கார் பயணங்களுக்கு ஏற்ற இளையராஜாவின் டாப் - 20 மெலடி பாடல்கள்!

Written By:

குறைந்த தூரமோ, நீண்ட தூரமோ, காரில் பயணிக்கும்போது, பாடல்கள் இல்லாத பயணத்தை நினைத்தே பார்க்க முடியாது. பயணங்களை அலுப்பில்லாமலும், இனிமையாகவும் வைத்திருப்பதோடு, இனிய பாடல்களை கேட்கும்போது மனதும், உடலும் உற்சாகத்துடன் இருக்கும். அந்த வகையில், வாகன பயணங்களுக்கும், இளையராஜா பாடல்களுக்கும் தமிழ்நாட்டில் நெருங்கிய தொடர்புண்டு.

பட்டிதொட்டியில் ஓடும் மினி பஸ் முதல், பணக்கார கார்கள் வரை இளையராஜா பாடல்கள் இல்லாத பயணங்களே இல்லை என அடித்துக் கூறலாம். இளையராஜாவின் ஹிட் பாடல்களை தொகுத்தால் இந்த செய்தித்தொகுப்பு இன்றோடு நிறைவடையாது. அவர் இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களில், எம்மை மிகவும் கவர்ந்த டாப்-20 பாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்குகிறோம். இவற்றை தரவிறக்கம் செய்து உங்களது பென் டிரைவில் போட்டு வைத்துவிட்டால், ஒவ்வொரு பயணமும் இனிமையாக இருக்கும் என்ற கருதுகிறோம்.

01. இது ஒரு பொன்மாலை பொழுது...

01. இது ஒரு பொன்மாலை பொழுது...

நிழல்கள் படத்திலிருந்து இது ஒரு பொன்மாலை பொழுது பாடல், இளையராஜா இசையில் ஓர் மிகப்பெரிய ஹிட் பாடல். நம் மனதையும், உடலையும் இலகுவாக்கும் இசையது.

இந்த பாடலின் யூ-ட்யூப் லிங்க்

02. அந்தி மழை

02. அந்தி மழை

ராஜபார்வை படத்தில் வரும் அந்திமழை பொழிகிறதே பாடலும் அனைவரும் அதிகமாக கேட்ட இளையராஜாவின் ஹிட் பாடல்களில் ஒன்று. இளையராஜா, வைரமுத்து, எஸ்பிபி, ஜானகி ஆகியோர் ஒன்றிணைந்த பாடல்களில் ஒன்று. உங்கள் பென் டிரைவில் நிச்சயம் இடம் பிடிக்கும் என நம்பலாம்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

03. இளைய நிலா பொழிகிறதே

03. இளைய நிலா பொழிகிறதே

தேனினும் தெவிட்டாத பாடல்களில் ஒன்று. எனது ஒவ்வொரு நீண்ட தூர பயணத்திலும் இந்த பாடலை கேட்காமல் சென்றதில்லை.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

 04. ராஜராஜ சோழன் நான்..

04. ராஜராஜ சோழன் நான்..

ரெட்டை வால் குருவி படத்திலிருந்து ராஜராஜ சோழன் பாடல் நம் மனதில் உள்ள பாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக நெகிழச் செய்துவிடும். அலுவலத்திலிருந்து வீடு திரும்பும்போது கண்டிப்பாக மிஸ் பண்ணுவதில்லை.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

05. கண்ணே கலை மானே...

05. கண்ணே கலை மானே...

மூன்றாம் பிறை படத்தில் யேசுதாஸ் குரல் வளத்தில் மனதை இளக செய்யும் பாடல். இரவு நேர கார் பயணங்களில் இந்த பாடல் இல்லாமல் இருந்ததில்லை.

இந்த பாடலின் யூ- ட்யூப் லிங்க்

06. பூங்கதவே தாழ் திறவாய்

06. பூங்கதவே தாழ் திறவாய்

எனது அனைத்து பயணங்களிலும் தவிர்க்காத பாடல்களில் ஒன்று. எத்துனை முறை கேட்டாலும் சலிக்காது.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

07. மன்றம் வந்த தென்றலுக்கு...

07. மன்றம் வந்த தென்றலுக்கு...

மவுன ராகம் படத்தில் வரும் இந்த பாடல் ஒவ்வொரு முறையும் மனதை வருடிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

இந்த பாடலின் யூ-ட்யூப் லிங்க்

08. என்ன சத்தம் இந்த நேரம்...

