அம்பானி குடும்பம் எல்லாம் கிடையாது! இந்தியாவின் காஸ்ட்லியான கார் யார் கிட்ட இருக்குது தெரியுமா?

காஸ்ட்லியான கார்களை வாங்க வேண்டும் என்றால் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? நாம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது காஸ்ட்லியான காரை வாங்கி அதில் பயணம் செய்ய வேண்டும் என விரும்புவோம். ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அதன் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக பலர் அதை வாங்க முடியாமல் போகிறது. சில பெரிய பிசினஸ்மேன் அல்லது செலிபிரிட்டிகள் மட்டுமே இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை வாங்குகிறார்கள். இப்படியாக இந்தியாவில் அதிக விலை மதிப்பு கொண்ட கார்கள் யாரிடம் இருக்கிறது. அது என்ன கார் என்ற விபரங்களை இங்கே காணலாம்.

பென்ட்லி முஸலின் இடபிள்யூபி : இந்தியாவிலேயே காஸ்ட்லியான காரை ஒருத்தர் வைத்திருக்கிறார் என்றால் அது பிரிட்டிஷ் பயாலஜிஸ்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஎஸ் ரெட்டி தான். இவர் பென்டிலி நிறுவனத்தின் முஸலின் என்ற சொகுசு செட்டான் கார் ஒன்றை வைத்து இருக்கிறார்.

top 5 costly cars in india

இந்த கார் ரூபாய் 14 கோடி என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதில் 6.75 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 56 எச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தான் இந்தியாவின் காஸ்ட்லியான காராகும்.

ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் சீரீஸ் VIII இடபிள்யூபி: காஸ்ட்லியான கார்களை பற்றி பேசுகிறோம் என்றால் இந்தியாவில் அம்பானி குடும்பத்தை நாம் விட்டுவிட முடியாது. கண்டிப்பாக அவர்களிடம் ஒரு கார் இருக்கும் இந்தியாவிலேயே அதிக காஸ்ட்லியான கார் அம்பானி குடும்பத்திடம் தான் இருக்கிறது. இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பாந்தோம் சிரீஸ் 8 இடபிள்யூபி காராகும்.

top 5 costly cars in india

இந்த கார் ரூபாய் 13.5 கோடி என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 563 பிஎச்பி பவரையும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.4 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ளாக் பேட்ஜ்: இந்தியாவின் மூன்றாவது அதிக விலை உயர்ந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் ப்ளாக்பாட்ஜி என்ற கார்தான் இந்த கார் ரூ 12.25 கோடி என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகரான இம்ரான் அஸ்மி என்பவர் தான் இந்த காரை சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த காரில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன.

top 5 costly cars in india

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 6.75 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 600 பிஎஸ் பவரையும் 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண காரை விட இது 29 எச்பி பவரும், 50 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்துகிறது.

இந்த காரில் இசட்எஃப் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது.

மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர்: இந்தியாவின் நான்காவது அதிக காஸ்ட்லி காரான மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் கார் தான் இருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நசீர் கான் என்பவர் தான் இந்த காரை வைத்திருக்கிறார். இந்த காரின் விலை ரூ12 கோடி ஆகும். நசீர் ஏகப்பட்ட காஸ்ட்லியான காரை வைத்திருப்பதில் பெயர் பெற்றவராக இருக்கிறார்.

நசீர் வைத்திருக்கும் காரில் அதிக காஸ்ட்லியான கார் இது தான் இவர் எம்எஸ்ஓ வால்கனோ ரெட் என்ற நேரத்தில் இந்த காரை வாங்கி வைத்திருக்கிறார். இவர் இந்த காரில் முன்பு நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் இந்தியா முழுவதும் வைரலாக பரவியது. பலர் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஃப் 600 கார்டு: இந்தியாவின் ஐந்தாவது காஸ்ட்லியான காராக அம்பானி அம்பானி குடும்பத்துடன் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 கார்டு கார் இருக்கிறது. அம்பானியிடம் இருக்கும் காஸ்ட்லியான கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார் ரூபாய் 10 கோடி என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா வளர்ந்து வரும் நாடு என்றாலும் இந்தியாவில் ஏகப்பட்ட பணக்காரர்கள் இருக்கிறார்கள். அதனால் உலகில் உள்ள காஸ்ட்லியான கார்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன. அதன்படி இந்தியாவில் அதிக விலை மதிப்புள்ள கார்களின் பட்டியல் இதுதான். அதன் உரிமையாளர்கள் எல்லாம் இந்தியாவில் பணக்காரர்களாக இருக்கிறார்கள். இந்த கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 18:01 [IST]
English summary
Top 5 costly cars in india mukesh ambani to emraan hashmi
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X