இந்த கோடை விடுமுறையில் கார், பைக்கில் செல்ல சிறந்த வழித்தடங்கள்!

Written By:

கோடை விடுமுறை துவங்கும் நிலையில், சுற்றுலாத் திட்டங்கள் மனதில் அலைமோத தொடங்கியிருக்கும். குறிப்பாக, கார், பைக் வைத்திருப்பவர்கள் இப்போதே, வெளியூர் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக தங்களது வாகனங்களை ஆயத்தப்படுத்த துவங்கியிருக்கின்றனர். எப்போதுமே செல்லும் இடங்களை தவிர்த்து, புதிய இடங்களுக்கு செல்லும் திட்டங்கள் பலரின் மனத் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

அவ்வாறு, வாழ்வில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய சில சிறந்த வழித்தடங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். ஆயுள் முழுவதும் உங்கள் மனதில் அந்த வழித்தடமும், பயணமும் நீங்கா இடத்தை பெறும் என்று நம்புகிறோம். நாட்டின் எந்த மூலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு ஏதுவாக, அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சிறந்த வழித்தடங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. பெங்களூர்- பந்திப்பூர்

01. பெங்களூர்- பந்திப்பூர்

கான்கிரீட் காடுகளை பார்த்து நொந்து போன கண்களுக்கு, பசுமை மாறா காடுகளுக்கு ஒரு விசிட் அடிக்கும் வாய்ப்பை இந்த வழித்தடம் கொடுக்கும். பெங்களூரிலிருந்து மைசூர் சென்று அங்கிருந்து ஊட்டி செல்லும் சாலையை பிடித்தால் பந்திப்பூரை அடைந்துவிடலாம். பெங்களூரிலிருந்து 235 கிமீ பயண தூரத்தில் அமைந்திருக்கும் பந்திப்பூருக்கு இந்த கோடை விடுமுறையில் ஒரு ட்ரிப் அடிக்க தவறவிடாதீர். புதிய அனுபவத்திற்கு உத்தரவாதம் தரும்.

Picture credit: Ravi Jandhyala/Flickr

 02. மணாலி- லே

02. மணாலி- லே

கடல் மட்டத்திலிருந்து 3 கிமீ முதல் 4 கிமீ உயரத்தில் செல்லும் இந்த வழித்தடம் 479 கிமீ தூரம் நீள்கிறது. இயற்கை அதிசயங்கள் பொதிந்து கிடக்கும் இமயமலைப் பிரதேசத்தில் பயணிக்க விரும்புவோர்க்கு இந்த வழித்தடம் நிச்சயம் பரவசத்தையும் வழங்கும். கோடை காலத்தில் பயணிக்க உகந்தது. இந்த 479 கிமீ தூரத்தை இரண்டு நாள் பயணமாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

Picture credit: Stephane Viau/Wiki Commons

03. மும்பை- புனே எக்ஸ்பிரஸ் வே

03. மும்பை- புனே எக்ஸ்பிரஸ் வே

நடிகர் மாதவன் முதல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வரை கோடீஸ்வர கார் மற்றும் ஹை எண்ட் பைக்குகள் வைத்திருப்பவர்களின் விருப்பமான சாலை இது. 93 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் பயணிக்கும் அனுபவம் நிச்சயம் ஒரு புத்துணர்வையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியதாக அமையும். குறிப்பாக, பழைய மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையும் சிறப்பான பயணத்தை வழங்கும். டூ வீலர்கள் மட்டுமே இந்த பழைய சாலையில் அனுமதிக்கப்படுகிறது. புனே- லோனவாலா இடையிலான தாபாக்கள் பிரபலமானவை. அவற்றில் ஒரு பிடி பிடிக்க மறவாதீர்.