08. என்ன சத்தம் இந்த நேரம்...

புன்னகை மன்னன் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம் பாடலும், நம் அனைவரையும் கவர்ந்த பாடல்.

இந்த பாடலின் யூ-ட்யூப் லிங்க்

09. ஜெர்மனியின் செந்தேன் மலரே...

09. ஜெர்மனியின் செந்தேன் மலரே...

உல்லாச பறவைகள் படத்தில் வரும் ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடலும் கேட்கும்போதே மனதுக்கு உற்சாகத்தை அள்ளித்தரும்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

 10. ஆகாய வெண்ணிலாவே...

10. ஆகாய வெண்ணிலாவே...

யேசுதாஸ், உமா ரமணன் குரல் வளமையில் இரவு நேர பயணங்களை இனிதாக்கும் பாடல்களில் ஒன்று.

இந்த பாடலின் யூ-ட்யூப் லிங்க்

11. அடி ஆத்தாடி...

11. அடி ஆத்தாடி...

கடலோர கவிதைகள் படத்தில் வரும் ஆடி ஆத்தாடி பாடல் ஒவ்வொரின் மனதிலும் துள்ளலை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

12. கண்மணி நீ வர காத்திருந்தேன்...

12. கண்மணி நீ வர காத்திருந்தேன்...

தென்றலே என்னை தொடு படத்தில் வரும் இந்த பாடலும் பயணக் களைப்பை நிச்சயம் போக்கும்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

13. குருவாயூரப்பா...

13. குருவாயூரப்பா...

புதுப் புது அர்த்தங்கள் படத்தில் வரும் குருவாயூரப்பா பாடலும் உங்களது பயணத்தை இனிமையாக்கும் என்பது கியாரண்டி. அதே படத்தில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடலையும் சேர்த்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

14. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...

14. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...

மண் வாசனை படத்தில் வரும் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலையும் மிஸ் பண்ணிவிடாதீர்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

15. மதுர மரிக்கொழுந்து வாசம்

15. மதுர மரிக்கொழுந்து வாசம்

கிராமிய மணம் வீசும் இந்த பாடல் நிச்சயம் தாளம் போட வைப்பதோடு, மனதுக்கு உற்சாகத்தையும் அள்ளித் தரும் இதன் ராகமும், இசைக்கோர்வையும்...

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

16. நீ பாதி, நான் பாதி கண்ணே

16. நீ பாதி, நான் பாதி கண்ணே

கேளடி கண்மணி படத்தில் வரும் நீ பாதி, நான் பாதி பாடலும் யேசுதாஸ்- உமா ரமணன் குரல்களில் மனதில் சிம்மாசனம் போடும்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

17. ஒரு ஜீவன் அழைத்தது...

17. ஒரு ஜீவன் அழைத்தது...

கீதாஞ்சலி படத்தில் வரும் ஒரு ஜீவன் அழைத்தது, நம் ஜீவனை இசைக்கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கடித்துவிடும்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

18. பனி விழும் மலர் வனம்

18. பனி விழும் மலர் வனம்

இந்த பாடல் இல்லாத லிஸ்ட் வேஸ்ட்டாகிவிடும் அல்லவா! நினைவெல்லாம் நித்யா படத்தில் எஸ்பிபி.,யின் மயக்கும் குரலில் கேட்டு மகிழலாம்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

19. பூவே செம்பூவே

19. பூவே செம்பூவே

சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வரும் இந்த இதமான பாடலுடன் இந்த செய்தித் தொகுப்பு முடிகிறது.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

20. ஊரு சனம் தூங்கிடுச்சே...

20. ஊரு சனம் தூங்கிடுச்சே...

இரவு நேர பயணத்தை இனிமையாக்கும் ஊரு சனம் தூங்கிடுச்சே பாடலையும் உங்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். எம்எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவான இந்த பாடலும் உங்கள் பயணத்தை இனிமையாக்கும்.

பாடலின் யூ-ட்யூப் லிங்க்

இது சாம்பிள்தான்

இது சாம்பிள்தான்

இசைஞானி இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களில் இதுதான் டாப் 20 என்று சொல்ல முடியாது. இந்த பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், உங்கள் காரில் இருக்க வேண்டிய தொகுப்பாக இது அமையும் என்று நம்புகிறோம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are compiled some good Ilayaraja melody songs for your car trips.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark