நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஓடும் அதிசய ரயில்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

விமானங்களை போன்று, ரயில்களால் கடல்களின் மீது பறக்க முடியாது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் விமானங்களுக்கு இணையான வேகத்தில் ரயில்களால் இயங்க முடியாது என்பது இதற்கு அர்த்தம் கிடையாது. இன்றைய மாடர்ன் உலகத்தில், ஒரு சில ரயில்கள் விமானங்களுக்கு இணையான வேகத்தில் இயங்குகின்றன.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அப்படி அதிவேகத்தில் இயங்கும் உலகின் டாப்-5 ரயில்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம். உலகின் டாப்-5 அதிவேக ரயில்கள் குறித்த இந்த ருசிகரமான தகவல்களை இதற்கு முன்னர் நீங்கள் எங்கும் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். சரி, வாருங்கள் இனி செய்திக்குள் செல்லலாம்.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: Peter Christener/Wiki Commons

5. டால்கோ 350, மணிக்கு 217.4 மைல்கள், ஸ்பெயின் (Talgo 350, 217.4 mph, Spain)

ஸ்பெயினின் டால்கோ 350 ரயில், அதிகபட்சமாக மணிக்கு 217.4 மைல்கள் என்ற வேகத்தில் இயங்க கூடியது. மாட்ரிட் மற்றும் பார்சிலோனா ஆகிய நகரங்களுக்கு இடையே டால்கோ 350 ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் இருக்கை வசதியானது, க்ளப் க்ளாஸ், ஃபர்ஸ்ட் க்ளாஸ், பிஸ்ட்ரோ க்ளாஸ் மற்றும் கோச் க்ளாஸ் என்று 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: FlyAkwa/Wiki Commons

டால்கோ 350 ரயிலின் அனைத்து க்ளாஸ்களிலும், ஃபுட்ரெஸ்ட்களுடன் சாய்ந்து கொள்ள கூடிய வகையில் சௌகரியமான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பயணிகள் அலுப்பு தெரியாமல் பயணிக்க முடியும். அத்துடன் இந்த ரயிலில் ஒவ்வொரு இருக்கைக்கும் வீடியோ மற்றும் ஆடியோ டிவைஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: Sebastian Terfloth/Wiki Commons

4. சீமென்ஸ் வெலாரோ இ/ஏவிஎஸ் 103, மணிக்கு 217.4 மைல்கள், ஸ்பெயின் (Siemens Velaro E/AVS 103, 217.4 mph, Spain)

பார்சிலோனா மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 217.4 மைல்கள் என்ற வேகத்தில் இயங்கும் திறன் இந்த ரயிலுக்கு உண்டு. இதன்மூலம் பார்சிலோனா நகரில் இருந்து மாட்ரிட்டிற்கு வெறும் 2 மணி 30 நிமிடங்களில் இந்த ரயில் சென்று விடும். இதே தொலைவை காரில் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரம் வரை ஆகும்.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: Henry1500/Wiki Commons

அப்படி என்றால், இந்த ரயில் செல்லும் வேகத்தை யூகித்து கொள்ளுங்கள். சோதனை செய்யப்படும்போதே, இந்த ரயில் மணிக்கு 250.84 மைல்கள் என்ற டாப் ஸ்பீடை எட்டி அனைவரையும் மிரள வைத்தது. ஸ்பெயின் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ரயில் சேவையை வழங்கி வருகிறது. இந்த ரயிலில் 404 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: Hoff1980/Wiki Commons

3. ஏஜிவி இட்டாலோ, மணிக்கு 223.6 மைல்கள், இத்தாலி (AGV Italo, 223.6 mph, Italy)

ஐரோப்பிய கண்டத்தில் அதிவேகத்தில் இயங்க கூடிய ரயில் ஏஜிவி இட்டாலோதான். அதிகபட்சமாக மணிக்கு 223.6 மைல்கள் வேகத்தில், ஏஜிவி இட்டாலோ பயணம் செய்யும். ஆனால் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதற்கட்ட சோதனைகளின்போது மணிக்கு 356.6 மைல்கள் வேகத்தில் பயணம் செய்து, ஏஜிவி இட்டாலோ புதிய சாதனையை படைத்தது.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: Rob Dammers/Wiki Commons

