லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

இந்திய சந்தையில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

இந்திய சந்தையில் கிடைக்கும் பிரபலமான ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக கார்களின் பூட் ஸ்பேஸ் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். நிறைய லக்கேஜை வைப்பதற்கு அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட காரை நீங்கள் தேடி கொண்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

ஹோண்டா ஜாஸ் - 354 லிட்டர்கள்

இந்திய சந்தையில் கிடைக்கும் விசாலமான இடவசதி கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரில் 5 பெரியவர்கள் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்யலாம். அத்துடன் இந்த ஹேட்ச்பேக் காரின் பூட் ஸ்பேஸ் 354 லிட்டர்கள் ஆகும். இது அதன் செக்மெண்ட்டிலேயே சிறப்பான பூட் ஸ்பேஸ்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

டாடா அல்ட்ராஸ் - 345 லிட்டர்கள்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற மேட் இன் இந்தியா கார்களில் இதுவும் ஒன்றாகும். எனவே இதனை மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார் என கூறலாம். பாதுகாப்பு மட்டுமின்றி பூட் ரூம் இடவசதியிலும் டாடா அல்ட்ராஸ் தலைசிறந்து விளங்குகிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டர்கள்.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

மாருதி வேகன் ஆர் - 340 லிட்டர்கள்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஹேட்ச்பேக் கார் விசாலமான கேபினை பெற்றிருப்பதுடன், சிறப்பான பூட் ஸ்பேஸ் இடவசதியையும் வழங்குகிறது. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பூட் ஸ்பேஸ் 340 லிட்டர்கள் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

மாருதி சுஸுகி பலேனோ - 339 லிட்டர்கள்

வேகன் ஆர் காரை போல் இதுவும் அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்களில் ஒன்றாகும். இதற்கு பலேனோ காரின் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற கேபின் மற்றும் திறன்வாய்ந்த இன்ஜின் ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளன. இந்த காரில் 5 பேர் சௌகரியமாக பயணம் செய்யலாம். மாருதி சுஸுகி பலேனோ காரின் பூட் ஸ்பேஸ் 339 லிட்டர்கள்.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

ஹூண்டாய் ஐ20 - 311 லிட்டர்கள்

புதிய தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய மாடலின் வீல்பேஸ் நீளம் அதிகம். எனவே கேபினில் தாராளமான இடவசதி கிடைக்கிறது. அத்துடன் இந்த காரின் பூட் ஸ்பேஸ் 311 லிட்டர்கள் ஆகும். முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இது 26 லிட்டர் அதிகம் ஆகும்.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

கியா சொனெட் - 392 லிட்டர்கள்

இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். அத்துடன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கியா நிறுவன கார்களில் ஒன்றாகவும் உள்ளது. கியா சொனெட் காரின் பூட் ஸ்பேஸ் 392 லிட்டர்கள் ஆகும். எனவே அதிக லக்கேஜ்களை எடுத்து செல்வதற்கு ஏற்றதாக சொனெட் இருக்கும்.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

ஹூண்டாய் வெனியூ - 350 லிட்டர்கள்

கியா சொனெட்டின் முக்கியமான போட்டியாளர்களில் ஹூண்டாய் வெனியூ காரும் ஒன்று. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 350 லிட்டர்கள். சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் வெனியூ, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளது.

லக்கேஜ் வைக்க இடம் இல்லாமல் தடுமாற வேண்டாம்... இந்தியாவில் கிடைக்கும் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட 9 கார்கள்...

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் - 433 லிட்டர்கள்

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே சரியாக 433 லிட்டர்கள் பூட் ஸ்பேஸை பெற்றுள்ளன. இவை இரண்டுமே இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி ரக கார்கள் ஆகும். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஹூண்டாய் கிரெட்டாவின் புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின், செல்டோஸின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 9 Hatchback And SUV Cars With Biggest Boot Space In India: Hyundai Creta, Kia Seltos And More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X