வாழும் பிரபல நடிகர் டாம் ஹேங்ஸ், 1970 முதல் 2000 வரை பயன்பாட்டில் இருந்த ஃபியட் 126பி காரை வாங்க ஆசைப்பட்டார். அது முடியாமல் போக, போலேந்தை சேர்ந்த அவரது தீவிர ரசிகை ஒருவர், டாம் ஹேங்ஸின் கார் கனவை பல மாத போராட்டங்களுக்கு பிறகு நிறைவேற்றியுள்ளார்.

2016 வசந்த காலத்தின் போது, நடிகர் டாம் ஹேங்ஸ் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் சென்றிருந்தார்.
அந்த நகரில் பலரும் ஃபியட் நிறுவனத்தின் ஃபியட் 126பி மாடல் காரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்றும் புடாபெஸ்ட் நகரில் எங்கு சென்றாலும் ஃபியட் 126பி கார்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்கலாம். இது டாம் ஹேங்ஸிற்கு வேடிக்கையாக இருந்தது.

இதனால் தான் செல்லும் இடங்களில் ஃபியட் 126 காரை பார்த்தால் அதனுடன் புகைப்படங்களை எடுத்து, அந்த கார் மீதுள்ள ஆசையை டாம் ஹேங்ஸ் வெளிப்படுத்திருந்தார்.

இதை பார்த்த போலேந்து நாட்டை சேர்ந்த மோனிகா ஜஸ்கோல்ஸ்கா என்ற இளம்பெண், ஃபியட் 126 மாடல் காரை டாம் ஹேங்ஸிற்கு பரிசளிக்க விரும்பினார்.

வாகன தயாரிப்பு உலகில் முன்னணி நிறுவனமாக உள்ள ஃபியட், போலேந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
குறிப்பாக ஃபியட் தயாரித்த ஃபியட் 126பி மாடல், பல போலேந்து நாட்டவர்களுக்கு பெருமையான படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video


புடாபெஸ்ட் நகரில் இருந்தபோது அவர் ஃபியட் 126பி கார் மீது ஏக்கம் கொண்டதை உணர்ந்த மோனிகா, டாம் ஹேங்ஸ் பிறந்த நாளுக்கு அந்த காரை பரிசளிக்க விரும்பினார்.
டாம் ஹேங்ஸ் கார் கனவை நிறைவேற்ற ரசிகை எடுத்த முயற்சி:

அதற்கு நிதி திரட்ட வேண்டி, நடிகர் டாம் ஹேங்ஸிற்கு கார் பரிசளிக்கும் தனது திட்டத்தை போலேந்து நாட்டிற்கே மோனிகா அறிவித்தார்.

மோனிகா ஜஸ்கோல்ஸ்காவின் இந்த திட்டத்திற்கு பலரும் ஆதரவு அளித்தனர். ஃபியட் 126 கார் வாங்குவதற்கு போதுமான நிதி மோனிகாவிற்கு வேகமாக கிடைத்தது.

இதுக்குறித்து டாம் ஹேங்ஸிற்கு தெரியவர, உடனே அவர் அமெரிக்காவில் இருந்து செல்ஃபி வீடியோ மூலம் மோனிகாவிற்கு பாராட்டுதலை தெரிவித்தார். மேலும் ஃபியட் 126 காரை ஓட்டுவதற்கு தான் ஆவலாக உள்ளதாக கூறியிருந்தார்.

டாம் ஹேங்ஸிற்கு பரிசளிக்க டர்குவைஸ் நிறத்திலான ஃபியட் 126பி கார் வாங்கப்பட்டது. அதில் சில பழுது பணிகள் பார்க்கப்பட்டு வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட பல மாத பணிகளுக்கு பிறகு புதிய தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஃபியட் 126பி கார் விரைவில் டாம் ஹேங்ஸை சென்றடையவுள்ளது.

கடந்த 26ம் தேதி போலேந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த கார்,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் வசிக்கும் டாம் ஹேங்ஸை விரைவில் சென்றடையும் என்று தெரிகிறது.

மேலும் டாம் ஹேங்ஸ் ஃபியட் 126பி காரை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளார். கார் அவரிடம் கிடைக்கும் வரை மோனிகா ஜஸ்கோல்ஸ்காவும் லாஸ் ஏஞ்சலஸில் முகாமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு டாம் ஹேங்ஸ் ஃபியட் 126 பி காரில் செல்ல வேண்டும் என போலேந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் டாம் ஹேங்ஸ் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஃபியட் 126பி கார், நாளை அவருக்கு கிடைத்து விடும் என மோனிகாஜஸ்கோல்ஸ்கா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கார் கிடைக்கப்பெற்ற பின் டாம் ஹேங்ஸ் போலேந்திற்கு வந்த தங்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் என மோனிகா ஜஸ்கோல்ஸ்காவின் குழந்தைகள் அவரை-கேட்டுக்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