பிரான்ஸை சேர்ந்த அல்ஸ்ட்டம் (Alstom) நிறுவனம் இந்த ரயிலை உருவாக்கியுள்ளது. இத்தாலியை சேர்ந்த நுவோ டிராஸ்போர்ட்டோ வியாகிடோரி (Nuovo Trasporto Viaggiatori - NTV) நிறுவனம், அல்ஸ்ட்டம் நிறுவனத்திடம் இருந்து, 650 மில்லியன் யூரோ மதிப்பில், 25 ஏஜிவி ரயில்களை வாங்குவதற்கு, கடந்த 2008ம் ஆண்டு ஆர்டர் செய்தது.

ஆனால் அதற்கு முன்னதாக, 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதமே, ஏஜிவி இட்டாலோ ரயில் சேவை தொடங்கப்பட்டு விட்டது. இத்தாலியின் ரோம் மற்றும் நேப்பிள்ஸ் நகரங்களுக்கு இடையே, இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஏஜிவி இட்டாலோ ரயில்களில் பயணம் செய்தால், ரோமில் இருந்து நேப்பிள்ஸ் நகருக்கு வெறும் 1 மணி நேரத்தில் சென்று விடலாம். தொலைவு 140 மைல்கள்.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: N509FZ/Wiki Commons

2. ஹார்மோனி சிஆர்எச் 380ஏ, மணிக்கு 236.12 மைல்கள், சீனா (Harmony CRH 380A, 236.12 mph, China)

சீனாவின் ஹார்மோனி சிஆர்எச் 380ஏ ரயில்தான், உலகில் அதிவேகத்தில் இயங்கும் இரண்டாவது ரயில். இது மணிக்கு 236.12 மைல்கள் வேகத்தில் இயங்க கூடியது. சீன ரயில்வே துறை, கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஷாங்காய்-நன்ஜிங் வழித்தடத்தில், ஹார்மோனி சிஆர்எச் 380ஏ ரயிலை வழக்கமான சேவையில் ஈடுபடுத்தியது.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: Jucember/Wiki Commons

அதிவேகத்தில் சென்றாலும், இந்த ரயிலில் அதிர்வுகள் இருக்காது. ஒரே நேரத்தில் 494 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். ஒவ்வொரு பயணிக்கும் ரீடிங் லேம்ப், பவர் போர்ட், எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ரயிலில் டிரைவரின் கேபினுக்கு அருகே தனியாக ஒரு பகுதி இருக்கும். இங்கிருந்து விஐபிக்கள் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க முடியும்.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: kallerna/Wiki Commons

1. ஷாங்காய் மாக்லேவ், மணிக்கு 267.8 மைல்கள், சீனா (Shanghai Maglev, 267.8 mph, China)

உலகிலேயே அதிவேக ரயில் என்ற பெருமையை ஷாங்காய் மாக்லேவ் பெறுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 267.8 மைல்கள் வேகத்தில் செல்லும் திறனை ஷாங்காய் மாக்லேவ் பெற்றுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து தனது அதிகபட்ச வேகமான மணிக்கு 267.8 மைல்கள் என்ற வேகத்தை வெறும் நான்கே நிமிடங்களில் எட்டி விடக்கூடிய திறன் ஷாங்காய் மாக்லேவ் ரயிலுக்கு உள்ளது.

நம்பவே முடியல... சீனா, இத்தாலியில் ஓடும் அதிசய ரயில்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

Image Courtesy: JZ/Wiki Commons

ஷாங்காய் மாக்லேவ் ரயிலின் பொது சேவை கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்கியது. 574 பயணிகள், ஷாங்காய் மாக்லேவ் ரயிலில் பயணம் செய்ய முடியும். தைவான், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள்தான், உலகில் அதிவேகத்தில் இயங்க கூடிய டாப்-5 ரயில்களின் பட்டியலில் வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 5 Fastest Trains In The World - Interesting Facts. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X