இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மிக மோசமான 10 ரயில் விபத்துக்களையும் அது எவ்வாறு நடந்தது என்பதையும் கீழே பார்ப்போம். முதலாவது இடத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விபத்து இருக்கிறது.

By Balasubramanian

உலகில் நாம் பயணம் செய்யும் வாகனங்களில் பிரம்மாண்டமானவைகளில் ரயிலும் ஒன்று அதன் நீளம், இன்ஜினில் இருந்து வரும் சத்தம், அதிர்வு, ஹாரன் அடிக்கும் போது வரும் என சத்தம் என பதற வைக்கும் பல அம்சங்கள் நிறைந்தது தான் ரயில்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

இந்திய மக்களிடம் ரயில் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. இதற்கு ரயில் பயணம் பாதுகாப்பானது என்ற கருத்தும் முக்கிய காரணம். ரயில் பாதையில் கட்டமைப்பில் விபத்துக்கள் நடப்பது என்பது குறைவு தான்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

விபத்திற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், விபத்து ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். மிக வேகமாக, அதிக எடையுள்ள ரயில் விபத்தில் சிக்கினால் ரயில் உள்ளே உள்ளவர்களின் நிலையை யோசித்து பாருங்கள்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

அவ்வாறாக இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மிக மோசமான 10 ரயில் விபத்துக்களையும் அது எவ்வாறு நடந்தது என்பதையும் கீழே பார்ப்போம். முதலாவது இடத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விபத்து இருக்கிறது ஒவ்வொன்றாக படித்து பாருங்கள்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

10 புதுடில்லி ரயில் விபத்து

கடந்த 2002ம் ஆண்டு செப்., மாதம் 9ம் தேதி ஹவுராவில் இருந்து புதுடில்லி நோக்கி வந்த ரயில் பீகார் மாநிலத்தில் உள்ள ரஃபிகன்ஜ் ரயில் நிலையம் அருகே வரும் போது தண்டவாளம் சரியாக இல்லாததால் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 140 பேர்பலியாகினர். இந்த விபத்து சரியான டிராக் பராமரிப்பின்மையால் நிகழ்ந்தது.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

9 பஞ்சாப் ரயில் விபத்து

கடந்த 1998ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் காணா பகுதி அருகே சென்று கொண்டிருந்த பிரண்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டது. அதே பகுதியில் அடுத்தடிராக்கில எதிர்திசையில் வந்து கொண்டிருந்த ஜம்முதாவி செல்தா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதில் 212 பேர் பலியாகினர். இந்த விபத்தும் சாியான டிராக் பராமரிப்பின்மையால் தான் நிகழ்ந்தது.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

8. ஃபிரோசாபாத் ரயில் விபத்து

உ.பி., மாநிலம் ஃபிரோசாபாத் அருகே கடந்த 1995ம் ஆண்டு ஆக.,20 ரயில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் கலிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதியது. இதில் 350 பேர் பலியாகினர். இந்த விபத்து டிராக் மாற்றுவதில் ஏற்பட்ட மனித தவறுகளால் நிகழ்ந்தது.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

7.அசாம் ரயில் விபத்து

அசாம் மாநிலத்தில் கடந்த 1999ம் ஆண்டு புதுடில்லியில் இருந்து வந்த ஆவத் ஆசாம் எக்ஸ்பிரஸ் ரயிலும், திப்ரூக்கா பகுதியில் இருந்து வந்த பிரம்மபுத்ரா மெயில் ரயிலும் அதிவேகத்துடன் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேராக மோதியது இதில் 290 பேர் பலியாகினர். இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக நிகழ்ந்தது.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

6. பீகார் ரயில் விபத்து

உலகின் மிக மோசமான விபத்துக்களின் ஒன்றாக இந்த விபத்து பார்க்கப்படுகிறது. கடந்த 1981ம் ஆண்டு பீகார் மாநிலம் மான்ஷி மற்றும் சாஹர்ஷா பகுதிக்கு இடையில் பாஹ்மதி ஆற்றை கடந்த ரயில் ஒன்று ஆற்றிற்குள் புகுந்தது. இதில் ரயிலில் இருந்த சுமார் 800க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த விபத்திற்கு புயல், ஆற்றில் திடீர் என வந்த வெள்ளம், எருமை மாடு மீது ரயில் மோதியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சாியான காரணம் எதுவும் தெரியவில்லை.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

5. மத்திய பிரதேச ரயில் விபத்து

பாசஞ்ஜர் ரயிலும் சரக்கு ரயிலும் மத்திய பிரதேச மாநிலம் பந்தவாரா அருகே மோதிய விபத்தில் 20 பேர் பலியாகினர். 50 பேர் மோசமான நிலையில் உடல் ஊனத்திற்கு ஆளாகினர்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

4 .அனந்த்பூர் ரயில் விபத்து

கடந்த 2013ம் ஆண்டு ஆந்திரமாநிலம் அனந்த்பூர் அருகே கோட்டச்சிருவு பகுதியில் நாண்டேட் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸாட் சர்க்யூட் ஏற்பட்டதால் நடந்த விபத்திற்குள்ளானது. இதில் ரயிலில் இருந்த 26 பேர் பலியாகினர். பலருக்கு மோசமான அளவு தீக்காயம் ஏற்பட்டது.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

3. சந்த் கபீர் நகர் ரயில் விபத்து

கடந்த 2014ம் ஆண்டு மே 20ம் தேதி சந்த் உ.பி., மாநிலம் சந்த் கபீர் ரயில் அருகே கோர்க்கதம் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதில் 25ம் பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

2. ஐதராபாத் ரயில் விபத்து

கடந்த 1954ம் ஆண்டு ஐதராபாத்தில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள யாஷான்தி என்ற ஆற்றில் ரயில் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 139 பேர் பலியாகினர். இந்த விபத்து இந்தியாவில் மோசமான ரயில் விபத்தில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்

1. பாம்பன் - தனுஷ்கோடி பாஞ்சர் ரயில் விபத்து

கடந்த 1964ம் ஆண்டு பாம்பன் தனுஷ்கோடி இடையே இயக்கபட்ட பாஞ்சர் ரயில் அப்பொழுது ஏற்பட்ட புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இதில் ரயில் இருந்த 150 பேரும் பலியாகினர். அது சீசன் காலம் இல்லை என்பதால் குறைந்த அளவு பயணிகளே இருந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தனுஷ்கோடி என்ற ஊரே அழிந்து போனது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 Most Dangerous Train Accidents in India. Read in Tamil
Story first published: Monday, April 16, 2018, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X