காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பெறக்கூடிய முக்கிய வசதிகள்!

Written By:

கார்கள் இப்போது பல நவீன வசதிகளுடன் அறிமுகமாகி வருகின்றன. அதில், மிக முக்கிய அம்சமாக இப்போது இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்படுகிறது. விலை உயர்ந்த கார்களில் மட்டுமே கிடைக்கப்பெற்ற இந்த வசதி தற்போது பட்ஜெட் மாடல்களில் சர்வசாதாரணமாக புழக்கத்திற்கு வந்துவிட்டது.

காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பெறும் வசதிகள்!

சிலர் பட்ஜெட்டை கருதி விலை குறைவான வேரியண்ட்டை தேர்வு செய்யும்போது இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில், இன்ஃபோடெயின்மென்ட் அவசியத்தை உணர்ந்து கொள்ளும் விதத்தில், அதனால் கிடைக்கப்பெறும் 10 முக்கிய வசதிகளை இந்த செய்தியில் கொடுத்து இருக்கிறோம்.

Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark
ஸ்மார்ட்போன் இணைப்பு

ஸ்மார்ட்போன் இணைப்பு

புளூடூத் தொடர்பு மூலமாக உங்களது ஸ்மார்ட்போனை காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். முதல்முறை மட்டுமே இணைத்துவிட்டால், புளூடூத் ஆன் செய்திருந்தால் தானாகவே இரு சாதனங்களும் இணைப்பில் இருக்கும். இதன்மூலமாக ஸ்மார்ட்போனில் இருக்கும் மியூசிக் பைல்களை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக இயக்க முடியும்.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பு வசதி

ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பு வசதி

புளூடூத் இணைக்கப்பட்ட பின்னர் உங்களது மொபைல்போனிற்கு வரும் அழைப்புகளை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் வழியாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியில் பேச முடியும். கார் ஸ்பீக்கர் மூலமாக எதிரில் பேசுவரின் குரலை கேட்கலாம். இதனால், ஓட்டுனர் கவனச் சிதறலை தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது.

வாய்ஸ் கமாண்ட்

வாய்ஸ் கமாண்ட்

குரல் மொழி உத்தரவு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள பல்வேறு வசதிகளை இயக்க முடியும். மியூசிக் சிஸ்டத்தின் சப்தத்தை கூட்டி, குறைப்பதற்கு வாய்மொழி உத்தரவு போதுமானது. சாலையில் இருந்து கவனம் பிறழாமல் நேவிகேஷன் சிஸ்டத்தில் வழித்தடத்தை மாற்ற முடியும்.

Trending On DriveSpark Tamil:

பட்டபகலில் கத்தி முனையில் உரிமையாளரை மிரட்டி பஜாஜ் டோமினார் பைக்கை பறித்து சென்ற மர்ம நபர்கள்..!

பைக்கில் வந்தர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

 நேவிகேஷன் வசதி

நேவிகேஷன் வசதி

செல்ல வேண்டிய இடத்தை துல்லியமாக தரும் வழிகாட்டும் வசதியையும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்கள் தருகின்றன. குரல் வழிகாட்டும் வசதியும், திரை மூலமாக வழித்தடத்தை காட்டும் வசதியும் உள்ளது.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

யுஎஸ்பி போர்ட் மூலமாக பென் டிரைவில் உள்ள மியூசிக் பைல்களையும், ஸ்மார்ட்போனில் உள்ள உங்களுக்கு விருப்பமான பாடல்களை காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக கேட்க முடியும். மிக எளிமையான வழியாக இருக்கும்.

ரிவர்ஸ் கேமரா

ரிவர்ஸ் கேமரா

ரிவர்ஸ் கேமராவுக்கான திரையாகவும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுகிறது. இதனால், தனியாக ரிவர்ஸ் கேமராவுக்கான திரை தேவைப்படாது.

மிரர் லிங்க்

மிரர் லிங்க்

மிரர் லிங்க் என்ற வசதி மூலமாக ஸ்மார்ட்போனை இணைத்துக் கொண்டால் அதிலுள்ள அனைத்து வசதிகளையும் நீங்கள் பெற முடியும். கூகுள் மேப், மியூசிக் ஃபைல்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களையும் கூட நீங்கள் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக இயக்க முடியும்.

பிரத்யேக அப்ளிகேஷன்கள்

பிரத்யேக அப்ளிகேஷன்கள்

கார் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திற்காகவே ஆப்பிள் நிறுவனம் கார் ப்ளே என்ற அப்ளிகேஷனையும், கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனையும் வழங்குகின்றன. கார் ஓட்டுனர்களின் கவனச் சிதறலை குறைக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

Trending On DriveSpark Tamil:

இந்தியாவில் அம்பாஸிடர் காரை மீண்டும் அறிமுகம் செய்யும் முடிவில் பீஜோ..!!

மின்சார கார்கள் விலை குறைவாக இருக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்: மாருதி சுஸுகி எச்சரிக்கை..!!

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பன்டோரா, ஐஹார்ட்ரேடியோ, ஸ்டிச்சர், ஆஹா, ஸ்போட்டிஃபை, ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் மேப் உள்ளிட்ட பல்வேறு அப்ளிகேஷனை பதிவு செய்து பயன்படுத்த முடியும். கார் இயங்கும்போது இந்த அப்ளிகேஷன்கள் தானாக ஆஃப் ஆகிவிடும்.

கார் தகவல்கள்

கார் தகவல்கள்

கார் பற்றிய பல்வேறு தகவல்களையும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

 தொடுதிரை

தொடுதிரை

தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சாதனங்கள் வருவதால் இயக்குவது எளிதாக இருக்கின்றன. இதுவும் மிகச் சிறப்பான அம்சமாக கூற முடியும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 Features Of Car Infotainment System.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark