5 லட்சம் ஆன்ரோடு விலையில், உங்க குடும்பத்திற்கான டாப் -5 கார்கள்!

By Saravana

குடும்பத்தினரை பத்திரமாக வெளியில் அழைத்து செல்வதற்கு இருசக்கர வாகனங்களைவிட கார்களே சிறந்தது என்ற மனநிலையில் பலர் கார் வாங்க முனைப்பு காட்டுவர்.

ரூ.5 லட்சம் என்ற முடிவோடு கார் வாங்க களமிறங்கும் பலர் முதல் முறையாக கார் வாங்கும் முயற்சியில் இறங்குவதால், மார்க்கெட்டில் இருக்கும் எண்ணற்ற மாடல்களில், சிறந்த காரை தேர்வு செய்து வாங்குவதற்கு சிரமப்படுவர். அவர்களுக்கு உதவும் வகையில், குடும்பத்தினருக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட 5 லட்சத்திற்குள் விலை கொண்ட 5 சிறந்த கார் மாடல்களை இந்த பட்டியலில் தொகுத்து வழங்கியுள்ளோம்.


பட்டியல்

பட்டியல்

டிசைன், இடவசதி, சிறப்பம்சங்கள், பேஸ் மாடலின் சென்னை ஆன்ரோடு விலை ஆகியவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

5.ஃபோர்டு ஃபிகோ

5.ஃபோர்டு ஃபிகோ

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.51 லட்சம்(பெட்ரோல்)

ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் மாடல் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் வாங்குவதற்கான சிறந்த மாடல். டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், இன்டிரியர், இடவசதி, விலை என அனைத்து விதத்திலும் உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக வசீகரித்துவிடும். சில மாதங்களில் இதன் புதிய மாடல் வருகிறது என்பதுதான் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். பின் வரிசையில் பவர் விண்டோஸ் கிடையாது. தற்போது இருப்பு இருக்கும் கார்களுக்கு அதிக டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்புள்ளது. கூடுதல் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 ஃபோர்டு ஃபிகோ தொடர்ச்சி...

ஃபோர்டு ஃபிகோ தொடர்ச்சி...

மைலேஜ்: 15.6 கிமீ/லி

ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் மாடலில் 70 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஃபோர்டு ஃபிகோ சிறப்பம்சங்கள் விபரம்

4. நிசான் மைக்ரா ஆக்டிவ்

4. நிசான் மைக்ரா ஆக்டிவ்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.79 லட்சம்

ரூ.5 லட்சத்திற்குள் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் சிறந்த மாடல். டிசைன், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் நிறைவான மாடல். ஆனால், நிசான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை பாதகமாக அமைகிறது. டாப் வேரியண்ட்டில், இபிடி, ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஏர்பேக் கொண்டதாக கிடைக்கிறது. அடுத்த ஸ்லைடில் கூடுதல் விபரங்களை காணலாம்.

நிசான் மைக்ரா ஆக்டிவ் தொடர்ச்சி...

நிசான் மைக்ரா ஆக்டிவ் தொடர்ச்சி...

மைலேஜ்: 19.49 கிமீ/லி

நிசான் மைக்ரா ஆக்டிவ் காரில் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 251 லிட்டர் பூட்ரூம் கொள்ளளவு உள்ளதுடன், 41 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. நிசான் மைக்ரா ஆக்டிவ் காரின் அனைத்து சிறப்பம்சங்களையும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று காணலாம்.

நிசான் மைக்ரா ஆக்டிவ் சிறப்பம்சங்கள் விபரம்

3. ஹூண்டாய் ஐ10

3. ஹூண்டாய் ஐ10

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.68 லட்சம்

நம்பகமான பட்ஜெட் கார் மாடல். டிசைன், இடவசதி, மைலேஜ், விலை, பிராண்டு மதிப்பு என பல ப்ளஸ் பாயிண்ட்டுகளை கொண்ட மாடல். ரீசேல் மதிப்பிலும் சிறப்பாக இருந்து வரும் இந்த கார் பெட்ரோல் மட்டுமின்றி, எல்பிஜி மாடலிலும் கிடைக்கிறது. டாப் வேரியண்ட்டில் கூட ஏபிஎஸ், ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்பது குறையாக கூறலாம். கூடுதல் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஹூண்டாய் ஐ10 தொடர்ச்சி...

ஹூண்டாய் ஐ10 தொடர்ச்சி...

மைலேஜ்: 19.81 கிமீ/லி

இந்த காரில் 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. 225 லிட்டர் கொள்ளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. ஹூண்டாய் ஐ10 காரின் அனைத்து சிறப்பம்சங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ள கீழே இணைப்பை சொடுக்கவும்.

ஹூண்டாய் ஐ10 சிறப்பம்சங்கள் விபரம்

 2. மாருதி வேகன் ஆர்

2. மாருதி வேகன் ஆர்

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.35 லட்சம்

சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற சிறந்த மாடல் மாருதி வேகன் ஆர். ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்குபவர்களின் முதல் சாய்ஸ் என்பது இதன் விற்பனையிலிருந்தே காணலாம். சிறப்பான ஹெட்ரூம், மைலேஜ், வசதிகள், விலை ஆகியவற்றுடன் மாருதியின் பரந்துவிரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இதனை முன்னிறுத்தும் அம்சங்கள். பெட்ரோல், சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கிறது. மினி வேன் போன்ற இதன் டிசைன் அனைவரையும் கவரும் என்று சொல்வதற்கில்லை. கூடுதல் தகவல்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மாருதி வேகன் ஆர் தொடர்ச்சி

மாருதி வேகன் ஆர் தொடர்ச்சி

மைலேஜ்: 20.51கிமீ/லி

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும்,90 என்எம் டார்க்கையும் வழங்கும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட வேரியண்ட்டும் உள்ளது. முழுமையான விபரங்களை கீழே உள்ள இணைப்பிற்கு சென்று காணலாம்.

மாருதி வேகன் ஆர் சிறப்பம்சங்கள் விபரம்

 1. மாருதி செலிரியோ

1. மாருதி செலிரியோ

சென்னை ஆன்ரோடு விலை: ரூ.4.43 லட்சம்

மார்க்கெட்டில் தற்போது சிறிய குடும்பத்தினருக்கான பெஸ்ட் சாய்ஸ் மாருதி செலிரியோ. அதிக மைலேஜ், விலை, ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், மாருதி விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவை சிறப்பம்சங்களாக கூறலாம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கிறது. வழக்கம்போல் இது அனைத்து தரப்பினரையும் கவரும் டிசைனாக கூற முடியாது. கூடுதல் விபரங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மாருதி செலிரியோ தொடர்ச்சி...

மாருதி செலிரியோ தொடர்ச்சி...

மைலேஜ்: 23.1கிமீ/லி

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. 235 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த காரின் முழுமையான சிறப்பம்சங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

மாருதி செலிரியோ சிறப்பம்சங்கள் விபரம்

More from DriveSpark

Article Published On: Friday, January 9, 2015, 17:02 [IST]
English summary

 Here are the top 5 family cars in India around 5 lakh budget. Have a look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+