இவி வாங்கப்போறீங்கன்னா இப்பவே வாங்கிடுங்க! டிசம்பருக்கு அப்புறம் ரேட் ரொம்ப ஏறப்போகுது!

சீனாவில் கிராஃபைட் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக வாய்ப்புகள் உள்ளதுஇது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக அதிகமாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மிக முக்கியமான கருவி அதன் பேட்டரி தான்.அதன் மோட்டாரை விட பேட்டரியை தயாரிப்பது தான் மிக சிரமமான விஷயமாக இருக்கிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பது சற்று சிரமமான விஷயமாக இருக்கிறது.

china graphite export

இன்று எலெக்ட்ரிக் பேட்டரிகளை தயாரிக்க லித்தியம் அயான் என்ற மூலப்பொருள் முக்கியமானதாக இருந்தாலும் அதில் சேர்க்கப்படும் கிராஃபைட் என்ற மூலப்பொருளும் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த கிராபைஃட் மூளை பொருளை வைத்து பேட்டரிகள், ஃப்யூயல் செல், லூப்ரிகன்ட், மிஷினரிகள், பெட்ரோல் கெமிக்கல் மற்றும் விமான போக்குவரத்து செக்டார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கிராஃபைட் என்ற மூலப்பொருள் தேவைப்படுகிறது.

உலக அளவில் மொத்தம் தயாராகும் கிராபைட் மூலப்பொருளில் 65 சதவீதம் சீனாவில் தான் தயாராகிறது. இதனால் இந்த கிராஃபைட் மூலப்பொருளுக்கு சீனா தான் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. இங்கு இருந்து தான் இந்தியாவில் பேட்டரி தயாரிக்கும் பல நிறுவனங்கள் கிராஃபைடை பெற்று வருகின்றன. இந்நிலையில் சீனா இந்த கிராஃபைட் ஏற்றுமதிக்கு திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

china graphite export

தற்போது சீனாவில் உள்ள யார் வேண்டுமானாலும் வெளிநாடுகளுக்கு கிராஃபைட் ஏற்றுமதி செய்யலாம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சீனாவில் இருந்து கிராஃபைட் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அந்நாட்டில் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற விதிமுறையை அந்நாட்டு அரசு வகுத்துள்ளது. இனிமே லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே கிராஃபைட்டை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

இப்படி செய்வதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான கிராஃபைட் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்ற கிராஃபைட்டை எல்லாம் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நிலை உருவாகும். இதனால் சீனாவிலிருந்து மூலப் பொருட்களை அல்லாமல் நேரடியாக பேட்டரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தள்ளப்படுவார்கள்.

china graphite export

இதனால் உள்நாட்டிலேயே பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலப்பொருள் செலவுகள் அதிகமாகி பேட்டரியின் விலை அதிகமாக கூடும் இதனால் இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. தற்போது இவி வாகனங்களில் விற்பனை அதிகமாகி வரும் நிலையில் இதன் பேட்டரி விலை அதிகமாகவது அதன் உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சீனாவின் வர்த்தக அமைச்சகம் கூறும் போது இப்படியான குறிப்பிட்ட பொருளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உலக நாடுகளில் உள்ள வழக்கம்தான் தற்போது உலகில் மிகப்பெரிய கிராஃபைட் தயாரிப்பாளர் மற்றும் ஏற்றுமதியாளராக சீனா இருக்கும்போது இப்படியான முடிவை அரசு எடுப்பது அந்நாட்டிற்கான வளர்ச்சிக்காக தான் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டாடா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களை அதிகமாக விற்பனை செய்து வருகிறது. டூவீலரை பொருத்தவரை ஸ்கூட்டர் செக்மெண்டில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனங்களின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணம் பெட்ரோல் வாகனத்திற்கு போட்டியான விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாவது தான். ஆனால் இந்த கிராஃபைட் விலை உயர்வால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயரக்கூடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனா தொடர்ந்து எதிர்கால ஆட்டோமொபைல் பேட்டரி நம்பி தான் இருப்பதை கண்டறிந்து அதை தன் கட்டுப்பாட்டிற்க்குள் வைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி தான் கிராஃபைட் இருக்கு தற்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கெல்லாம் மாற்றாக இந்தியா தற்சார்பாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 22, 2023, 12:17 [IST]
English summary
Top graphite producer china restricts exports of vital battery material
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X