சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

பப்ஜி மற்றும் ஃப்ரீ ஃபயர் கேம்களைப் போல சுவாரஷ்யமான அனுபவத்தை வழங்கும் ஐந்து கார் ரேஸ் பற்றிய தகவலை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த வைரஸ் மிக எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவி விடும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், உலக நாடுகள் அனைத்தும் அதன் மக்களை மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றது.

இதே நிலைதான் தற்போது இந்தியாவிலும் காணப்படுகின்றது. உலக நாடுகளில் கோர தாண்டவத்தைக் காட்டிவரும் கொரோனா, தற்போதே அதன் தீவிரத்தை இந்தியாவில் காண்பிக்க தொடங்கியிருக்கின்றது.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

ஆகையால், முன்னெச்சரிக்கையாக மக்களை கொரோனாவின் பிடியில் காக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்திய அரசின் இந்த போர்க்கால நடவடிக்கையினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சுறு சுறுப்புடன் வெளியே சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த இளைஞர்கள் தற்போது மூக்கனாங் கயிறு போடப்பட்ட காலைகளைப் போல் வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

இதே நிலைதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை. கொரோனா அச்சம் காரணமாக தொலைக்காட்சி நாடகங்களும் தற்காலிக ரத்தாகியிருக்கின்றன. இதனால், இல்லத் தரசிகள் மிகுந்த வேதனைத் தவித்து வருகின்றனர். மேலும், திரைப்படங்களும் போட்டதைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதுபோன்ற பொழுதுபோகாத நேரங்களில் ஒவ்வொரு நொடியையும் விறுவிறுப்பாக கழிக்கும் வகையில் இணையத்தில் கிடைக்கும் டாப்5 ரேஸ் கேம்களைப் பற்றிய தகவலை இந்த பார்க்கலாம்.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

ரியல் ரேஸிங் 3 (Real Racing 3)

மொபைல் போனுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்ப்டட மிகவும் சூப்பரான பந்தய விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேஸிங் கேம் கடந்த ஏழு வருடங்களாக பயன்பாட்டில் இருக்கின்றது. இருப்பினும், தற்போது வரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த கேமை விளையாடி வருகின்றனர். இந்த கேமில் அதிக தொழில்நுட்பம் பயன்படுத்தியிருப்பதன் காரணத்தினாலயே இந்தளவிற்கு எண்ணிக்கையிலான பயனர்களை இந்த கேம் பெற்று வருகின்றது. இத்துடன் கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் பிரத்யேக 3டி தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

இந்த கேமில் நிஜ பந்தய உலகில் இருப்பதைப் போன்று 19 ரேஸிங் ட்ராக்குகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 40 ட்ராக் சுற்றுகள், 43-கார்கள் 250 வெரைட்டிகளில் விளையாட்டிற்கு கிடைக்கின்றது. தொடர்ந்து, கேமின் மூலம் நம்மால் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத விலையுயர்ந்த கார்களை ரியல் ரேஸிங் 3இல் நம்மால் இயக்க முடியும். அந்தவகையில் போர்ஸ், புகாட்டி, செவ்ரோலெட், ஆஸ்டன் மார்டின் மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் பிரத்யேக கார்கள் கேமில் கிடைக்கின்றன.

இதுதவிர விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத வகையிலான ஏராளமான விளையாட்டு தேர்வுகள் இதில் கிடைக்கின்றது. இந்த கேம் ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிள் போன்களுக்கு கிடைக்கின்றது. இதனை விளையாடுவது ஃபார்முலா 1 ரேஸில் பங்கேற்பதைப் போன்ற அனுபவத்தை ஏற்படுத்துவதாக, இந்த கேமை விளையாடிய பயனர்கள்ரிவியூவில் கமெண்டாக தெரிவித்துள்ளனர்.

ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

ஆப்பிள் பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

சிஎஸ்ஆர் ரேசிங் 2 (CSR Racing 2)

டிராக்குகளில் ரேஸ் செய்ய பிடிக்காத நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சிஎஸ்ஆர் ரேசிங் 2 கேம். இது டிராக் ரேஸ் கேம் ஆகும். இதுபோன்ற டிராக் ரேஸ் கேம்கள் ஏராளமானவை ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. ஆனால், அவை இந்த சிஎஸ்ஆர் ரேசிங் 2 கேமிற்கு சற்றும் இணையாகது. இதில், கிராஃபிக்ஸ் அம்சத்திற்கு பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

இது உண்மையான டிராக் ரேஸ் அனுபவத்தை வழங்கும். இந்த கேமில் 200க்கும் கார்களை ரேஸ் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமை இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பதவிறக்கும் செய்திருக்கின்றனர். இது அதிக தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் அளவு 1.9 ஜிபியாக இருக்கின்றது. இதில், ஏஆர் (AR)போன்ற அம்சம் வழங்கப்பட்டதாலயே இந்தளவிற்கு அதிக ஜிபியைக் கொண்டதாக இது உள்ளது.

ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

ஆப்பிள் பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

நீட் ஃபார் ஸ்பீடு: நோ லிமிட்ஸ் (Need for Speed: No Limits)

இந்த கேமிலும் மேற்கூறியதைப் போன்று பல்வேறு நிறுவனங்களின் கார்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை நம்முடைய விருப்பத்திற்கேற்ப நிறத்தை மாற்றுதல் உடல் பாகங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை நம்மால் செய்ய முடியும். ஒவ்வொறு பந்தயத்தையும் வெற்றி கரமாக முடிக்கும்போது நமக்கு சில ரிவார்ட்டுகள் வழங்கப்படும். அதைவைத்து கார் அப்கிரேட் செய்வது, வேறு வாங்குவதை என பலவற்றை நம்மால் செய்ய முடியும்.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

அந்தவகையில், 25 லட்சத்திற்கும் அதிகமான கஸ்டமைசேஷன்களை நம்மால் இந்த கேமில் செய்ய முடியும். இதனாலயே இந்த கேம் இளைஞர்களின் தேர்வில் முக்கிய இடத்தில் இருக்கின்றது. இந்த கேமில் வழக்கமான சாலைகளில் இருப்பதைப் போன்று சிக்னல், சுவர், தடுப்பு போன்றவை இருக்கும். இவற்றையெல்லாம் கடந்தே நம்மால் வெற்றி பெற முடியும். இதில் ஏதேனும் விதியை மீறினால் போலீஸார் விரட்டவும் செய்வார். மேலும், இதன் பெயருக்கு ஏற்பவே வேகத்திற்கு கட்டுப்பாடு இல்லாமல் பந்தயத்தை நம்மால் மேற்கொள்ள முடியும்.

ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

ஆப்பிள் பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

ட்ரக்ஸ் ஆஃப் ரோடு (Trucks Off Road)

மேலே நாம் அனைத்து பார்த்த அனைத்து செல்போன் கேம்களுமே சாலையில் இயக்குவது மற்றும் டிராக்குகளில் இயக்குவதாக இருந்தன. ஆனால், இவற்றில் இருந்து சற்று வித்தியாசமானது இந்த ட்ரக்ஸ் ஆஃப்ரோடு கேம். பெயருக்கு ஏற்ப இந்த ஆஃப் ரோட் ரேஸை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், மற்ற கேம்களைக் காட்டிலும் இது புதிய அனுபவத்தை நமக்கு வழங்கும். அதேசமயம், வழக்கமான கார்களைக் காட்டிலும் இதில் ஆஃப்ரோடு இயக்குவதற்கு ஏதுவான ட்ரக்குகள் உள்ளன.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

அவை, பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமான மிருகத்தைப் போன்று காட்சியளிக்கும். இதன் உருவத்திற்கேற்ப கேமில் இருக்கும் பாதைகளும் மிகவும் மோசமானதாக கரடு முரடானதாக இருக்கும். ஆகையால், இதை விளையாடுவது சற்று கடினமான ஒன்று. இருப்பினும், விளையாட விளையாட இதில் அதிக சுவாரஷ்யம் இருக்கும். ஏனென்றால், இதன் பாதைகள் நீர், பாறைகள், சேறு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இருக்கும். இந்த கேமையும் ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஆகிய இரண்டிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

ஆப்பிள் பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

புராஜெக்ட்: ட்ரிஃப்ட் (Project: Drift)

புராஜெக்ட் ட்ரிஃப்ட் இந்த பெயரைக் கேட்டவுடன் உங்கள் அனைவருக்கும் இது எந்த மாதிரியான கேம் என்று தெரிந்திருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். இந்த கேம் முழுக்க சாகசத்தை அடிப்படையாகக் கொண்டது. ட்ரிஃப்ட் செய்வது போன்ற ஸ்டண்ட்டு செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களுக்காகவே பிரத்யேகமாக இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுவாரஷ்யமான ஐந்து கார் ரேஸ் கேம்கள்.. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போலவே த்ரில்லானவை.. ஒவ்வொன்னும் வேற லெவல்..

ஆகையால், யாரெல்லாம் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட நினைக்கின்றீர்களோ, அவர்கள் முதலில் இந்த கேமை விளையாடி நிஜ வாழ்க்கை சாகசத்தில் எவ்வளவு ஆபத்துகள் இருக்கும் என்ற தகவலை அறிந்து கொள்ளலாம்.

இந்த கேம் ஸ்டண்டை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் பல சுவாரஷ்யத்தை உள்ளடக்கியதாக இருக்கின்றது. முக்கியமாக சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டே ரேஸ் செய்வது மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இந்த கேமை ஆன்ட்ராய்டு பயனர்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்வும்.

ஆப்பிள் பயனர்கள் இந்த விளையாட்டை பதிவிறக்கம் இங்கே க்ளிக் செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2020, 19:53 [IST]
English summary
Top 5 Free Racing Games For Android & Apple Mobiles. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+