172 கோடி மதிப்பு காரில் கொஞ்சம் நசுங்கினாலும் போச்சு... இல்லையா!

By Saravana

வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. விதிமீறல்கள், குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களும், அஜாக்கிரதையும் விபத்துக்கள் பெருக காரணமாகி வருகிறது. விபத்துக்களில் சிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு வகையிலும் இழப்பு ஏற்படுகிறது.

உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம். இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும், கையிலிருந்து காசு போடும் நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாது. சாதாரண கார்களுக்கு இதுபோன்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் நிலையில், உலகில் நடந்த சில விலையுயர்ந்த கார் விபத்துக்கள் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களுக்கும், கார் உரிமையாளர்களுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளன.


பெரும் பாதிப்புகள்

பெரும் பாதிப்புகள்

கோடிக்கணக்கான கார்கள் விபத்தில் சிக்கும்போது, அந்த காருக்கு இணையான விலையை கொடுத்து சரிசெய்ய வேண்டிய நிலைகள் ஏற்படுகின்றன. அந்த தகுதி இருந்தாலும், உடலளவிலும், மனதளவிலும் இந்த விபத்துக்கள் நிச்சயம் அந்த உரிமையாளர்களின் வாழ்க்கையில் வடுக்களை ஏற்படுத்தியிருக்கும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உலகின் சில காஸ்ட்லி கார் விபத்துக்களை காணலாம்.

10. புகாட்டி இபி110

10. புகாட்டி இபி110

உலகின் அதிக விலை கொடுக்கப்பட்ட கார் விபத்துக்களில் 10வது இடத்தில் 1992மாடல் புகாட்டி இபி110 கார் இடம்பெறுகிறது. பராமரிப்புக்காக வந்த காரை மெக்கானிக் ஒருவர் டெஸ்ட் டிரைவ் செய்தபோது விபத்தில் சிக்கி நொறுங்கியது. சாலையில் எண்ணெய் படர்ந்திருந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாக அந்த காரை ஓட்டிய மெக்கானிக் தெரிவித்தார். இந்த கார் 5 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடையது. இந்திய மதிப்பில் ரூ.3.03 கோடி விலை மதிப்பு கொண்டது.

 9.பகானி ஸோன்டா சி12எஸ்

9.பகானி ஸோன்டா சி12எஸ்

மொத்தம் 12 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதில் ஸோன்டா சி12எஸ் கார் விபத்தில் சிக்கி சின்னாபின்னமானது. ஹாங்காங்கில் நடந்த விபத்தில் சிக்கிய இந்த பகானி ஸோன்டா காரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.3.94 கோடி.

 8.மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்300

8.மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்300

'கல்விங்' கதவுகளுடன் மனம் கவர்ந்த விண்டேஜ் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்30 கார் ஒன்றும் விபத்தில் சிக்கி கார் பிரியர்களின் மனதை நொறுங்க செய்தது. 1965ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கிளாசிக் கார் மாடல்களுக்காக நடத்தப்பட்ட லா கரீரா பான்அமெரிக்கான என்ற ரேஸில் பங்கேற்றபோது அந்த கார விபத்தில் சிக்கியது. இந்திய மதிப்பில் ரூ.4.54 கோடி மதிப்பு கொண்டது.

 7.ஜாகுவார் எக்ஸ்ஜே220

7.ஜாகுவார் எக்ஸ்ஜே220

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் என்ற பெருமையை பெற்ற இந்த கார் சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காருக்கு அருகில் நிற்பவர்தான் அதன் உரிமையாளர். இதுவும் ரூ.6 கோடி மதிப்பு கொண்டது.

6.மெக்லாரன் எஃப்1

6.மெக்லாரன் எஃப்1

உலகில் நடந்த காஸ்ட்லி கார் விபத்துக்களின் பட்டியலில் 6வது இடத்தை மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்ஸனின் மெக்லாரன் கார் விபத்தை குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 107 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. கடந்த 2005ம் ஆண்டு இந்த கார் விபத்து நடந்தது. இந்த கார் ரூ.7.26 கோடி மதிப்பு கொண்டது. ஒரு அஸ்டன் மார்ட்டின் காரும் ரோவன் ஓட்டியபோது விபத்துக்குள்ளானது. என்ன இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களுக்குத்தான் பெரும் தலைவலி. ஏனெனில், இவர் மோதிய கார்களுக்கு காருக்கு இணையான காப்பீட்டை வழங்க வேண்டியிருந்தது.

5.ஃபெராரி என்ஸோ

5.ஃபெராரி என்ஸோ

ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களின் மிக விருப்பமான மாடல் இது. மணிக்கு 315 கிமீ வேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய இந்த கார் மோதிய வேகத்தில் இரண்டு துண்டுகளானது. இது இந்திய மதிப்பில் ரூ.7.87 கோடி மதிப்புடையது.

4. புகாட்டி வேரான்

4. புகாட்டி வேரான்

உலகின் அதிவேக கார் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் கார் ஒன்று அதிவேகத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியது. வாங்கி ஒரே வாரத்தில் இந்த கார் விபத்தில் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.9.69 கோடி மதிப்புடயைது.

3. 1959 ஃபெராரி 250ஜிடி டிடிஎஃப்

3. 1959 ஃபெராரி 250ஜிடி டிடிஎஃப்

டாப்3 லிஸ்ட்டில் அரிய கார்கள் இடம்பிடித்துள்ளன. அதில் ஒன்றான இந்த கார் ரேஸ் டிராக்கில் அதிவேகத்தில் ஓட்டியபோது விபத்தில் சிக்கியது. இந்த கார் ரூ.9.99 கோடி மதிப்புடையது.

 2. ஃபெராரி 250ஜிடி ஸ்பைடர்

2. ஃபெராரி 250ஜிடி ஸ்பைடர்

கடந்த 2008ம் ஆண்டு வீசிய சூறாவளியில் சிக்கிய இந்த அரிய ஃபெராரி விண்டேஜ் கார் கடும் சேதமடைந்தது. ஏலத்தில் இந்த கார் மாடல் ஒன்று ரூ.66 கோடி வரை ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

1.ஃபெராரி 250ஜிடிஓ

1.ஃபெராரி 250ஜிடிஓ

இந்திய மதிப்பில் ரூ.172 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்த அரிய ஃபெராரி கார் ஒரு ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு வந்த போது மற்றொரு கார் மோதி சேதமடைந்தது. இதுவும் மிக அதிக மதிப்பு கொண்ட கார் விபத்தாக குறிப்பிடப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2014, 17:30 [IST]
English summary
Here in our list above, we take a look at the world's top 10 most expensive crashes till date.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+