இந்தியாவின் டாப் 10 அதிவேக ரயில்கள்- புதிய பட்டியல்!

By Saravana

பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட நம் நாட்டின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீண்ட தூர பயணங்களுக்கு சுகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதப்படுவது ரயில் பயணங்களே. இந்த நிலையில், ரயில்களின் வேகத்தை வெகுவாக உயர்த்துவதற்கான முயற்சிகளையும், திட்டங்களையும் ரயில்வே துறை தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.

இந்தநிலையில், மணிக்கு 160 கிமீ வேகம் வரை தொடக்கூடிய புதிய கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமைக்குரிய இந்த ரயில் டெல்லி- ஆக்ரா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதேபோன்று, விரைவான பயணத்தை வழங்கும் இந்தியாவின் டாப் 10 அதிவேக ரயில்கள் குறித்த பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

10. நிஜாமுதீன் - பந்த்ரா கரீப் ரதம்

10. நிஜாமுதீன் - பந்த்ரா கரீப் ரதம்

ஏழைகள் ரதம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறைவான கட்டணத்தில் மிக விரைவான, சொகுசான பயணத்தை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியிலுள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து மும்பையிலுள்ள பந்த்ராவிற்கு இயக்கப்படும் ஏழைகள் ரதம் இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாக விளங்குவதுடன், டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை பிடிக்கிறது.

வேகம்

வேகம்

நிஜாமுதீன்- பந்த்ரா இடையிலான கரீப் ரதம் ரயில் மணிக்கு 130 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. டெல்லி- மும்பை இடையிலான 1,366 கிமீ தூரத்தை 16 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 81.96 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

09. சீல்டா- புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

09. சீல்டா- புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள சீல்டாவிலிருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியாவின் மிக அதிவேகமான ரயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த வழித்தடத்தில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடுத்து, அதிவேகமான ரயி்ல என்ற பெருமை இந்த ரயிலுக்கு உண்டு.

வேகம்

வேகம்

இந்த ராஜ்தானி ரயில் 12313/12314 என்ற எண்களில் இருவழியிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் WAP - 7 மின்சார எஞ்சின் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 83.0 கிமீ வேகத்தில் செல்கிறது. சீல்டா- புதுடெல்லி இடையிலான தூரத்தை 17 மணிநேரம் 30 நிமிடங்களில் அடைகிறது.

08. புதுடெல்லி- அலகாபாத் துரந்தோ எக்ஸ்பிரஸ்

08. புதுடெல்லி- அலகாபாத் துரந்தோ எக்ஸ்பிரஸ்

கடந்த 2012ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில், புதுடெல்லி- அலகாபாத் இடையிலான தடத்தில் அதிவேக ரயிலாக இயக்கப்படுகிறது.

வேகம்

வேகம்

புதுடெல்லி- அலகாபாத் இடையிலான இந்த ரயில் சராசரியாக மணிக்கு 86.85 கிமீ வேகத்தில் செல்கிறது. புதுடெல்லி- அலகாபாத் இடையிலான தூரத்தை 19 மணி நேரம் 20 நிமிடங்களில் கடக்கிறது.

07. புதுடெல்லி- ஹவுரா துரந்தோ ரயில்

07. புதுடெல்லி- ஹவுரா துரந்தோ ரயில்

தலைநகர் டெல்லியையும், கொல்கத்தாவையும் இணைக்கும் இந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் இந்த வழித்தடத்தில் இடைநில்லாமல் செல்லும் ரயிலாக இருக்கிறது. டிரைவர் மாறுதல் மற்றும் உணவு பொருட்களை ஏற்றும் பொருட்டு நிறுத்தம் செய்யப்படுவதுடன் சரி.

வேகம்

வேகம்

இந்த ரயிலின் மிக முக்கிய சிறப்பம்சம், அனைத்தும் நவீன ஹைபிரிட் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இரு நகரங்களுக்கும் இடையிலான 1,441 கிமீ தூரத்தை 17 மணிநேரம் 10 நிமிடங்களில் கடக்கிறது. சராசரியாக மணிக்கு 87.06 கிமீ வேகத்தில் செல்கிறது.

06. புதுடெல்லி- கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

06. புதுடெல்லி- கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

இந்தியாவின் முதல் ராஜ்தானி ரயில் என்ற பெருமை இந்த ரயிலுக்கு உண்டு. கடந்த 1969ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு ராஜ்தானி ரயில்களிலேயே அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் ரயிலாக குறிப்பிடப்படுகிறது.

வேகம்

வேகம்

புதுடெல்லி- கொல்கத்தா இடையிலான 1,445 கிமீ தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் கடக்கிறது. சராசரியாக மணிக்கு 88.21 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் ரயில் என்று நாம் முந்தைய ஸ்லைடில் குறிப்பிட்டது போன்று, வைஃபை இன்டர்நெட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் என்ற பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு.

05. புதுடெல்லி - கான்பூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்

05. புதுடெல்லி - கான்பூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி- கான்பூர் ரிவர்ஸ் சதாப்தி ரயில் இந்தியாவின் அதிவேக ரயில்களில் 5வது இடத்தை பிடிக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் இந்த ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது.

வேகம்

வேகம்

பயணிகள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, இந்த புதிய சதாப்தி ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. புதுடெல்லி- கான்பூர் இடையிலான 441 கிமீ தூரத்தை இந்த ரயில் 4 மணி 44 நிமிடங்களில் கடக்கிறது. இந்த ரயில் சராசரியாக மணிக்கு 89.63 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

04. சீல்டா- புதுடெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ்

04. சீல்டா- புதுடெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ்

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் இந்த ரயில் இடைநில்லா எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில் என்ற பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு.

வேகம்

வேகம்

இந்த ரயில் மணிக்கு 91.13 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

03. புதுடெல்லி- மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

03. புதுடெல்லி- மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

கடந்த 1972ம் ஆண்டு இந்த ராஜ்தானி ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் என்ற பெருமைக்குரியது.

வேகம்

வேகம்

இரு நகரங்களுக்கு இடையிலான 1,385 கிமீ வேகத்தை 19 மணி 5 நிமிடங்களில் கடந்தது. ஆனால், சமீபத்தில் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டதால், தற்போது 15 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. சராசரியாக மணிக்கு 91.46 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

02. புதுடெல்லி- போபால் சதாப்தி

02. புதுடெல்லி- போபால் சதாப்தி

கடந்த மாத இறுதி வரை இந்த ரயில்தான் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருந்து. ஆனால், கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததற்கு பின்னர், இது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

வேகம்

வேகம்

கடந்த 1988ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில் சராசரியாக மணிக்கு 91 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. இரு நகரங்களுக்கு இடையிலான 701 கிமீ தூரத்தை 8 மணி 5 நிமிடங்களில் கடக்கிறது. அதிகபட்சமாக 150 கிமீ வேகம் வரை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

01. கதிமான் எக்ஸ்பிரஸ்

01. கதிமான் எக்ஸ்பிரஸ்

டெல்லி- ஆக்ரா இடையில் இயக்கப்படும் இந்த ரயில்தான் இந்தியாவின் தற்போதைய அதிவேக ரயிலாக இருக்கிறது. இரு நகரங்களுக்கு இடையிலான 200 கிமீ தூரத்தை 105 நிமிடங்களில் கடக்கிறது. சதாப்தி ரயில்களைவிட இந்த ரயிலில் பயணக்கட்டணம் 25 சதவீதம் கூடுதலாகும்.

வேகம்

வேகம்

இந்த ரயிலில் நவீன கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 12 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்கிறது. சராசரியாக மணிக்கு 113 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

உலகின் டாப் 10 அதிவேக ரயில்கள்!

உலகின் டாப் 10 அதிவேக ரயில்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 fastest trains in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X