பாதுகாப்பு தரத்தில் மிக மோசமான உலகின் 10 விமான நிறுவனங்கள்!

By Saravana

பாதுகாப்பான பயண சேவையை வழங்குவதில் உலகின் மிகவும் சிறந்த 10 விமான நிறுவனங்கள் மற்றும் சிறந்த 10 குறைந்த கட்டண சேவையளிக்கும் விமான நிறுவனங்களையும் கடந்த வாரம் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள்.

இந்தநிலையில், பாதுகாப்பு சேவை தரத்தில் உலகின் மிக மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலை இப்போது காணலாம். பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நிறுவனங்கள் 7 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்த நிலையில், இப்போது பார்க்கப் போகும் விமான நிறுவனங்கள் வெறும் ஒரு நட்சத்திரத்தை மட்டும் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கின்றன. இவற்றை தவிர்க்க வேண்டிய நிறுவனங்களாகவும் காட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், பட்டியலில் உள்ள 10ல் 9 நிறுவனங்கள் இந்தோனேஷியாவை சேர்ந்தவை. ஏனெனில், பாதுகாப்பு விஷயத்தில் மிக மோசமான விமான சேவை நிறுவனங்களாக இந்தோனேஷிய விமான நிறுவனங்கள் கருதப்படுகின்றன. விமான போக்குவரத்துத் துறையின் மோசமான விதிமுறைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள், விமானிகளுக்கான பயிற்சி முறைகள் போன்றவை இந்த நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் இடம்பெறுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. வாருங்கள், அந்த 10 விமான நிறுவனங்களை காணலாம்.

 பாடிக் ஏர்

பாடிக் ஏர்

இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் விமான சேவை நிறுவனம் லயன் ஏர் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகிறது. 2013ம் ஆண்டில் சேவையை துவங்கிய இந்த நிறுவனத்திடம் 33 விமானங்கள் உள்ளன. ஏர்பஸ்- ஏ320- 200, போயிங் 737-800 மற்றும் போயிஹ் 737-900ER ஆகிய விமானங்களை பயன்படுத்துகின்றது. ஐரோப்பிய விமான நிலையங்களின் பாதுகாப்பு தர விதிகளுக்குட்படாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டு, ஐரோப்பாவில் சேவையாற்ற இந்த நிறுவனத்துக்கு தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புளூ விங் ஏர்லைன்ஸ்

புளூ விங் ஏர்லைன்ஸ்

புளூ விங் ஏர்லைன்ஸ் தொடர்ந்து மிக மோசமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்று வருகிறது. வெனிசுலா, பிரேசில், கயானா, கரிபீயன் பகுதிகளில் சேவையை வழங்குகிறது. கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 9 விமானங்கள் உள்ளன. மிக மோசமான தரமதிப்பீட்டுக்கான கருப்பு பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.

Picture credit: Konstantin von Wedelstaedt/Wiki Commons

சிட்டிலிங்க் ஏர்லைன்ஸ்

சிட்டிலிங்க் ஏர்லைன்ஸ்

இந்தோனேஷியாவை மையமாக கொண்டு செயல்படும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம். கருடா இந்தோனேஷியா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் இந்த நிறுவனம் 2001ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மொத்தம் 35 விமானங்களுடன், 16 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. இதுவும் பாதுகாப்பு தர மதிப்பீட்டில் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே பெற்றிருக்கிறது.

 கல்- ஸ்டார் ஏவியேஷன்

கல்- ஸ்டார் ஏவியேஷன்

இதுவும் இந்தோனேஷியாவை சேர்ந்த விமான நிறுவனம்தான். 200ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 12 விமானங்கள் உள்ளன. 18 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. இதுவும் பாதுகாப்பு தர மதிப்பீட்டில் ஒரேயொரு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

லயன் ஏர்

லயன் ஏர்

இந்தோனேஷியாவை சேர்ந்த லயன் ஏர் நிறுவனமும் பாதுகாப்பு சேவையில் குறைவான தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. 1999ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 104 விமானங்கள் உள்ளன 126 நகரங்களுக்கு சேவையளிக்கிறது. ஐரோப்பிய விமான ஒழுங்கு முறை ஆணையத்தின் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது.

Picture credit: Paul Spijkers/Wiki Commons

ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ்

ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ்

ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்தோனேஷியாவை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனமே. 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 38 விமானங்களுடன் 43 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. இதுவும் பாதுகாப்பு தர மதிப்பீட்டில் ஒரேயொரு நட்சத்திர அந்தஸ்தை கொண்டுள்ளது.

டிரான்ஸ்நூசா

டிரான்ஸ்நூசா

இதுவும் இந்தோனேஷியாவை சேர்ந்த ஏர்லைன்ஸ் நிறுவனம்தான். 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் 6 விமானங்கள் உள்ளன. இந்த நிறுவனமும் ஒரேயொரு பாதுகாப்பு நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

Picture credit: Riyad Filza/Wiki Commons

டிரைகானா ஏர் சர்வீஸ்

டிரைகானா ஏர் சர்வீஸ்

இதுவும் இந்தோனேஷியாவை சேர்ந்த விமான நிறுவனம்தான். 1991ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 15 விமானங்களுடன் 21 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

Picture credit: YSSYguy/Wiki Common

விங்ஸ் ஏர்

விங்ஸ் ஏர்

இந்தோனேஷியாவை சேர்ந்த நிறுவனம்தான் விங்ஸ் ஏர்லைன்ஸ். லயன் ஏர் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் இந்த நிறுவனம் 2003ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்திடம் தற்போது 47 விமானங்கள் உள்ளன 75 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது.

Picture credit: Paul Spijkers/Wiki Commons

எக்ஸ்பிரஸ் ஏர்

எக்ஸ்பிரஸ் ஏர்

இந்தோனேஷியாவை சேர்ந்த மற்றொரு நிறுவனம். 12 விமானங்களுடன் 37 நகரங்களுக்கு சேவையளித்து வருகிறது. இதற்கும் ஏர்லைன்ஸ் ரேட்டிங்.காம் ஒரேயொரு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

Picture credit: Reska K. Nistanto/Planespotters

காரணம்

காரணம்

இந்தோனேஷிய விமான பைலட்டுகள் போதை மருந்து உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கருதப்படுகிறது. இந்தோனேஷிய விமான நிறுவனங்களை தேர்வு செய்யும்போது கவனம் தேவை அல்லது தவிர்க்குமாறு தனது நாட்டு பிரஜைகளை ஆஸ்திரேலியா கூட கடந்த ஆண்டு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
According to the latest survey from AirlineRatings.com, Indonesian airlines are among the least safe in the world.
Story first published: Monday, January 11, 2016, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X