கார் தொடர்பான டாப் 10 உலக சாதனைகளின் பட்டியல் வெளியீடு

By Ravichandran

உலகம் முழுவதும் ஏராளமான கார் தொடர்பான சாதனைகள் நிகழ்த்தப்படுகிறது.

அதிக அளவிலான கார் ஓட்டுநர்கள், பல்வேறு விதமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இதில், மிகவும் திறன்மிக்கவர்கள் உலக சாதனைகளையும் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட முக்கியமான கார் தொடர்பான சாதனைகளை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

கார் தொடர்பான சாதனைகள்;

கார் தொடர்பான சாதனைகள்;

கார்களை கொண்டு ஏராளமான சாதனைகள் உலக அளவில் படைக்கபடுகிறது.

இதில், அதிவேகமான, மிகப்பெரிய, மிகச்சிறிய, வேகமாக நிற்ககூடிய கார்கள் உள்ளிட்ட ஏராளமான சாதனைகள் உள்ளது.

மேலும், மிக வேகமான ட்ரிஃப்ட், மிக் நீண்ட தூர ட்ரிஃப்ட் அதிகமான அளவில் நிகழ்த்தபட்ட டானட்கள் ஆகிய வெவ்வேறு விதமான சாதனைகளும் இதில் அடங்கும்.

1) மிக வேகமான ட்ரிஃப்ட் - 217.96 கிமீ;

1) மிக வேகமான ட்ரிஃப்ட் - 217.96 கிமீ;

கார் கொண்டு மிக வேகமான ட்ரிஃப்ட் செய்த சாதனை, போலாந்து நாட்டை சேர்ந்த ஜாகப் ப்ரைகான்ஸ்கி அவர்களை சேரும்.

ட்ரிஃப்ட் என்பது காரை பக்கவாட்டில் இயக்கி செல்வதாகும்.

உலகின் மிக வேகமான ட்ரிஃப்ட் ஆனது, மணிக்கு 217.96 கிலோமீட்டர் ( 135.44 மைல்) வேகத்தில் நிகழத்தபட்டது.

1000 பிஹெச்பி திறனை வெளிபடுத்தும் மறுவடிவமைக்கபட்ட டொயோட்டா ஜிடி86 கொண்டு இந்த சாதனை நிகழ்த்தபட்டது.

2) நீளமான தொடர்ச்சியான சறுக்கல் (ஸ்கிட்) - 6 மைல்;

2) நீளமான தொடர்ச்சியான சறுக்கல் (ஸ்கிட்) - 6 மைல்;

உலகின் மிக நீண்ட தூரத்திற்கான தொடர்ச்சியான சறுக்கல் (ஸ்கிட்), 6 மைல் தூரத்திற்கானதாக உள்ளது. இந்த சாதனை, அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் வேர்ல்ட் லேண்ட் ரெகார்ட் சாதனையாளரான கிரெய்க் ப்ரீட்லவ் அவர்களால் நிகழ்த்தபட்டது.

இந்த சாதனை, 1964-ஆம் ஆண்டில் போனிவில் சால்ட் ஃப்ளாட்ஸ் பகுதியில், ஸ்பிரிட் ஆஃப் அமெரிக்கா என்ற ஜெட் பவர்ட் காரில் கிரெய்க் ப்ரீட்லவ் பயணித்து கொண்டிருக்கும் அவர் ஏதேய்ச்சையாக கட்டுபாட்டை இழந்த போது நிகழ்ந்தது. இந்த சாதனை அவ்வளவு எளிதில் முறியடிக்க கூடிய சாதனை அல்ல.

3) மிக வேகமான ஸ்டாண்டிங் மைல் - 456.78 கிமீ;

3) மிக வேகமான ஸ்டாண்டிங் மைல் - 456.78 கிமீ;

உலகின் மிக வேகமான ஸ்டாண்டிங் மைல் சாதனை, அமெரிக்காவை சேர்ந்த ஜானி போஹ்மர் அவர்களால் படைக்கபட்டது. போஹ்மர் கம்பெனி, பிரத்யேகமாக பெர்ஃபார்மன்ஸ் பவர் ரேசிங்கிற்கு புகழ் பெற்றுள்ளது.

ஸ்டாண்டிங் மைல் என்பது, ஒரு கார் நின்ற நிலையில் இருந்து, ஒரு மைல் தூரத்திற்குள் எட்ட கூடிய உச்சபட்ச வேகம் ஆகும்.

ஜானி போஹ்மர், இந்த சாதனையை நிகழ்த்த 1,700 பிஹெச்பி திறனை வெளிபடுத்தும் வகையில் ட்யூன் செய்யபட்ட 2006 ஃபோர்டு ஜிடி பயன்படுத்தினார். அவர் 2006 ஃபோர்டு ஜிடி மூலம் மணிக்கு 456.78 கிலோமீட்டர் (283.23 மைல்) தான், மிக வேகமான ஸ்டாண்டிங் மைல் சாதனையாக உள்ளது.

