ஆட்டோமொபைல் உலகின் தலையெழுத்தை மாற்றிய டாப் - 10 தொழில்நுட்பங்கள்!

Written By:

இன்றைய மாடர்ன் கார்களில் இருக்கும் தொழில்நுட்பங்களும், வசதிகளும் கார் பயணங்களையும், ஓட்டுதல் முறைகளிலும் பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில், ஆட்டோமொபைல் உலகை மாற்றிய சில தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பல தசாப்தங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பங்கள், இன்றைய மாடர்ன் கார்களுக்கு இந்த தொழில்நுட்பங்கள் இன்றியமையாததாக மாறியிருப்பதை எண்ணும்போது வியப்பே மிஞ்சுகிறது. வாருங்கள், கார்களில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அந்த தொழில்நுட்பங்களை பற்றிய ஓர் ப்ளாஷ் பேக்...

01. முதல் மோட்டார் கார்

01. முதல் மோட்டார் கார்

1886ம் ஆண்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட உலகின் கார் உருவானது. கார்ல் பென்ஸ் உருவாக்கிய அந்த காருக்கு காப்புரிமையும் வழங்கப்பட்டது. நவீன யுகத்துக்கு கார்கள் மாறுவதற்கு பிள்ளையார் சுழி போட்ட மாடலாக இது குறிப்பிடப்படுகிறது. அதேசமயம், 1807ம் ஆண்டிலேயே ஹைட்ரஜனில் இயங்கும் வாகனத்தை பிராங்கோயிஸ் என்பவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

02. முதல் ஸ்டீயரிங் வீல்

02. முதல் ஸ்டீயரிங் வீல்

இன்றைய யுகத்தில் ஸ்டீயரிங் வீல் இல்லாத ஒரு மாடர்ன் காரை நினைத்து பார்க்க முடியாது அல்லவா? ஹேண்டில்பார் போன்ற அமைப்புடைய டில்லர்தான் வாகனங்களில் திருப்பும் அமைப்பாக பயன்படுத்தப்பட்டது. 1894ல் முதல்முறையாக பாரிஸ் நகரில் நடந்த ரூவன் கார் பந்தயத்தில்தான் முதல்முதலாக ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்ட கார் பயன்படுத்தப்பட்டது. ஸ்டீயரிங் வீல் தலைமுறை மேம்பாட்டை படத்தில் காணலாம்.

03. முதல் டீசல் கார்

03. முதல் டீசல் கார்

1936ல் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட உலகின் முதல் கார் மாடலாக மெர்சிடிஸ் 260D வெளியிடப்பட்டது. இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2,545சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 1940ம் ஆண்டு வரை இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டது.

Picture credit: Cawimmer430/Wiki Commons

04. ஏசி வசதி கொண்ட முதல் கார்

04. ஏசி வசதி கொண்ட முதல் கார்

1939ம் ஆண்டு பேக்கார்டு மோட்டார் கம்பெனிதான் முதல்முதலில் ஏசி வசதியுடன் கூடிய வாகனங்களை வெளியிட்டது. இந்த கார்களுக்கான ஏசி சாதனத்தை பிஷப் அன்ட் பேப்காக் அன்ட் கோ நிறுவனம் தயாரித்து கொடுத்தது.

Picture credit: Bull-Doser/Wiki Commons

05. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

05. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்

1939ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்ட கேடில்லாக் மற்றும் ஓல்ட்ஸ்மொபைல் பிராண்டு கார்களில் முதல்முறையாக ஹைட்ராமேட்டிக் என்ற அழைக்கப்பட்ட முழுதுமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

Picture credit: Sicnag/Wiki Commons

06. த்ரீ பாயின்ட் சீட் பெல்ட்

06. த்ரீ பாயின்ட் சீட் பெல்ட்

இன்று பெரும்பாலான கார்களில் முக்கிய பாதுகாப்பு அம்சமாக கருதப்படும் த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட்டை 1959ம் ஆண்டு முதல்முறையாக வால்வோ கார் நிறுவனம்தான் வெளியிட்டது. பிவி544 கார் மாடலில் இந்த சீட் பெல்ட் அறிமுகம் செய்யப்பட்டது. வால்வோ பொறியாளர் நில்ஸ் போஹ்லின்தான் கண்டுபிடித்தார். தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதியையும், இடுப்புப் பகுதியையும் முக்கோண வடிவில் இணைக்கும் விதத்தில் இந்த சீட் பெல்ட் பயன்படுகிறது. இதன்மூலம், 50 சதவீதம் அளவுக்கு உயிரிழப்புகள் குறைந்ததாகவும் வால்வோ பெருமிதம் தெரிவித்தது.

Picture credit: Niels de Wit/Wiki Commons

 07. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்

07. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்

1955ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல் கல்விங் காரில்தான் முதல்முறையாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது. பாஷ் நிறுவனத்தின் ஃப்யூவல் இன்ஜெக்டர்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் சிக்கனம், சிறந்த செயல்திறன், குறைந்த மாசு என பல விதங்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

08. டிஸ்க் பிரேக்

08. டிஸ்க் பிரேக்

1955ம் ஆண்டு சிட்ரோவன் டிஎஸ் கார் மாடலில்தான் முதல்முறையாக டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு வந்தது.

Picture credit: Ralf Roletschek/Wiki Commons

09. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

09. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இன்று இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு ஆக்சஸெரீயாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையி், 1966ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜென்சன் எஃப்எஃப் என்ற கார் மாடலில்தான் முதல்முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டது.

Picture credit: Sicnag/Wiki Commons

10. ஏர்பேக்

10. ஏர்பேக்

1951ம் ஆண்டிலிருந்து ஏர்பேக் கண்டறியப்பட்டு காப்புரிமைகள் பெறப்பட்டு வந்தாலும், 1973ம் ஆண்டுதான் காரில் ஏர்பேக் பொருத்தப்பட்டு வந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓல்ட்ஸ்மொபைல் டொர்னாடோ கார்தான் ஏர்பேக் பொருத்தப்பட்ட உலகின் முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: AlfvanBeem/Wiki Commons

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are given some greatest innovations in automobile history.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark