யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

விமானத்தில் பயணம் செய்வது மிகவும் ஆச்சிரியமாக பார்க்கப்பட்ட காலம் போய், தற்போது சில நூறு கிமீ பயணங்களுக்கு கூட விமான சேவை இருக்கிறதா என தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் ஒரு நாடு விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விமான பயணங்களே எளிமையானது & விரைவானது. சரி... உலகிலேயே நீண்ட தொலைவை கொண்ட விமான சேவைகள் எவையென்று தெரியுமா? வாருங்கள், அவற்றில் முதல் 10 வழித்தடங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

1. சிங்கப்பூர் - நியூயார்க் விமானம் (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்)

இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்து, உலகிலேயே மிக நீண்ட தொலைவிற்கான விமான சேவையை வழங்கும் ஏர்லைன்ஸ் நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளங்குகிறது. சிங்கப்பூர் - நியூயார்க் இடையேயான 15,348 கிமீ தொலைவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் 18 மணிநேரங்கள் & 50 நிமிடங்களில் கடக்கிறது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

2. சிங்கப்பூர் - நெவார்க் விமானம் (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்)

உலகின் 2வது நீண்ட விமான வழித்தடத்தையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் தான் கடக்கிறது. சிங்கப்பூர்- அமெரிக்காவில் உள்ள நெவார்க் நகரம் வரையிலான இந்த விமான பயணம் ஆனது மொத்தம் 15,325 கிமீ தொலைவை கொண்டதாக உள்ளது. இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் 18 மணிநேரங்கள் & 45 நிமிடங்களில் கடக்கிறது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

3. பெர்த் - லண்டன் விமானம் (குவாண்டாஸ் ஏர்வேஸ்)

உலகின் 3வது நீண்ட விமான சேவை ஆஸ்திரேலியாவின் பெர்த் - இங்கிலாந்தின் லண்டன் இடையிலானது ஆகும். இந்த விமான வழித்தடத்தின் மொத்த தொலைவு 14,500 கிமீ. இந்த தொலைவினை குவாண்டாஸ் ஏர்வேஸின் போயிங் 787 விமானம் 17 மணிநேரங்கள் & 15 நிமிடங்களில் நிறைவு செய்கிறது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

4. மெல்போர்ன் - டல்லாஸ் விமானம் (குவாண்டாஸ் ஏர்வேஸ்)

நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் - அமெரிக்காவின் டல்லாஸ் வரையிலான விமான பயணம் இணைய உள்ளது. இந்த விமான சேவையை குவாண்டாஸ் ஏர்வேஸ் தனது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் மூலம் வருகிற 2022 டிசம்பர் மாதம் முதல் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்தில் மொத்தம் 14,471 கிமீ தொலைவை குவாண்டாஸ் ஏர்வேஸின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் ஏறக்குறைய 17 மணிநேரங்கள் & 35 நிமிடங்களில் கடந்துவிடுமாம்.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

5. ஆக்லாந்து - நியூயார்க் விமானம் (ஏர் நியூசிலாந்து)

குவாண்டாஸ் ஏர்வேஸை போல், நியூசிலாந்தின் ஆக்லாந்து - நியூயார்க் வரையிலான விமான சேவையை ஏர் நியூசிலாந்து ஏர்லைன் நிறுவனம் அடுத்த 2022 செப்டம்பர் 17ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த பயணம் மொத்தம் 14,207 கிமீ தொலைவை கொண்டதாக இருக்கும். இந்த தொலைவை ஏர் நியூசிலாந்து ஏர்லைன் தனது போயிங் 787 விமானம் மூலமாக 17 மணிநேரங்கள் & 50 நிமிடங்களில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

6. துபாய் - ஆக்லாந்து விமானம் (எமிரேட்ஸ்)

மேற்கூறப்பட்ட இரு விமான சேவைகளை போன்று, உலகின் நீண்டதூர விமான சேவையாக எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் துபாய் - ஆக்லாந்து இடையேயான பயணத்தை துவங்கவுள்ளது. இந்த விமான பயணம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

இது மீண்டும் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. மொத்தம் 14,200 கிமீ தொலைவு கொண்டதாக உள்ள இந்த விமான பயணத்தில் போயிங் 777 விமானத்தை எமிரேட்ஸ் ஏர்லைன் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானம் 14,200 கிமீ தொலைவை 17 மணிநேரங்கள் & 10 நிமிடங்களில் கடந்துவிடுமாம்.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

7. சிங்கப்பூர் - லாஸ் ஏஞ்சல்ஸ் விமானம் (சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்)

சிங்கப்பூர் - லாஸ் ஏஞ்சல்ஸ் இடையேயான 14,113 கிமீ தொலைவு விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஏர்பஸ் ஏ350 விமானத்தின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொலைவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ350 விமானம் ஏறக்குறைய 17 மணிநேரங்கள் & 40 நிமிடங்களில் கடக்கிறது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

8. பெங்களூர் - சான் பிரான்ஸிஸ்கோ விமானம் (ஏர் இந்தியா)

என்ன இந்தியாவில் இயங்கும் விமான சேவை எதுவும் வரவில்லையே என நினைத்திருப்பீர்கள், இதோ 8வது இடத்தில். பெங்களூர் - சான் பிரான்ஸிஸ்கோ வரையிலான 14,003 கிமீ பயணத்தை ஏர் இந்தியா ஏர்லைன் நிறுவனம் போயிங் 777 விமானத்தின் மூலமாக மேற்கொள்கிறது. இத்தகைய தொலைவை கடக்க போயிங் 777 விமானத்திற்கு 17 மணிநேரங்கள் & 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

9. டர்வின் - லண்டன் விமானம் (குவாண்டாஸ் ஏர்வேஸ்)

இந்த லிஸ்ட்டில் 9வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டர்வின் - லண்டன் வரையிலான குவாண்டாஸ் ஏர்வேஸின் விமான சேவை உள்ளது. இந்த சேவையில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை குவாண்டாஸ் ஏர்வேஸ் பயன்படுத்துகிறது. டர்வின் - லண்டன் இடையிலான 13,872 கிமீ தொலைவை இந்த விமானம் 17 மணிநேரங்கள் & 55 நிமிடங்களில் கடக்கிறது.

யம்மாடியோவ்... 19 மணிநேர விமான பயணமா!! உலகிலேயே நீண்ட தொலைவு இயங்கும் விமானம் இதுதான்!

10. ஹூஸ்டன் - சிட்னி விமானம் (யுனிட்டெட் ஏர்லைன்ஸ்)

இந்த லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டன் - ஆஸ்திரேலியாவின் சிட்னி வரையிலான யுனிடெட் ஏர்லைன்ஸின் விமான சேவை பிடித்துள்ளது. மொத்தம் 13,790 கிமீ தொலைவிலான இந்த விமான பயணத்தில் போயிங் 787 விமானத்தை யுனிடெட் ஏர்லைன்ஸ் அக்டோபர் 28ஆம் தேதி முதல் உட்படுத்தவுள்ளது (தற்போதைக்கு இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது).

More from DriveSpark

Article Published On: Thursday, August 25, 2022, 17:35 [IST]
English summary
Top 10 worlds longest non stop flight routes
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+