Picture credit: Nagesh Kamath/Wiki Commons

04. அரக்கு வேலி- விசாகப்பட்டணம்

04. அரக்கு வேலி- விசாகப்பட்டணம்

கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்திருக்கும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் சாலையில் செல்வதற்கு மனதுக்கும், கண்களுக்கும் இதமான உணர்வை தரும். கார்ப்பரேட் அரசியலில் வெந்து தணிபவர்கள் இந்த சாலையில் ஒரு ட்ரிப் சென்று வந்தால், புத்துணர்வு பெற முடியும். இந்த சாலை 116 கிமீ நீளம் கொண்டது. போரா குகைகள், தடிபுடி அணைக்கட்டு போன்றவை இந்த சாலையில் பயணிப்பவர்கள் தவறவிடக்கூடாத இடங்கள்.

Picture credit: Adityamadhav83/Wiki Commons

05. சிம்லா- மணாலி

05. சிம்லா- மணாலி

இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் இருந்து மண்டி வழியாக மணாலி செல்லும் வழித்தடமும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருகிகறது. 250 கிமீ தூரமுடைய இந்த சாலை வாழ்வில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டிய சாலையாக இருக்கும். குறிப்பாக, பைக்கில் பயணிக்க விரும்பும் இளைஞர்கள் தவறவிடக்கூடாத சாலை.

Picture credit: indianholiday

06. சென்னை- பாண்டிச்சேரி

06. சென்னை- பாண்டிச்சேரி

ஈசிஆர் என்றாலே இதுதான் என்பதுபோல ஒரு பிம்பத்தை வைத்திருக்கும் இந்த வழித்தடம் எல்லோருக்கும் விருப்பமானதுதான். 160 கிமீ தூரமுடைய இந்த வழித்தடத்தில் 3 மணிநேரத்தில் பயணிக்கலாம். கடற்கரையை தொட்டு செல்லும் இந்த சாலையும் மனதில் இருக்கும் இறுக்கங்களை தொலைத்து வரும் இடமாகவே சென்னைவாசிகளுக்கு அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அதிவேக வாகனங்களால் விபத்து ஆபத்து அதிகம் உள்ள சாலை என்ற அவப்பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கிறது. மகாபலிபுரம், பாண்டிச்சேரி என ஒரே நாள் அல்லது வார இறுதி சுற்றுலா செல்ல விரும்புவோர்க்கும் ஏற்ற இடங்களை கொண்ட வழித்தடம்.

Picture credit: Soham Banerjee/Wiki Commons

07. குவஹாட்டி- தவாங்

07. குவஹாட்டி- தவாங்

வடகழிக்கு மாநிலங்களின் இயற்கை எழிலையும், அபாயம் நிறைந்த சாலைகளில் த்ரில் பயணத்தையும் விரும்புவோர்க்கு, இந்த சாலை மிகச்சிறப்பானதாக இருக்கும். 520 கிமீ தூரம் கொண்ட இந்த சாலையில் பல சவாலான மலைப்பகுதிகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அதேநேரத்தில், வழிநெடுக பரந்துவிரிந்து கிடக்கும் மலைத்தொடர்களும், இயற்கை அற்புதங்களும் இந்த வழித்தட பயணத்தை உங்கள் வாழ்வின் இனிமையான தருணமாக உணர வைக்கும்.

Picture credit: BOMBMAN/Flickr

08. புரி - கோனார்க்

08. புரி - கோனார்க்

ஒடிஷாவில் உள்ள புரி நகரிலிருந்து, சூரிய கோயில் அமைந்திருக்கும் கோனார்க் நகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-203-ம் உங்கள் கேமரா கண்களை இமைக்க விடாமல் செய்யும் கொள்ளை அழகை கொண்டிருக்கிறது. கூடாரம் போல இருமருங்கிலும் அமைந்திருக்கும் மரங்களும், நேர்கோட்டு சாலையும் நிச்சயம் புதுவிதமான அனுபவத்தை வழங்கும். 36 கிமீ தூரம் கொண்ட இந்த சாலையில் பயணிக்க தவறவிடாக்கூடாது.

Picture credit: goibibo

09. யமுனா எக்ஸ்பிரஸ் சாலை

09. யமுனா எக்ஸ்பிரஸ் சாலை

கட்டுத்தலையிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகள் போல, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த டெல்லிவாசிகள், இந்த சாலையில் ஒரு அதிவேக பயணத்தை மேற்கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். டெல்லியிலிருந்து மதுரா வழியாக ஆக்ராவை இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிக்கும் அனுபவம் நிச்சயம் மனதுக்கு இதமானதொரு சுகத்தை தர வல்லது. டெல்லி- ஆக்ரா இடையிலான 165 கிமீ தூரத்தை வெறும் 2 மணிநேரத்தில் கடந்துவிடும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த சாலையில் பயணிக்கும்போது காரின் டயர் அதிக வெப்பமாகும் என்பதால், காற்றழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். டெல்லியிலிருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையை பிடிப்பதற்கு ஒரு மணிநேரம் பிடிக்கும் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Picture credit: Ian Brown/Wiki Commons

10. ஜெய்பூர் - ஜெய்சால்மர்

10. ஜெய்பூர் - ஜெய்சால்மர்

ராஜஸ்தானின் உண்மையான கலாச்சாரம், நிலவமைப்பை நேரடியாக அனுபவிக்க வேண்டுவோர் பிங்க் சிட்டி என அழைக்கப்படும் ஜெய்சால்மரிலிருந்து, ஜோத்பூர் வழியாக பாலைவன நகரம் ஜெய்சால்மருக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம். ஜெய்சால்மரில் தங்குவதற்கு சிறப்பான ஓட்டல்களும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இந்த பயணத்தை உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும்.

Picture credit: ghumakkar.com

11. ஷில்லாங்- சிரபுஞ்சி

11. ஷில்லாங்- சிரபுஞ்சி

ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு பெறும் சிரபுஞ்சியையும், ஷில்லாங் நகரையும் இணைக்கும் 53 கிமீ தூரத்திலான வழித்தடமும் மிக மிக உன்னதமான உணர்வை அளிக்கும். அதிகபட்சம் 2 மணி நேரம் பிடிக்கும் இந்த வழித்தடம் எல்லோருக்கும் பிடிக்கும். காரில் செல்வது சாலச்சிறந்தது.

Picture credit: deepgoswami/Flickr

 12. மும்பை- கோவா

12. மும்பை- கோவா

இந்திய சாலை பயணங்களின் தந்தை என சிறப்பு பெற்ற வழித்தடம். இந்திய பைக் திருவிழாவிற்கு மும்பையிலிருந்து கோவாவிற்கு தனது உயர் வகை பைக்குகளில் ஒன்றில் பயணித்து வரும் எமது மும்பை நிருபர் அஜிங்கியாவிற்கு பிடித்தமான வழித்தடமும் இதுவே. காலையில் மும்பையில் புறப்பட்டு, மாலையில் கோவாவில் நடைபெறும் இரவு கேளிக்கை விருந்துகளில் பங்கெடுப்பதற்கு வார இறுதிகளில் பயணிக்கும் இளைஞர்கள் ஏராளம். வழிநெடுகிலும் உள்ள சிறந்த உணவகங்கள் வயிற்றுக்கும் நிறைவையும், இயற்கை அளித்த அற்புத பரிசுகளின் ஊடே பயணிக்கும் இந்த சாலையை மனதுக்கு நிறைவையும் தரும்.

Picture credit: Rajaramraok/Wiki Commons

13. டெல்லி- ஜெய்பூர்

13. டெல்லி- ஜெய்பூர்

இந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வட இந்திய நகரங்களான டெல்லி- ஜெய்பூரை இணைக்கும் வழித்தடமும் மிகச்சிறப்பானது. நாட்டிலேயே சிறப்பான பராமரிப்பில் இருக்கும் சாலையாகவும் இது குறிப்பிடப்படுகிறது. கலாச்சார மாறுபாடுகளை உணர்ந்து கொள்ளும் பயணமாகவும், புதிய உற்சாகத்தை அளிக்கும் ஓட்டுதல் சுகம் நிறைந்த பயணமாகவும் இருக்கும்.

Picture credit: Dinesh Bareja/Wiki Commons

14. கொல்கத்தா- திகா

14. கொல்கத்தா- திகா

கிழக்கு இந்திய மக்களின் முக்கியமான வார இறுதி சுற்றுலாத் தலமாக விளங்கும் திகாவையும், கொல்கத்தாவையும் இணைக்கும் இந்த சாலையும் ரம்மியமான பயண அனுபவத்தை வழங்கும். 180 கிமீ தூரமுடைய இந்த சாலையில் ஏராளமான தாபாக்கள் உள்ளன. மூன்று மணிநேரத்தில் செலலக்கூடியதாக இருக்கிறது.

Picture credit: T.R.B./makemytrip.pub

15. ஜெய்பூர் - ரன்தம்போர்

15. ஜெய்பூர் - ரன்தம்போர்

ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலை எண் 24ல்தான் இப்போது பயணிக்க போகிறோம். அழகான வழித்தடங்களில் ஒன்றாகவும், வழியில் வன விலங்கு சரணாலயத்தின் ஊடாக செல்லும் இந்த சாலையும் நிச்சயம் புதிய அனுபவத்தை வழங்கும். 145 கிமீ தூரம் கொண்ட இந்த சாலையை கடப்பதற்கு 3 மணிநேரம் பிடிக்கும். இந்த மூன்று மணிநேரமும், உங்கள் வாழ்வின்16. சந்தோஷ நினைவுகளாக பதியும்.

Picture credit: DJ SINGH/Flickr

16. பெங்களூர்- ஊட்டி

16. பெங்களூர்- ஊட்டி

பெங்களூரிலிருந்து மைசூர் வழியாக ஊட்டி செல்லும் வழித்தடமும் இயற்கை எழில் கொஞ்சும் சாலையாக இருக்கிறது. 266 கிமீ தூரத்திற்கான இந்த சாலையில் ஏராளமான உணவு விடுதிகளும் உள்ளன. மேலும், இந்த வழித்தடத்தில் மைசூர் மற்றும் ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டு வர முடியும்.

Picture credit: Vikas Rana/Wiki Commons

17. டெல்லி - சிம்லா

17. டெல்லி - சிம்லா

வட இந்தியாவின் மிக முக்கிய கோடைவாசஸ்தலமான சிம்லாவிற்கு டெல்லியிலிருந்து ஒரு டிரிப் அடிப்பதும் வாழ்வில் மறக்க முடியாத பயண அனுபவத்தை வழங்கும். 358 கிமீ தூரமுடைய இந்த வழித்தடம் மனதுக்கு இதமான அனுபவத்தை வழங்கும். குறைந்தது 7 முதல் 8 மணிநேரத்தில் பயணத்தை நிறைவு செய்யலாம். வார இறுதி பயணத்துக்கு ஏற்றது.

Picture credit: Rainer Jehl/Wiki Commons

18. பெங்களூர் - கோவா

18. பெங்களூர் - கோவா

சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கோவா செல்லும் வழித்தடமும் வாழ்வின் உன்னதத்தை உணர வைக்கும் தருணமாக அமையும். கார், பைக் என இரண்டிற்கும் சிறப்பான சாலையாக கூறலாம்.

Picture credit: Vitor Pamplona/Flickr

19. கொல்கத்தா- புரி

19. கொல்கத்தா- புரி

கொல்கத்தாவிலிருந்து புரி செல்லும் சாலையும் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தும். கோரக்பூர், பலசூர், பிப்லி, கட்டாக் மற்றும் பத்ராக் வழியாக செல்வது மிகுந்த உற்சாகத்தை தரும் வழித்தடமாக இருக்கும். 580 கிமீ தூரமுடைய இந்த வழித்தட பயணம் 10 மணி நேரம் பிடிக்கும். புரியை அடைந்ததும், அங்குள்ள பீச்சிற்கு ஒரு விசிட் அடிப்பதுடன், சுடச்சுட பரிமாறப்படும் நண்டு வறுவலையும் ருசிக்க தவறாதீர்.

