உலகின் டாப் 10 எலக்ட்ரிக் கார்கள்... மஹிந்திரா இ2ஓ.,வுக்கும் இடமுண்டு!!

Written By:

அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக, புதிய வகை மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த முயற்சிகளுக்கு தற்போதைக்கு பெரும் தீர்வாக கருதப்படுவது எலக்ட்ரிக் கார்கள்தான். மேலும், எதிர்கால போக்குவரத்தில் எலக்ட்ரிக் கார்கள்தான் மிக முக்கிய சாதனமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் முன்னோடியாக விளங்கும் உலகின் டாப் 10 எலக்ட்ரிக் கார் மாடல்களின் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

01. மஹிந்திரா இ2ஓ

01. மஹிந்திரா இ2ஓ

நம் நாட்டு மார்க்கெட்டில் இப்போது விற்பனையில் இருக்கும் ஒரே எலக்ட்ரிக் கார் மாடல் மஹிந்திரா இ2ஓ.,தான். 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இடவசதியுடன் மிகச்சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட எலக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையையும் பதிவு செய்துவிட்டது. ரேவா- ஐ எலக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் விற்பனையில் இருக்கிறது. காரின் ஏசி.,யை ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க முடியும்.

02. நிசான் லீஃப்

02. நிசான் லீஃப்

உலகின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார் மாடல். இதுவரை உலக அளவில் 2 லட்சம் நிசான் லீஃப் கார்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 170 கிமீ தூரம் பயணிக்க முடியும் என்பதுதான் இதன் முக்கிய பலம். சிறப்பான இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டது.

03. பிஎம்டபிள்யூ ஐ3

03. பிஎம்டபிள்யூ ஐ3

எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் நுழைவதற்காக பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம் உருவாக்கிய முதல் மாடல். பிஎம்டபிள்யூ ஐ3யின் முழுமையான எலக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை செல்லும். ஸ்கூட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மற்றொரு ஹைபிரிட் மாடல் 300 கிமீ தூரம் வரை செல்வதற்கான வசதியை கொண்டது.

04. ஃபியட் 500 எலக்ட்ரிக்

04. ஃபியட் 500 எலக்ட்ரிக்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் ஒரேகானில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பழமையான டிசைன் கொண்ட ஒரு புதிய எலக்ட்ரிக் கார் மாடல் இது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 138 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

05. ஃபோக்ஸ்வேகன் அப்

05. ஃபோக்ஸ்வேகன் அப்

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மார்க்கெட் சூடுபிடிக்கும்போது, நிச்சயம் இந்த எலக்ட்ரிக் கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தும். ஃபோக்ஸ்வேகன் அப் காரின் எலக்ட்ரிக் மாடலின் லித்தியம் அயான் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

06. தெஸ்லா மாடல் எஸ்

06. தெஸ்லா மாடல் எஸ்

நவீன தொழில்நுட்ப வசதிகள், ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறன் கொண்ட மின்மோட்டார்களுடன் உலகின் கவனத்தை ஈர்த்த எலக்ட்ரிக் செடான் கார் மாடல். இதில் இருக்கும் 85 கிலோவாட் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்ல முடியும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும். இந்தியாவில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு இப்போதே ஆய்வு மற்றும் ஆயத்தப் பணிகளை தெஸ்லா மோட்டார்ஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

07. ஃபோர்டு ஃபோகஸ் எலக்ட்ரிக்

07. ஃபோர்டு ஃபோகஸ் எலக்ட்ரிக்

ஃபோர்டு ஃபோகஸ் காரின் எலக்ட்ரிக் மாடலின் மிக முக்கிய அம்சம் சிறப்பான இடவசதியை வழங்குவதாகம். பேட்டரி மற்றும் இதர பாகங்கள் மிக குறைவான இடத்தில் லாவகமாக அடைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 122 கிமீ தூரம் பயணிக்க முடியும். எதிர்காலத்தில் இந்தியாவிற்கு தேவை எனும்போது ஃபோர்டு பரிசீலிக்கும் மாடலாக கூறலாம்.

08. பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கூபே எலக்ட்ரிக்

08. பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கூபே எலக்ட்ரிக்

கடந்த 2013ல் லிமிடேட் எடிசனாக பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கூபே ஸ்போர்ட்ஸ் காரின் எலக்ட்ரிக் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் 552கிலோவாட் மின் மோட்டார்கள் இருக்கின்றன. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடும். ஃபார்முலா ஒன் கார் வடிவமைப்பு நிபுணர்களை பணியமர்த்தி இந்த எலக்ட்ரிக் காரை வடிவமைத்தது மெர்சிடிஸ் பென்ஸ்.

09. செவர்லே ஸ்பார்க் எலக்ட்ரிக்

09. செவர்லே ஸ்பார்க் எலக்ட்ரிக்

இந்தியாவில் செவர்லே பீட் என்ற பெயரிலான மாடல் வெளிநாடுகளில் ஸ்பார்க் என்ற பெயரில் விற்பனையாகிறது. செவர்லே பீட் காரின் எலக்ட்ரிக் மாடலும், சரியான விலையிலான எலக்ட்ரிக் மாடலாக இருக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 131 கிமீ வரை பயணிக்க முடியும். இந்தியாவில் எலக்ட்ரிக் கார் இருந்தால்தான் ஓட்ட முடியும் என்ற நிலை வரும்போது, இந்த காரை யோசிக்காமல் கொண்டு வந்து இறக்கிவிடும் ஜெனரல் மோட்டார்ஸ்.

10. பென்ஸ் பி கிளாஸ் எலக்ட்ரிக்

10. பென்ஸ் பி கிளாஸ் எலக்ட்ரிக்

ஆரம்ப ரக சொகுசு கார் மாடலான பி கிளாஸ் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனும் பிஎம்டபிள்யூ ஐ3 காருக்கு இணையான விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிலைநிறுத்தியது. இந்த காரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்தியாவிற்கு அவசியம் ஏற்படும்போது, இந்த காரை உடனடியாக அறிமுகம் செய்வதற்கான முடிவை மெர்சிடிஸ் பென்ஸ் தயங்காமல் எடுக்க முடியும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are the details of top 8 electric vehicles in the world.
Story first published: Friday, July 3, 2015, 14:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark