தக்காளி வித்த காசில் விவசாயி செய்த காரியம்! அத்தன பேரையும் செருப்பால அடிச்சுட்டாரு! நாடே திரும்பி பாக்குது!
இந்தியர்களின் சமையலில் தவிர்க்கவே முடியாத ஒரு காய்கறி தக்காளி (Tomato). ஆனால் சமீப காலமாக தக்காளி விலை (Tomato Price) விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. விளைச்சல் குறைவு, தேவை அதிகரிப்பு போன்றவையே இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு கிலோ தக்காளி தோராயமாக 150 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் ஒரு கிலோ 200 ரூபாய் என்ற அளவில் கூட விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் கூட, தக்காளியின் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

எனவே தக்காளி விவசாயிகள் பலர் தற்போது நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். ஒரு சில தக்காளி விவசாயிகள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிய செய்திகளையும் நாம் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற விவசாயி 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
திடீரென கிடைத்த இந்த பணத்தில் பல்வேறு செலவுகளை செய்த ராஜேஷ், கூடவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். இது வீண் செலவு என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. அத்துடன் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றும் இருக்கிறது.

விவசாயி ராஜேஷிற்கு வயது குறைவுதான். இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் அவருக்கு பெண் தேடி வருகின்றனர். ஆனால் விவசாயி என்பதால், அவருக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை இளம்பெண்களின் எதிர்பார்ப்புகள் வேறு விதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இன்றைய காலகட்டத்தில், இளம்பெண்கள் பலரும், தங்களுக்கு கணவராக வரக்கூடிய நபர் பெங்களூர் போன்ற நகரங்களில் கை நிறைய சம்பாதிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு பெண் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதே காரணத்தை கூறி, ராஜேஷையும் நிறைய பெண்கள் நிராகரித்தாக கூறப்படுகிறது.
அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டும் விதமாகதான் ராஜேஷ் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கியதில் தனது சுய மரியாதையும் அடங்கியுள்ளது என ராஜேஷ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்று எப்போது யார் பக்கம் வீசும்? என்பது நிச்சயமாக யாராலும் கணிக்க முடியாத ஒன்றுதான்.
ராஜேஷ் தற்போது வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே (Price) 14.01 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.18 லட்ச ரூபாயாக உள்ளது.
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதில் எந்த வேரியண்ட்டை ராஜேஷ் வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் அவர் வாங்கியிருப்பது, டாப் வேரியண்ட்டாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
இதில், பாதுகாப்பு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. இதுதவிர பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்படுவதும், இந்த காரின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விவசாயி ராஜேஷ் அருமையான ஒரு காரைதான் தேர்வு செய்துள்ளார். மஹிந்திரா எக்ஸ்யூவி700 சற்று விலை உயர்ந்த கார் என்றாலும் கூட, நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவேதான் அதிக காத்திருப்பு காலத்தையும் (Waiting Period) பொருட்படுத்தாமல், இந்த காரை வாங்குவதற்காக பலர் தவமாய் தவம் இருந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications