பழைய கார் பாகங்களிலிருந்து செய்யபட்ட 15 விதமான மேஜை, நாற்காலிகள்
ஒரு முறை உபயோகித்த பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிப்பது மிகுந்த நல்ல விஷயமாகும். இப்படி சாதாரன பேக் முதல் சாலைகள் வரை பல்வேறு விஷயங்கள் மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்கபடுகிறது.
இவ்வாறாக, பழைய கார் பாகங்கள் கொண்டு, மேஜை நாற்காலிகள் செய்யபடுகிறது. இப்படி, 15 விதமான மற்றும் வித்தியாசமான மேஜை நாற்காலிகள் குறித்த பட்டியலை வரும் ஸ்லைடரில் காணலாம்.

1) ஸ்னூக்கர் டேபிள்;
அம்சமாக காட்சி அளிக்கும் இந்த ஸ்னூக்கர் டேபிள், ஃபோர்டு மஸ்டாங் காரின் பாகங்கள் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

2) சோஃபா;
முந்தைய தலைமுறையை சேர்ந்த செவர்லே காரின் பின் பக்க டிசைன் வருங்கால நோக்குடையதாக இருந்தது. ஆனால், அத்தகைய செவர்லே காரின் பாகமானது வருங்காலத்தில் சோஃபாவாக மாற்றபடலாம் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

3) காஃபி டேபிள்;
ஃபெராரி கார் விபத்துக்குள்ளாவது என்பது எளிதில் தாங்கி கொள்ள கூடிய விஷயம் அல்ல. அப்படி, விபத்துக்கு உள்ளான ஃபெராரி காரின் மீதங்கள் கொண்டு இத்தகைய காஃபி டேபிள் உருவாக்கபட்டுள்ளது.

4) மற்றொரு காஃபி டேபிள்;
ஃபெராரி காரின் மீதங்கள் கொண்டு உருவாக்கபட்ட காஃபி டேபிள் பார்த்துவிட்ட பிறகு, பழைய ஜாகுவார் கொண்டு செய்யபட்ட இந்த காஃபி டேபிளுக்கு என்ன சொல்வது?
இந்த காஃபி டேபிள் குறிப்பாக, ஜாகுவார் வி12 இஞ்ஜின் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

5) இன்னொரு காஃபி டேபிள்;
இந்த காஃபி டேபிள், பழைய சஸ்பென்ஷன் ஸ்ப்ரிங்குகள் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

6. மீண்டும் காஃபி டேபிள்;
இங்கு காணப்படும் காஃபி டேபிள், பழைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் சில ரேடியேட்டர்கள் கொண்டு செய்யபட்டுள்ளது.

7. சிங்க்;
இந்த சிங்க், பழைய வால்வோ காரின் மீதங்கள் கொண்டு உருவாக்கபட்டுள்ள சிங்க் ஆகும். இது தான் உலகின் மிகவும் பாதுகாப்பான சிங்க்காக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

8) பெட்;
கேடில்லாக் கார்கள் மிகவும் சொகுசுமிக்கவை என அனைவருக்கும் தெரியும். ஆனால், கேடில்லாக் காரை கொண்டு செய்யபட்ட இந்த படுக்கை, சொகுசு அம்சங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

9. மீண்டும் பெட்;
இந்த படத்தில் காணப்படுவது மீண்டும் ஒரு படுக்கையாகும். ஆனால், இந்த படுக்கை மிட்சுபிஷி இவோ மாடலின் முன் பகுதியை கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

10. சேர்
இந்த சேர்கள், பழைய கார்களின் பக்கெட் இருக்கைகள் கொண்டு செய்யபட்டுள்ளது. காரில் இருந்த பக்கெட் இருக்கைகளில் அமர்ந்துவிட்டு மீண்டும் அலுவலகத்தில் அதே போன்றே பக்கெட் இருக்கைகளில் அம்ர்ந்தால் எப்படி இருக்கும்?

11. லைசன்ஸ் பிளேட்;
பழைய லைசன்ஸ் பிளேட் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லையா?
விருப்பமுள்ளவர்களை, இவற்றை கடிகாரமாக மாற்றி கொள்ளலாம்.

12. கிரில்;
பானட் திறந்து கொண்டு, புகைந்து கொண்டிருக்கும் இஞ்ஜின் கொண்ட கார்களை வைத்து கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லையா?
விருப்பம் இருந்தால், இதோ இப்படி கிரில் போல் மாற்றி கொள்ளலாம்.

13. அலமாரி;
உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை மிக வித்தியாசமாக காட்சிபடுத்த விருப்பமா?
இதோ, பழைய ஜாகுவார் காரின் மீதங்களை கொண்டு, அதை அலமாரியாக மாற்றி உபயோகித்து கொள்ளலாம்.

14. மேஜை;
உங்கள் அலுவலகத்தில் உள்ள மேஜை உங்களுக்கு அலுத்துவிட்டதா?
வாய்ப்பு இருந்தால், பழைய மினி கார் கொண்டு செய்யபட்டுள்ள இந்த மேஜையை போல், உங்கள் மேஜையையும் மாற்றி கொள்ளலாம்.

15. கேபின்;
முன்னதாக பார்த்த மேஜை போல் பிடிக்கவில்லையா?
பேருந்தின் முன் பகுதியை கொண்டு உருவாக்கபட்டுள்ள இந்த பிரத்யேக தனிநபர் கேபின் முயற்சி செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