4) மிக இறுக்கமான 360 டிகிரி சுழற்சி (ஸ்பின்) - 2.25 மீட்டர்;

4) மிக இறுக்கமான 360 டிகிரி சுழற்சி (ஸ்பின்) - 2.25 மீட்டர்;

மிக இறுக்கமான 360 டிகிரி சுழற்சிக்கான (ஸ்பின்) சாதனை, பிரிட்டனை சேர்ந்த ஸ்டண்ட் டிரைவரான அலஸ்டெய்ர் மோஃப்பாட் அவர்களுக்கு சேரும். அவர் தனது சுபரூ பிஆர்இசட் கொண்டு வெரும் 2.25 மீட்டர் அளவிலான மிக இறுக்கமான 360 டிகிரி சுழற்சி நிகழ்த்தி சாதனை படைத்தார்.

காரணத்துடன் வேண்டும் என்று 2 வரிசைகளில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அங்கு சுற்றுலும் கூடி இருந்த மக்களின் முன்னிலையில், இந்த சாதனையை அலஸ்டெய்ர் மோஃப்பாட் நிகழ்த்தி காட்டினார்.

மிக இறுக்கமான 360 டிகிரி சுழற்சிக்கான முந்தைய சாதனை 2.5 மீட்டராக இருந்தது.

5) மிக வேகமான குவார்டர் மைல் - 11.85 நொடிகள்;

5) மிக வேகமான குவார்டர் மைல் - 11.85 நொடிகள்;

எலக்ட்ரிக் கார் வழக்கமாக சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதாக உள்ளன. ஆனால், ட்ராக் ஸ்ட்ரிப் விஷயத்தில் இவை சிறந்து விளங்குகின்றன.

ஸ்டாண்டிங் மைல் என்பது, ஒரு கார் நின்ற நிலையில் இருந்து, கால் மைல் தூரத்திற்குள் எட்ட கூடிய உச்சபட்ச வேகம் ஆகும்.

உலகில் எலக்ட்ரிக் கார் மூலம் மிக வேகமான குவார்டர் மைல் சாதனை, பழைய பிஎம்டபுள்யூ எம்3 கொண்டு தான் 2012-ஆம் ஆண்டில் படைக்கபட்டது. 440 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த பிஎம்டபுள்யூ எம்3, மிக வேகமான குவார்டர் மைல் சாதனையை 11.85 நொடிகளில் எட்டியது.

இந்த பழைய பிஎம்டபுள்யூ எம்3, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 விநாடிகளில் எட்டிவிடுகிறது.

6) மிக வேகமான வீல் சேஞ்ச் - 58.43 நொடிகள்;

6) மிக வேகமான வீல் சேஞ்ச் - 58.43 நொடிகள்;

காரின் சக்கரங்களை மாற்றுவது பலருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. ஆனால், ஜெர்மனியில் உள்ள ரெய்ஃபென் உமெர்ட் என்ற சர்வீஸ் மையத்தை சேர்ந்த டெக்னீஷியன்களுக்கு இது மிக சர்வசாதாரன விஷயமாக உள்ளது.

இந்த ரெய்ஃபென் உமெர்ட்-டின் டெக்னீஷியன்கள் மேனுவல் கருவிகள் (டூல்கள்) கொண்டு, 58.43 விநாடிகளில் 4 பக்கங்களில் உள்ள சக்கரங்களையும் கழட்டி மாற்றி சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதில் காரை ஜாக் செய்வதும் அடங்கும்.

இதற்கு முன்னதாக படைக்கபட்டிருந்த சாதனையை, இந்த ரெய்ஃபென் உமெர்ட்-டின் டெக்னீஷியன்கள், கூடுதலாக 24.23 நொடிகள் வித்தியாசத்தில் செய்து முடித்தனர்.

7) ஒரேநேரத்தில் அதிகமான கார்களின் பர்ன் அவுட் - 103;

7) ஒரேநேரத்தில் அதிகமான கார்களின் பர்ன் அவுட் - 103;

ஜனவரி 1, 2015-ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் தலை நகராப கேன்பெர்ராவில் 28-வது வருடாந்திர ஸ்ட்ரீட் மிஷன் சம்மர்நேட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தான், ஒரேநேரத்தில் 103 என்ற அளவிலான மிக அதிகமான கார்களின் பர்ன் அவுட் நிகழ்த்தபட்டது.

இதே போல், 63 கார்களை கொண்டிருந்த இந்த கார்களின் படை தான், 2013-ல் ஒரேநேரத்தில் அதிகமான கார்களின் பர்ன் அவுட்-டுக்கான சாதனையை நிகழ்த்தியது.

ஜனவரி 1, 2015-ல், இதே குழு தான் தங்களின் சொந்த சாதனையை முறியடித்தனர். ஜனவரி 1, 2015-ல் நிகழ்த்தபட்ட இந்த சாதனையின் போது, சில கார்கள் பிரத்யேகமான காம்பவுண்ட்களால் ஆன டயர்களை கொண்டிருந்தது. இதனால், இந்த

கார்களில் இருந்து பல்வேறு நிறங்களில் ஆன புகை வெளியானது.

8) நீண்ட தூர ட்ரிஃப்ட் - 144.1 கிமீ;

8) நீண்ட தூர ட்ரிஃப்ட் - 144.1 கிமீ;

உலகின் மிக நீண்ட தூரத்திற்கான ட்ரிஃப்ட் ஹரால்ட் முல்லர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மிக வேகமான ட்ரிஃப்ட்டிற்கு உபயோகிக்கபட்ட அதே டொயோட்டா ஜிடி86 கார் தான் இந்த சாதனையையும் நிகழ்த்த பயன்படுத்தபட்டது.

முல்லர் இந்த டொயோட்டா ஜிடி86 காரை பக்கவாட்டில் 144.1 கிலோமீட்டர் (89.55 மைல்கள்) தூரத்திற்கு இயக்கியபடியே, சுமார் 2 1/2 மணி நேரம் கழித்தார்.

இந்த சாதனை, 2014-ல், துருக்கியில் உள்ள சாம்சன் என்ற இடத்தில் நிகழ்த்தபட்டது. இவர் சாதனை நிகழ்த்திய இந்த டிராக் 235 மீட்டர் அளவில் இருந்தது. 144.1 கிலோமீட்டர் தூரத்திற்கான மிக நீண்ட தூரத்திற்கான ட்ரிஃப்ட் சாதனையை நிகழ்த்த, முல்லர் இந்த டிராக்கில் 612 லேப்கள் (சுற்றுகள்) செய்தார்.

9) தொடர்ச்சியான டோனட்ஸ் - 280;

9) தொடர்ச்சியான டோனட்ஸ் - 280;

உலகில் தொடர்ச்சியான அதிக டோனட்ஸ் செய்ததற்கான சாதனையை பிரட்டனை சேர்ந்த ஸ்டண்ட் டிரைவர் ஜேமி மார்ரோ நிகழ்த்தினார். 280 என்ற மிக அதிக தொடர் டோனட்களுக்கான சாதனையை வெஸ்ட்ஃபீல்ட் ஸ்போர்ட் 1600 என்ற காரை கொண்டு ஜேமி மார்ரோ நிகழ்த்தினார்.

டோனட் என்பது, ஒரு கார் அது இருக்கும் இடத்தில் இருந்தே மேற்கொள்ளும் 360 டிகிரி சுழற்சிகளை குறிக்கிறது.

ஜேமி மார்ரோ, அவர் உபயோகித்த காரின் டயர்களை 280 டோனட்களுக்கு இயக்கி தேயவிட்டார்.

முன்னதாக, மற்றொரு பிரிட்டன் ஸ்டண்ட் டிரைவர் டெர்ரி கிராண்ட் என்பவர் 161 டோனட்கள் செய்திருந்த சாதனையை ஜேமி மார்ரோ முறியடித்தார்.

10) மிக இறுக்கமான பேரலல் பார்க்கிங் - 7.5 செ.மீ;

10) மிக இறுக்கமான பேரலல் பார்க்கிங் - 7.5 செ.மீ;

உலக அளவில் மிக இறுக்கமான பேரலல் பார்க்கிங் செய்ததற்கான சாதனையும் பிரிட்டனின் ஸ்டண்ட் டிரைவரான ஸ்டண்ட் டிரைவரான அலஸ்டெய்ர் மோஃப்பாட் அவர்களுக்கே சேரும்.

முன்னதாக, சீனாவை சேர்ந்த ஹான் யூ என்பவர் மிக இறுக்கமான பேரலல் பார்க்கிங்கிற்கான சாதனையை 8 சென்டிமீட்டர் என்ற குறுகிய இடத்தில் நிகழ்த்தினார்.

பிரிட்டனின் ஸ்டண்ட் டிரைவரான ஸ்டண்ட் டிரைவரான அலஸ்டெய்ர் மோஃப்பாட் ஃபியட் 500சி மாடல் காரை, வெரும் 7.5 சென்டிமீட்டர் என்ற மிக குறுகிய இடத்தில் நிலை நிறுத்தி உலகின் மிக இறுக்கமான பேரலல் பார்க்கிங்கிற்கான சாதனையை படைத்தார்.

வாசகர்கள் அதிகம் படித்த செய்திகள்;

வாசகர்கள் அதிகம் படித்த செய்திகள்;

சிந்தனைக்கும், சிரிப்புக்கும் விருந்தான சாலை எச்சரிக்கை பலகைகள்!

கோடையை வெல்ல கூல் ஐடியா... டூ வீலர்களுக்கான விசேஷ குடைகள்!

வாசகர்கள் அதிகம் படித்த செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Cars hold countless World Records around the world. There are many Cars, which holds the records for being fastest, quickest, biggest, smallest, and even which stops the fastest. Some records includes the fastest drift, the longest drift and the most donuts performed. Here are Top 10 Amazing Car World Records from around the Globe. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X