Picture credit: Os Rúpias/Flickr

20. ஆமதாபாத்- கட்ச்

20. ஆமதாபாத்- கட்ச்

பாரம்பரியத்தையும், வித்தியாசமான மண்வாசனையையும் கொண்ட வழித்தடமான இதில் பயணிக்கும்போது ஒரு முழுமையான பயண அனுபவத்தையும் பெற முடியும். இதுவும் வார இறுதி பயணங்களுக்கு சிறந்ததது. 400 கிமீ தூரமுடைய இந்த வழித்தடத்தை கடப்பதற்கு 11 மணிநேரம் பிடிக்கும். எனவே, அதிகாலையிலேயே பயணத்தை துவக்கிவிடுவது அவசியம்.

Picture credit: Nagarjun Kandukuru/Wiki Commons

21. மும்பை- மவுண்ட் அபு

21. மும்பை- மவுண்ட் அபு

நீண்ட விடுமுறையை கழிக்க விரும்பும் மும்பைவாசிகளுக்கு இந்த வழித்தட பயணம் சிறப்பானதாக அமையும். மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண்-8 ஐ பிடித்து, குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் ஆமதாபாத் வழியாக ராஜஸ்தானிலுள்ள மவுண்ட் அபுவை அடையலாம். 745 கிமீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தை 13 நேரத்தில் அடையும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் பல மாறுபட்ட கலாச்சாரத்தை சுவாசித்துக் கொண்டே செல்வதற்கு ஏற்ற வழித்தடம்.

Picture credit: Utsav Verma/Flickr

22. சென்னை- மூணார்

22. சென்னை- மூணார்

கோடையில் கொடுங்கோலனாக மாறிவிடும் சூரிய பகவானின் உக்கிரத்திலிருந்து விடுபட விரும்பும் சென்னைவாசிகளுக்கு இந்த வழித்தடம் சிறப்பானதாக அமையும். கிட்டத்தட்ட 600 கிமீ தூரத்திற்கு நீளும் இந்த பயணமும், உங்கள் வாழ்வின் மகத்தான தருணங்களை பெற வழிவகுக்கும்.

Picture credit: Rameshng/Wiki Commons

23. பாம்பன் பாலம்

23. பாம்பன் பாலம்

பாம்பன் பாலத்தில் கார், பைக்கில் செல்லும் அனுபவமே அலாதி சுகம். விவரிக்க வார்த்தைகளில்லை. நிச்சயம் இந்த முறை பாம்பன் பால பயணத்தையும், தனுஷ்கோடியையும் தொடுவதற்கு மறவாதீர்.

Picture credit: Drajay1976/Wiki Commons

24. சிம்லா- மணாலி

24. சிம்லா- மணாலி

சிம்லாவிலிருந்து கின்னாவூர்- ஸ்பிதி வழியாக மணாலி செல்லும் வழித்தடமும் மிகவும் த்ரில்லான அனுபவத்தை வழங்கும். இந்த வழித்தடம் குறித்த தகவல்களை ஏற்கனவே நாம் விரிவாக வழங்கியிருக்கிறோம். சாகசப் பயணம் செல்வோர்க்கு சிறந்த வழித்தடமாக இருக்கும்.

Picture credit: India Untravelled/Flickr

25. கேங்டாக்- நது லா பாஸ்

25. கேங்டாக்- நது லா பாஸ்

இந்தியர்கள் பலர் நினைத்து பார்த்திராத இயற்கை பொக்கிஷங்களை கொண்டிருக்கிறது வட கிழக்கு மாநிலங்கள். அதில், கேங்டாக்கிலிருந்து சோம்கோ ஏரி மற்றும் நது லா கணவாய் இடையிலான வழித்தடமும் இந்தியர்கள் சென்று வர வேண்டிய வழித்தடமாக இருக்கிறது. இதுவரை நீங்கள் உணர்ந்திராத புதிய ஓட்டுதல் அனுபவத்தை இந்த சாலை வழங்கும் என ஆணித்தரமாக அடித்துக் கூறலாம்.

Picture credit: sikkimstdc.com

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலைகள்!

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 25 Best Road Trips in India For Car And Bike Owners.
Story first published: Monday, March 21, 2016, 13:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark