இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

கார்களில் செல்லப் பிராணிகள் பயணிப்பதற்கு என்று தனித்துவமான அக்ஸசெரீஸ்கள் விற்கப்படுகின்றன. அதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

கார்களை அலங்கரிக்கும் வகையில் அக்ஸசெரீஸ்கள் சந்தையில் விற்பனையில் இருப்பது நம்மில் பலருக்கு தெரியும். இதேபோன்று, அவசர காலம் மற்றும் நீண்ட தூர பயணங்களை சுவாரஷ்யமானதாக மாற்றக்கூடிய அக்ஸசெரீஸ்கள்கூட விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

இதேபோன்று, நம்முடைய செல்லப் பிராணிகளுக்கான கார் அக்ஸசெரீஸ்களும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளில் கிடைத்து வருகின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். என்ன சொல்றீங்க செல்லப் பிராணிகளுக்கான கார் அக்ஸசெரீஸா?, என கேட்குறீங்களா.. ஆமாங்க, இது நிஜம்தான். பத்துக்கும் மேற்பட்ட அக்ஸசெரீஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

ஏணி (Adjustable Ramps)

பெரிய வகை செல்லப் பிராணியாக இருந்தால் நாம் அழைத்த உடன் தானாகவே வந்து காருக்குள் ஏறிக் கொள்ளும். ஆனால், சற்று சிறிய உருவம் கொண்டிருக்கும் செல்லப் பிராணிகளால் உயரமான கார்களில் ஏறுவதும், இறங்குவதும் சற்று சிரமமானது. இதற்கு உதவியளிக்கும் வகையிலேயே ஏணி போன்ற அமைப்பு விற்கப்படுகின்றது.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

இது சிறிய உருவம் கொண்ட செல்லப் பிராணிகள் ஏறி, இறங்க வசதியாக இருக்கும். இவற்றிற்கு மட்டுமில்லைங்க வயது முதிர்ந்த ஏறி, இறங்க அதிகம் சிரமப்படும் செல்லப் பிராணிகளுக்கும் இந்த ஏணிகள் அதிக உதவியாக இருக்கும்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

சீட் பெல்ட் (Harness/Seat Belt)

விபத்தின்போது பாதுகாக்க உதவும் முக்கியமான கருவி சீட் பெல்ட். இந்த அம்சத்தை தற்போது அனைத்து கார் உற்பத்தியாளர்களும் அதன் தயாரிப்பாளர்களில் வழங்க தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இது மனிதர்களுக்கு மட்டுமே பயன்படும். எனவேதான் விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சில வாகன அக்ஸசெரீஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது செல்லப் பிராணிகளுக்கான சீட் பெல்டையும் விற்பனைக்கு வழங்க தொடங்கியிருக்கின்றன. இவை நம் அன்பிற்குரிய செல்லப் பிராணிகளை பாதுகாப்பாக பயணம் செய்ய உதவும்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

ஏசி (Portable AC)

இந்திய வகை நாய் இனங்களை தவிர பிற நாட்டைச் சேர்ந்த செல்லப் பிராணிகள் அதிகம் குளிர்ச்சியான சூழ்நிலையில் வாழக் கூடியவை ஆகும். ஆகையால், அவற்றால் சூடான அல்லது காற்றில்லா இடங்களில் வசிப்பது சற்று சிரமமானது. எனவேதான் அதிக குளிர்ச்சியை விரும்பும் செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற சிறிய ஏசி அக்ஸசெரீஸ் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

பிரத்யேக தண்ணீர் பாட்டில் (Pet Water Bottle)

இந்த தண்ணீர் பாட்டில் கார்களில் பயணிக்கும்போது மட்டுமல்ல சாலையில் உங்களுடன் நடை பயணம் மேற்கொள்ளும்போது செல்லப் பிராணிகளின் தாகத்தை தீர்க்க உதவும். இதற்காக தனி பாத்திரம் தேவைப்படாது. தண்ணீர் பாட்டிலுடன் ஓர் பாத்திரம் இணைக்கப்பட்டிருக்கும். அதுவே செல்லப் பிராணிகளை தாகம் தீர்க்க போதுமானது.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

வேக்யூம் க்ளீனர் (Portable Vacuum Cleaner)

செல்லப் பிராணிகள் இருக்கும் வீடுகளில் அவற்றின் முடிகளுக்கு பஞ்சமே இருக்காது. இதுமட்டுமின்றி, செல்லப் பிராணிகள் சற்று அதிகம் குரும்பு தனம் கொண்டவையும் கூட. இதனால் வீடுகள் மட்டுமல்ல கார்களும்கூட சில நேரங்களில் தூய்மையற்றதாக மாறிவிடுகின்றன.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

இதனைச் சுத்தம் செய்ய ஏதுவாகவே சிறிய வேக்யூம் க்ளீனர் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது காரின் மிக சிறிய இடுக்குகளைக் கூட சுத்தம் செய்ய போதுமானதாக இருக்கின்றது. சிறிய சிறிய முடிகள் மற்றும் தூசிகளைக் கூட இது அகற்றிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

செல்லப் பிராணிகளுக்கான முதலுதவி பெட்டி (Pet First-aid Kit)

மனிதர்களுக்கான முதலுதவி பெட்டியைப் போலவே செல்லப் பிராணிகளுக்கென தனி முதலுதவி பெட்டி சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதை வாங்குவதற்கு முதலில் உங்கள் செல்லப் பிராணியின் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த முதலுதவி பெட்டியில் செல்லப் பிராணிகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

கூண்டு (Crate/Cage)

மருத்துவமனை அல்லது வெளியே போகும்போது நம் கூடவே செல்லப் பிராணிகளை அழைத்து செல்ல கூண்டு மிக முக்கிய தேவையாக இருக்கின்றது. நம்முடைய செல்லப் பிராணி எவ்வளவு பெரிய சேட்டக் காரராக இருந்தாலும் இதில் அடங்கிதான் இருக்க வேண்டும்.

இப்படி ஒரு கார் அக்ஸசெரீஸ் விற்கப்படுகிறதா?.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே... ரொம்ப யூஸ் ஃபுல்லானது!!

கார் பெட் (Seat Booster/Car Bed)

செல்லப் பிராணிகள் படுப்பதற்கென்று தனி மெத்தைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது அவை அடக்கமாக படுத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக, காரில் செல்லும்போது ஏற்படும் அலுங்கள், குலுங்கள்கள் சமாளிக்க இது உதவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top Car Accessories For Pets: You Can Buy By Online Or Pet Shop. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X