நாள் கணக்கில் பயணிக்கும் இந்தியாவின் டாப் - 10 நீண்ட தூர பயணிகள் ரயில்கள்!

Written By:

பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட இந்தியாவின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் ரயில்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகிலேயே மிக நீண்ட தூர ரயில் கட்டமைப்பு கொண்ட நாடாகவும் இந்தியா முன்னிலை பெறுகிறது.

இந்த நிலையில், பல மாநிலங்கள், கலாச்சாரங்களை கடந்து மக்களை இணைக்கும் பாலமாகவும், குறைந்த கட்டண போக்குவரத்து சாதனமாகவும் விளங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டாலும், சில ரயில்கள் நாள்கணக்கில் பயணித்து, மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அதில், மிக நீண்ட தூரம் பயணிக்கும் இந்தியாவின் டாப் 10 ரயில்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. கவுகாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்

10. கவுகாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,337 கிமீ

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கும் இந்த ரயில் பயணிக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 3,337 கிமீ தூரம் பயணித்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை வந்தடைகிறது. மொத்தமாக 59 மணி 45 நிமிடங்கள் பயணிக்கிறது. 43 நிறுத்தங்களில் நின்று வருகிறது.

09. கேரளா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்

09. கேரளா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3415 கிமீ

மிக நீண்ட தூரம் பயணிக்கும் இந்திய ரயில்களில் 9வது இடத்தை கேரள சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் பெறுகிறது. சண்டிகரிலிருந்து கொச்சுவேலிக்கு வரும் இந்த ரயில் 3,415 கிமீ தூரம் பயணிக்கிறது. 57 மணி 35 நிமிடங்கள் பயண நேரத்தில் இந்த தூரத்தை கடக்கிறது. இடையில் 70 இடங்களில் நின்று செல்கிறது.

 08. ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்

08. ரப்திசாகர் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,441 கிமீ

இந்த ரயிலும் கேரளாவிலிருந்துதான் செல்கிறது. கேரளாவிலுள்ள எர்ணாகுளத்திலிருந்து பீகார் மாநிலம் பரவ்னி ரயில் நிலையம் வரையில் 3,441 கிமீ தூரம் பயணிக்கிறது. இந்த தூரத்தை கடப்பதற்கு 62 மணி நேரமாகிறது. இடையில் 61 இடங்களில் நின்று செல்கிறது.

07. டேராடூன்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்

07. டேராடூன்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,465 கிமீ

இதுவும் கேரளாவிலிருந்து செல்லும் ரயில்தான். டேராடூனிலிருந்து கேரளாவிலுள்ள கொச்சுவேலி செல்லும் இந்த ரயில் 3,465 கிமீ தூரம் பயணிக்கிறது. இந்த தூரத்தை 61 மணிநேரத்தில் கடக்கிறது. இடையில் 25 இடங்களில் நின்று செல்கிறது.

06. திப்ரூகர் எக்ஸ்பிரஸ்

06. திப்ரூகர் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,547 கிமீ

இந்த பட்டியலில் 6வது இடத்தை பெங்களூரிலுள்ள யஷ்வந்த்பூரிலிருந்து, அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் ரயில் பிடிக்கிறது. இந்த ரயில் 3,547 கிமீ தூரத்தை 68 மணி நேரத்தில் கடக்கிறது. 33 இடங்களில் நின்று செல்கிறது.

05. கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

05. கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,559 கிமீ

கேரள தலைநகர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, கவுகாத்தி செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் 5வது இடத்தை பிடிக்கிறது. இந்த ரயில் 3,559 கிமீ தூரத்தை 65 மணி நேரத்தில் கடக்கிறது. 49 இடங்களில் நின்று செல்கிறது.

 04. திருநெல்வேலி- ஜம்மு எக்ஸ்பிரஸ்

04. திருநெல்வேலி- ஜம்மு எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,637 கிமீ

மிக நீண்ட தூரம் பயணிக்கும் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கிறது திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் மாநிலம் கத்ரா வரை செல்லும் இந்த டென் ஜம்மு எக்ஸ்பிரஸ். இந்த ரயில் 3,637 கிமீ தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்கிறது. இடையில் 70 இடங்களில் நின்று செல்கிறது. புறப்பட்டு நான்காவது நாள் செல்லுமிடத்தை அடைகிறது. தென் தமிழகத்திலிருந்து சென்னை செல்லாமல் நேரடியாக டெல்லி சென்று, அங்கிருந்து காஷ்மீரை அடைகிறது.

03. நவ்யுக் எக்ஸ்பிரஸ்

03. நவ்யுக் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,685 கிமீ

மூன்றாவது இடத்தில் நவ்யுக் எக்ஸ்பிரஸ் உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து காஷ்மீர் வரை பயணிக்கிறது. இந்த ரயில் 3,685 கிமீ தூரத்தை 68 மணி 20 நிமிடத்தில் கடக்கிறது. இடையில் 61 இடங்களில் நின்று செல்கிறது.

02. ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்

02. ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 3,787 கிமீ

இந்தியாவின் தென்கோடியையும், வடகோடியையும் இணைக்கும் ரயில் என்ற பெருமைக்குரியது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட தூர ரயில் இது. கன்னியாகுமரியிலிருந்து ஜம்முவை இணைக்கிறது. இந்த ரயில் 3,787 கிமீ தூரத்தை 71 மணி 35 நிமிடங்களில் கடக்கிறது. இடையில் 72 இடங்களில் நின்று செல்கிறது.

 01. விவேக் எக்ஸ்பிரஸ்

01. விவேக் எக்ஸ்பிரஸ்

பயண தூரம்: 4,231 கிமீ

இந்தியாவின் மிக நீண்ட தூர பிரயாணத்தை மேற்கொள்ளும் ரயில் இதுதான். இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, அசாம் மாநிலத்திலுள்ள திப்ரூகருக்கு செல்கிறது. இரு இடங்களுக்கும் இடையிலான 4,273 கிமீ தூரத்தை 80 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. இடையில் 56 இடங்களில் நின்று செல்கிறது.

இந்தியாவின் மிக நீண்ட தூர பயணிகள் ரயில்!

இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில்... விவேக் எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 Longest Railway Routes And Connecting Trains In India.
Story first published: Tuesday, May 3, 2016, 18:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark