மிகவும் பிரத்யேகமான டாப்- 5 கார் ஆக்சஸெரீஸ்கள்!
பிரத்யேகமான அம்சங்கள் தனது கார்களில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று சொகுசு கார் தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். டிசைன், எஞ்சின், வசதிகளை தவிர்த்து சில பிரத்யேகமான ஆக்சஸெரீஸ்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்கின்றனர்.
அதுபோன்று, சொகுசு கார் தயாரிப்பாளர்கள் வழங்கிய சில பிரத்யேகமான கார் ஆக்சஸெரீஸ்களை ஸ்லைடரில் காணலாம்.

பட்டியல்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பிரத்யேகமான கார் ஆக்சஸெரீஸ்கள் விபரங்களை காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்
மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல் கிளாஸ் காருக்கு வழங்கப்ப்ட கிரானைட் இன்டிரியரும் மிகவும் பிரத்யேகமானதாக ஆட்டோமொபைல் துறையினரால் வர்ணிக்கப்படுகிறது. இதற்காக இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம் கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

வைர ரிம்
வைரகற்கள் பதிக்கப்பட்ட அசந்தி ரிம்களுக்கு ரூ.6 கோடி விலையாக நிர்ணயிக்கப்பட்டது. உலகின் மிக காஸ்ட்லியான கார் ரிம்களாக இவை வர்ணிக்கப்படுகின்றன.

மேபக் காரின் ஏர்ஃப்ரெஷ்னர்
மேபக் காரில் பொருத்தப்பட்டிருந்த பெர்ஃப்யூம் ஆட்டோமைஸர் என்ற சாதனம் 30 லட்சம் மதிப்பு கொண்டது. தேவைக்கு தகுந்தவாறு காருக்குள் நறுமணத்தை பரப்பும் கருவிதான் இது.

ஃபெராரி கார் சாவி
1,100 வைரகற்கள் பதிக்கப்பட்ட இந்த ஃபெராரி கார் சாவியும் இதுவரை வெளியிடப்பட்ட கார் ஆக்சஸெரீஸ்கள் மிக பிரத்யேகமானது. இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம்.

ரோல்ஸ்ராய்ஸ் ஸ்டார்லைட் ரூஃப்
ரோல்ய்ராய்ஸ் நிறுவனத்தை பிஎம்டபிள்யூ வாங்கிய தினத்தன்று வானில் இரு்நத அதே நட்சத்திர கூட்டத்தின் அமைப்புடன் செலஸ்டியல் எடிசன் என்ற ஃபான்டம் காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டது நினைவிருக்கலாம். நட்சத்திர அமைப்பு போன்று எல்இடி விளக்குகளுக்காக இந்திய மதிப்பில் ரூ.7.26 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








