சிறந்த சேவையளிக்கும் உலகின் டாப்-10 விமான நிறுவனங்கள்!

பயணிகளுக்கு சிறப்பான சேவையளிக்கும் இந்த ஆண்டின் உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலை சர்வதேச விமான ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் 245 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, 105 நாடுகளை சேர்ந்த 18 மில்லியன் பயணிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

விமான பயண அனுபவம், பணியாளர்களின் செயல்பாடு, விமானத்தில் இருக்கைகள் சொகுசுத் தன்மை, கேபின் தூய்மை, உணவு தரம், பயண நேரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பயணிகள் அளித்த பின்னூட்டத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விமான சேவை துறையின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் முதல் 10 இடங்களை பிடித்த விமான நிறுவனங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


பட்டியல் விபரம்

பட்டியல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்-10 பட்டியலை காணலாம்.

10. லூஃப்தான்ஸா

10. லூஃப்தான்ஸா

ஜெர்மனியை சேர்ந்த லூஃப்தான்ஸா விமான நிறுவனத்துக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக விளங்கும் லூஃப்தான்ஸா ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களை சேர்ந்த 78 நாடுகளுக்கு விமான சேவையை வழங்குகிறது. இந்த நிறுவனத்திடம் 280 விமானங்கள் உள்ளன. சென்னையிலிருந்து பிராங்க்ஃப்ரட் நகரத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய விமான சேவையை அளிக்கிறது. இந்த நிறுவனத்தின் கீழ் மேலும் பல விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன.

9. எதிஹாட் ஏர்லைன்ஸ்

9. எதிஹாட் ஏர்லைன்ஸ்

அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 9-வது இடத்தில் உள்ளது. வாரத்திற்கு 1,000 விமான சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம் 96 நகரங்களுக்கு விமான சேவையை வழங்குகிறது. இந்த நிறுவனத்திடம் 85 ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளின் 4வது பெரிய விமான நிறுவனம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சென்னை, பெங்களூர் உள்பட 10 நகரங்களுக்கு விமான சேவையளிக்கிறது.

8. ஏசியானா ஏர்லைன்ஸ்

8. ஏசியானா ஏர்லைன்ஸ்

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏசியானா ஏர்லைன்ஸ் 8வது இடத்தில் உள்ளது. சியோல் ஏர்லைன்ஸ் என்று முன்னர் அழைக்கப்பட்டு தற்போது ஏசியானா ஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1988ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விமான நிறுவனம் 90 சர்வதேச நகரங்களுக்கு பயணிகள் விமான சேவையை அளிக்கிறது. இந்த நிறுவனத்திடம் ஏர்பஸ் மற்றும் போயிங் தயாரிப்புகளில் 84 விமானங்கள் உள்ளன.

 7. கருடா இந்தோனேஷியா

7. கருடா இந்தோனேஷியா

கருடா இந்தோனேஷியா நிறுவனம் ஏழாம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், சிறந்த விமான பணியாளர் சேவை கொண்ட உலகின் சிறந்த நிறுவனம் என்ற மதிப்பையும் பெற்றுள்ளது.ஜகார்த்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசிய, கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவையை வழங்குகிறது. ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் விமான சேவைகளை அளிக்கிறது. இந்த நிறுவனத்திடம் 120 விமானங்கள் உள்ளன.

 6. நிப்பான் ஏர்லைன்ஸ்

6. நிப்பான் ஏர்லைன்ஸ்

ஜப்பானிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் பட்டியலில் 6வது இடத்தை பெற்றுள்ளது. டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 32 சர்வதேச வழித்தடங்களில் 49 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. 2010ம் ஆண்டு கணக்கீட்டின்படி, இந்த நிறுவனத்தில் 33,000 பணியாளர்கள் உள்ளனர். இதன் கீழ் பல விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்திடம் 202 விமானங்கள் உள்ளன.

 5.துருக்கி ஏர்லைன்ஸ்

5.துருக்கி ஏர்லைன்ஸ்

துருக்கியை சேர்ந்த இந்த விமானம் நிறுவனம் உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் 5வது இடத்தை பெற்றுள்ளது. இஸ்தான்புல் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுழனம் ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்க நாடுகளுக்கு சேவையலிக்கிறது. உலகின் 4வது பெரிய விமான நிறுவனம் இது. ஐரோப்பாவில் 206 சர்வதேச விமான நிலையங்களிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையளிக்கிறது. இந்த நிறுவனத்திடம் 258 விமானங்கள் உள்ளன.

 4.எமிரேட்ஸ்

4.எமிரேட்ஸ்

கடந்த ஆண்டு உலகின் சிறந்த விமான நிறுவனம் என்ற பெருமையை பெற்ற துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் இந்த ஆண்டு 4வது இடத்துக்கு வந்துவிட்டது. இருப்பினும், விமானத்திற்குள் சிறந்த பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் அரசின் முதலீட்டு கழகத்தின் அங்கமான தி எமிரேட்ஸ் குழுமத்தின் கீழ் இந்த விமான நிறுவனம் செயல்படுகிறது. சர்வதேச அளவில் 78 நாடுகளில் உள்ள 142 நகரங்களுக்கு விமான சேவையளிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய விமான நிறுவனமும் இதுதான். 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் தற்போது 211 விமானங்கள் உள்ளன.

 3.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

3.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை கேந்திரமாக கொண்டு செயல்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 1947ம் ஆண்டு துவங்கப்பட்ட பாரம்பரியம் மிக்க விமான நிறுவனம். மலாயன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் முதலில் துவங்கப்பட்டு இந்த நிறுவனம் 1972ம் ஆண்டு முதல் விமான சேவையை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் 62 நகரங்களுக்கு 106 விமானங்களை கொண்டு சேவை வழங்கி வருகிறது.

 2.கத்தார் ஏர்லைன்ஸ்

2.கத்தார் ஏர்லைன்ஸ்

கத்தார் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தை பெற்றுள்ளது. 1993ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் 125 நகரங்களுக்கு சேவை அளிக்கிறது. 100 விமானங்களை கொண்டுள்ள இந்த விமான நிறுவனத்தில் 30,000 பேர் பணிபுரிகின்றனர். இதில், 17,000 பேர் நேரடியாகவும், 13,000 பேர் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

1. கத்தே பசிஃபிக் ஏர்லைன்ஸ்

1. கத்தே பசிஃபிக் ஏர்லைன்ஸ்

உலகின் மிகச்சிறந்த சேவையளிக்கும் இந்த ஆண்டின் மிகச்சிறந்த விமான நிறுவனம் என்ற பெருமையை கத்தே பசிஃபிக் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது. 1948ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 141 விமானங்கள் உள்ளன. ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த விமான நிறுவனம் சர்வதேச அளவில் 42 நாடுகளை சேர்ந்த 168 நகரங்களுக்கு விமான சேவையை வழங்குகிறது. மேலும், நான்காவது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனம் என்ற விருதை கத்தே பசிஃபிக் நிறுவனம் பெற்றுள்ளது. மிக செக்சியான சீருடைகளை வழங்குவதாக கூறி சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பெண் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம்.

குறைவான கட்டண விமான நிறுவனங்கள்

குறைவான கட்டண விமான நிறுவனங்கள்

குறைவான கட்டணத்தில் சிறந்த சேவையளிக்கும் டாப்- 10 விமான நிறுவனங்களின் பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2014, 15:09 [IST]
English summary
The Dubai-based carrier, Emirates airlines has lost the crown to Cathay Pacific Airways as the best airline in the world, a new survey reveals.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+