உலகின் 10 சிறந்த கார் எஞ்சின்கள் பற்றிய விபரங்கள்!

Posted By:

கார் வாங்கும்போது டிசைனை எந்தளவு ரசித்து, ருசித்து பார்த்து வாங்குகிறோமோ, அந்தளவு எஞ்சின் குறித்த தகவல்களையும் மிக கவனமாக பார்க்கிறோம். ஆனால், சிலர் டிசைனை கூட பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அதன் எஞ்சினின் தொழில்நுட்பம், நீடித்த உழைப்பு, நம்பகத்தன்மை இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தே சிலர் காரை தேர்வு செய்கின்றனர்.

ஏனெனில், ஒவ்வொரு காரின் ஆயுள் காலத்தை நிர்ணயிப்பதிலும், பிரச்னை இல்லாத பயணத்தை வழங்குவதிலும் கார் எஞ்சின்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், கார் நிறுவனங்கள் தயாரித்த உலகின் மிகச்சிறந்ததாக பெயர் பெற்ற டாப் 10 எஞ்சின்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

ஃபோர்டு ஈக்கோபூஸ்ட்

ஃபோர்டு ஈக்கோபூஸ்ட்

நவீன தலைமுறைக்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்களுடன், அடக்கமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட எஞ்சின்தான் இது. அதிக சக்திவாய்ந்த எஞ்சின்களுக்கு இணையான சக்தி, சிறிய கார் எஞ்சின் போன்ற மைலேஜ், செயல்திறன் என அனைத்திலும் ஆட்டோமொபைல் துறையினரால் போற்றப்படுகிறது. ஒரு ஏ4 சைஸ் பேப்பர் அளவுக்கு அடக்கமான வடிவமைப்பை கொண்டது. இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் வாடிக்கையாளர்களிடம் பெற்ற வரவேற்பை ஏற்கனவே செய்தியாக வழங்கியிருக்கிறோம். உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகேன் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின்

ஃபோக்ஸ்வேகேன் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின்

ஜெர்மன் எஞ்சினியரிங் என்ற சொல்லுக்கு உத்திரவாதம் அளிக்க வல்ல தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டது. 4 சிலிண்டர்கள் கொண்டதாகவும், டர்போசார்ஜர் துணையுடன் மிகச்சிறப்பான செயல்திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினாக போற்றப்படுகிறது. அதிக செயல்திறன் கொண்ட கார்களை விரும்புவர்களுக்கு சிறந்த சாய்ஸாக கூறப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஆர் காரில் இருக்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 300 குதிரைசக்தி திறனை வெளிக்கொணரும் தன்மை கொண்டது.

 மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 2.0 லி எஞ்சின்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 2.0 லி எஞ்சின்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் வகையறாக்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டின் சிஎல்ஏ45 ஏஎம்ஜி, ஜிஎல்ஏ45 ஏஎம்ஜி மாடல்களில் இடம்பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 355 குதிரைசக்தி திறனையும், 450என்எம் முறுக்கு விசையையும் வாரி வழங்கும். உலகின் சிறந்த எஞ்சின்களில் ஒன்றாக ஆட்டோமொபைல் துறையினரால் கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எம் ட்வின்பவர் 3.0 லி எஞ்சின்

பிஎம்டபிள்யூ எம் ட்வின்பவர் 3.0 லி எஞ்சின்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் ரக பெர்ஃபார்மென்ஸ் கார் மாடல்களில் இடம்பெற்றிருக்கும் எஞ்சின் இது. 6 சிலிண்டர்களுடன் கூடிய இரட்டை டர்போசார்ஜர் கொண்ட இந்த 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎம்டபிள்யூ எம்3 மற்றும் எம்4 கார்களில் இடம்பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 431 குதிரைசக்தி திறனையும், 550என்எம் முறுக்கு விசையையும் வழங்கும். இதன் ரகத்தில் சிறந்த மைலேஜை வழங்கும் எஞ்சினாகவும் புகழ்பாடப்படுகிறது.

போர்ஷே ப்ளாட் சிக்ஸ் எஞ்சின்

போர்ஷே ப்ளாட் சிக்ஸ் எஞ்சின்

பின்புற எஞ்சின் கொண்ட போர்ஷே கார்களில் இடம்பெறும் ப்ளாட் சிக்ஸ் எஞ்சினும் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினரால் சிலாகித்து கூறப்படும் எஞ்சின். போர்ஷே 911 ஜிடி3 மற்றும் 911 ஜிடி3 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார்களில் இடம்பெற்றிருக்கிறது. பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.

ஃபெராரி 3.9 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின்

ஃபெராரி 3.9 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின்

ஃபெராரி நிறுவனம் உருவாக்கிய வெற்றிகரமான எஞ்சின்களில் ஒன்று. கலிஃபோர்னியா டி மற்றும் 488ஜிடிபி மாடல்களில் இந்த எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. ஃபெராரி கார்களின் செயல்திறனை ருசிக்க விரும்புபவர்களுக்கு சரியான தீணியை இந்த எஞ்சின் போடும் என்பது ஆட்டோமொபைல் பிரியர்கள் மற்றும் டெஸ்ட் டிரைவர்களின் கருத்தாக உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 659 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 4.0 லி வி8 எஞ்சின்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி 4.0 லி வி8 எஞ்சின்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டின் ஏஎம்ஜி ஜிடி-எஸ் மற்ரும் ஏஎம்ஜி சி63 ஆகிய மாடல்களில் இந்த இரட்டை டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பிரசித்தி பெற்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 510 குதிரைசக்தி திறனையும், 650 என்எம் முறுக்கு விசையையும் வெளிப்படுத்தும்.

டாட்ஜ் 6.2லி வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின்

டாட்ஜ் 6.2லி வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின்

டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி ஹெல்கேட் மற்றும் டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி ஹெல்கேட் ஆகிய மாடல்களில் இந்த எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. இந்த 6.2 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 707 குதிரைசக்தி திறனையும், 881 என்எம் முறுக்கு விசையையும் வெளிப்படுத்தும்.

லம்போர்கினி 6.5 லி வி12 எஞ்சின்

லம்போர்கினி 6.5 லி வி12 எஞ்சின்

டர்போசார்ஜர் துணையில்லாமல் இயங்கும் எஞ்சின்களை தயாரிப்பதற்கு இன்றும் லம்போர்கினி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனத்தின் அவென்டேடார் மாடலில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் சிறந்த தொழில்நுட்பம் கொண்டதாக போற்றப்படுகிறது. அதிகபட்சமாக 700 குதிரைசக்தி திறனையும், 690 என்எம் முறுக்கு விசைசையும் அள்ளி வழங்கும். அதிகபட்சமாக 350 கிமீ வேகம் வரை காரை எடுத்துச் செல்லும் வல்லமை படைத்தது.

ஜெனரல் மோட்டார்ஸ் 6.2 லி வி8 எஞ்சின்

ஜெனரல் மோட்டார்ஸ் 6.2 லி வி8 எஞ்சின்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 6.2 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் கார்வெட் Z06 மற்றும் கேடில்லாக் சிடிஎஸ்-வி ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சமாக 650 எச்பி பவரையும், 881 என்எம் முறுக்கு விசையையும் வழங்கும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Today we tell you the top 10 greatest car engines ever built according to us, do let us know what you think and which you think is the best?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark