ஒரு கார் கூட இந்த ஊர்ல கிடையாது! இப்படிப்பட்ட ஊரைபத்தி கேள்விபட்டிருக்கீங்களா? காரணம் என்ன தெரியுமா?

உலகின் சில நாடுகளில் மட்டும் கார்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? கார்களுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? கார்களால் என்ன பிரச்சனை ஏற்பட்டு விடப் போகிறது. இப்படி தடை விதித்த நாடுகள் எது? விரிவாகக் காணலாம்

கார்கள் இந்த உலகின் முக்கியமான போக்குவரத்து வாகனம், ஒரு மனிதன் ஒரு இடத்திலிருந்த மற்றொரு இடத்திற்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும், சொகுசாகவும் பயணிக்க ஏற்ற வாகனம் கார் தான். கடந்த 100 ஆண்டுகளில் கார்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் சில நாடுகள்/கிராமங்களில் கார்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். அதன் பட்டியல் இதோ...

cars banned places in earth

இஸ்லா ஹோல்பாக்ஸ் - மெக்ஸிக்கோ: இது ஒரு சிறிய தீவு இங்கு ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இங்கு குடியிருப்பு பகுதி சிறிய இடத்தில் இருப்பதால் இங்கு எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்ல வேண்டும். சிறிய பகுதி என்பதால் கார் பயன்பாடு இங்குத் தேவையிருக்காது. காருக்கு எரிபொருள் போடும் வசதி கூட இந்த தீவில் கிடையாது.

ஸார்மேட்- சுவிட்சர்லாந்து: இது மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள கிராமம், சிறிய இடம் என்பதால் இங்கு வீடுகள் நெருக்கடியாகக் கட்டப்பட்டிருக்கும். கார்கள் செல்லும் அளவிற்குச் சாலை வசதி கிடையாது. ஆனால் இது ஹைக்கிங், கிளைம்பிங் போன்ற விஷயங்களுக்குப் பிரபலமான இடம் என்பதால் இங்குச் சுற்றலா பயணிகள் ரயில் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் வந்து செல்கின்றனர்.

cars banned places in earth

இஸ்லாஸ் சீஸ்- ஸ்பெயின்: இது ஸ்பெயின் கடல் பகுதியில் அமைந்துள்ளது ஒரு தீவாகும். இங்குத் தினமும் சராசரியாக 1800 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த தீவிற்குச் செல்ல படகு மட்டும்தான் ஒரே வழி, இங்கு கார்கள் பயணிக்கும் அளவிற்கு வசதிகள் கிடையாது. இதனால் படகில் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தீவு முழுவதும் நடந்து தான் செல்ல வேண்டும்.

ஃபயர் ஐலேண்ட்-நியூயார்க்: நியூயார்க் படு பிஸியான நகரம் அங்கு உலகின் சிறந்த கார்கள் எல்லாம் கூட இயங்கி வருகிறது. அங்கிருந்து கடல் வழியாக சில மணி நேரப் பயணத்தில் தான் இந்த ஃபயர் ஐலேண்ட் தீவு இருக்கிறது. இந்த தீவில் கார்களுக்கு அனுமதியில்லை. ஆனால் பைக்குகள், மற்றும் ஹைக்கர்களுக்கு பிடித்த இடம் இது. இதன் நிலப்பரப்பு கார் பயன்பாட்டிற்கு ஏற்றது இல்லை.

cars banned places in earth

கீத்ரோன் - நெதர்லாந்து : வெனீஸ் நகரம் போல இந்த கீத்ரோன் நகரமும் தண்ணீரால் சூழ்ந்திருக்கும் பகுதி. இங்கு நடந்து செல்ல பாதையிருக்கும் அங்கு மக்கள் சைக்கிளில் செல்ல அனுமதியிருக்கிறது. நீண்ட தூரப்பயணம் என்றால் படகில் தான் பயணிக்க வேண்டும். இங்கு கார்களுக்கு அனுமதி கிடையாது.

லாமு - கென்யா: இதுவும் ஒரு தீவு பகுதிதான். இங்கு இடம் குறைவாக இருப்பதால் நெருக்கம் நெருக்கமாக மக்கள் வீடுகளைக் கட்டி வாழ்கின்றனர். இதனால் இங்குத் தெருக்கள் மிகக் குறுகலாக இருக்கும். இந்த குறுகலா தெருக்களுக்குள் மக்கள் பயணிக்கக் கழுதைகளைப் பயன்படுத்துகின்றனர். கழுதை மீது ஏறித் தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கின்றனர்.

சிவிடா டி பாங்நோரிகியோ - இத்தாலி: ஃபெராரி என்ற பிராண்ட் இங்கிருந்து தான் உருவானது. இது ஒரு மலை மீது இருக்கும் கிராமம். இந்த கிராமத்திற்குள் செல்ல ஒரு சிறிய நடை பாலம் மட்டுமே இருக்கிறது. இதனால் இந்த கிராமத்திற்குள் காரை எடுத்துச் செல்வது என்பது முடியாத காரியம். இதனால் இந்த கிராமத்திற்குள் கார்களே கிடையாது.

ஹாலிபட்கோவ் - அலாஸ்கா: இது அலாஸ்கா நகரின் ஒரு தனித்து விடப்பட்ட நகரம். இங்கு தற்போது வெறும் 90 பேர் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரைச் சுற்றி வர அவர்களுக்கு கார் எல்லாம் தேவையில்லை அதனால் அந்த கிராமத்தில் தற்போது வரை கார்களே கிடையாது.

லாம்மா தீவு - ஹாங்காங்: இது ஹாங்காங்கிலிருந்து மிக அருகில் உள்ள தீவு தான் இங்கு ஸ்கை ஸ்கேப்பர்கள், நியான் லைட்டிங்கிற்கு பிரபலமான இடம். இந்த பகுதியின் பசுமையைப் பாதுகாக்க இங்கு கார்களுக்கு தடை விதித்துள்ளனர். மலைகளும், பீச்களும் இங்கு ஒரே இடத்தில் காண முடியும்.

சார்க் - கேனல் தீவுகள்: இது கேனல் தீவுகளில் உள்ள ஒரு குட்டி தீவாகும். இங்குப் படகு மூலம் மட்டும் தான் செல்ல முடியும். இந்த தீவிற்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதிகளும் கிடையாது. இந்த தீவில் கார்கள் கிடையாது. கார்கள் மட்டுமல்ல இந்த தீவில் தெரு விளக்குகளே இல்லை.

Article Published On: Thursday, May 11, 2023, 12:40 [IST]
English summary
Top 10 cars banned places in earth all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X