தனிச் சிறப்பு வாய்ந்த உலகின் டாப் - 10 கார்கள்... சுவாரஸ்யமான தொகுப்பு!

Written By:

ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியும், தொழில்நுட்பங்களும் கற்பனைகளுக்கு எட்டாத நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. அனைத்து நிறுவனங்களும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து தங்கள் பக்கம் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் வரலாற்றில் இதுவரையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மாடல்களில் ஒரு சில கார் மாடல்கள் மட்டும் தனித்துவத்தையும், பிரத்யேக வரலாற்றுடன் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அதுபோன்ற கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10.செவர்லே ஸ்டிங்ரே(1963 - 1967)

10.செவர்லே ஸ்டிங்ரே(1963 - 1967)

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல்தான் செவர்லே கார்வெட். 1953ல் முதல் தலைமுறை மாடல் கன்வெர்ட்டிபிள் பாடி ஸ்டைல் கொண்டதாகவும், லிமிடேட் எடிசனாகவும் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாம் தலைமுறை கார்வெட் கார் ஸ்டிங்ரே என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த மாடலின் ஹெட்லைட்டுகள் வெளியில் தெரியாதவாறு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தேவைப்படும்போது ஹெட்லைட் மூடி திறந்து ஹெட்லைட் ஒளியை வழங்கும். இதன் பின்புற டிசைன் மற்றும் ஸ்பிளிட் பின்புற ஜன்னல்கள் ஆகியவை மிகவும் பிரத்யேகமானது. இந்த காரின் டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருந்ததால், ஏராளமான ஹாலிவுட் சினிமாக்களில் இந்த கார் பயன்படுத்தப்பட்டது. ஸ்டிங்ரே பிராண்டை நினைவுகூறும் வகையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாடல் ஸ்டிங்ரே பெயரில் அறிமுகமானது. இதுவரை 1.5 மில்லியன் கார்வெட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

09.பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

09.பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

உலகின் மிகச்சிறந்த எக்ஸிகியூட்டிவ் செடான் கார். 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது 6ம் தலைமுறை மாடலாக 5 விதமான பாடி ஸ்டைல்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூவின் மொத்த விற்பனையில் 30 சதவீதம் பங்களிப்பை இந்த கார் வழங்கி வருகிறது.

 08.ஃபெராரி 330 பி4

08.ஃபெராரி 330 பி4

1966ல் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் ஃபோர்டு நிறுவனம் முதல் மூன்று இடங்களை பிடித்தது. இதனால், ஃபோர்டு நிறுவனத்தை எதிர்கொள்ள அதிரடியாக ஃபோர்டு ஜிடி40 காருக்கு போட்டியாக ஃபெராரி வடிவமைத்த புரோட்டோடைப் மாடல்தான் ஃபெராரி 330 பி4. இதையடுத்து, அடுத்த ஆண்டில் லீ மான்ஸ் ரேஸில் ஃபெராரி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்திலேயே மிகச்சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொம்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த கார்.

07.போர்ஷே பாக்ஸ்டர்

07.போர்ஷே பாக்ஸ்டர்

போர்ஷே நிறுவனம் வடிவமைத்த முதல் ரோட்ஸ்டெர் மாடல். இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கை வசதி, ஓபன் டாப் ஆகியவற்றின் மூலம் இது ரோட்ஸ்டெர் அந்தஸ்தை பெற்றது. Boxer மற்றும் Roadster ஆகியவற்றை இணைத்து இந்த காருக்கு பாக்ஸ்டர் என பெயரிட்டனர். 1996ம் ஆண்டு முதல் தற்போது வரை உற்பத்தியில் உள்ளது.

06. ஜாகுவார் எக்ஸ்ஜே 13

06. ஜாகுவார் எக்ஸ்ஜே 13

1960களில் லீமான்ஸ் ரேஸுக்காக ஜாகுவார் நிறுவனம் வடிவமைத்த கார் மாடல்தான் எக்ஸ்ஜே13. ஒரே ஒரு புரோட்டோடைப் மாடல் மட்டுமே தயாரிக்கப்பட்டது. ஒரே ஒரு மட்டுமே தயாரிக்கப்பட்டதால் இந்த காருக்கு இன்றைய தேதியிலும் பெருமதிப்பு கொண்டதாக இருக்கிறது. 1996ல் இந்த காரை வாங்குவதற்கு ஒரு பெரும் பணக்காரர் 7 மில்லியன் பவுண்ட் தருவதாக ஆஃபர் அளித்தாராம். அதனை இதன் உரிமையாளர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Picture credit: Mike Morrin / Wiki Commons

05. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

05. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

சிறந்த வசதிகளை அளிக்கும் உலகின் மிகச்சிறந்த மாடல். மொத்தம் 44,000 விதமான வண்ணங்களிலும், எந்தவொரு வண்ணத்திலான லெதர் வேலைப்பாடுகளுடனும் பெற முடியும். இந்த காரின் பின்புற கதவுகள் சி பில்லரில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சூசைடு டோர்ஸ் என்று கூறுகின்றனர். ஆனால், இதனை ரோல்ஸ்ராய்ஸ் கோச் டோர்ஸ் என்கிறது. கார் நகர்ந்துகொண்டிருக்கும்போது கதவு தொடர்ந்து திறந்திருந்தால், தானியங்கி பிரேக் பிடித்து கார் நின்றுவிடும். இதன் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி ஆபரணச் சின்னம் விபத்து வேளைகளில் தானாகவே உள்ளே இழுத்துக் கொள்ளும்.

04.ஆல்ஃபா ரோமியோ 33 ஸ்ட்ராடல்

04.ஆல்ஃபா ரோமியோ 33 ஸ்ட்ராடல்

பெயருக்கு ஏற்றாற்போல் அழகுக்கும் பஞ்சமில்லாத இந்த கார் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உலகிலேயே பட்டர்ஃப்ளை கதவுகள் டிசைனுடன் வந்த முதல் மாடலாக இதனை குறிப்பிடுகின்றனர்.

03. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ

03. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ

உலகிலேயே அதிகம் தயாரிக்கப்பட்ட மாடல்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ. 1974ம் ஆண்டு இதன் உற்பத்தி துவங்கிய நிலையில், கடந்த 2012ம் ஆண்டு வரை புள்ளிவிபரங்களின்படி, 29 மில்லியன் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் மிக உயரிய ஆட்டோமொபைல் விருதுகளை அள்ளியுள்ள இந்த கார் தற்போது 7வது தலைமுறை மாடல்களை பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

02.ஃபெராரி 250ஜிடிஓ

02.ஃபெராரி 250ஜிடிஓ

இன்றைய தேதியில் உலகின் காஸ்ட்லி கார் என்றவுடன் ஏதோ ஒரு புதிய காரை நினைக்காதீர்கள். 1962ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ஃபெராரி கார்தான் இன்றைய தேதியில் உலகின் மிகவும் காஸ்ட்லி கார். இந்த கார்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு பல நூறு கோடிகளை கார் பிரியர்கள் கொட்டி கொடுத்து வாங்குவதால், இதனை கார்களின் மோனலிசா என்று ஆட்டோமொபைல் துறையினர் வர்ணிக்கின்றனர். மொத்தம் 39 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. மணிக்கு 280 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரில் 3.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. தவிர, ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4.0 லிட்டர் வி12 எஞ்சினுடன் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2013ல் ஒரு ஃபெராரி 250ஜிடிஓ கார் ரூ.321 கோடிக்கு ஏலம் போய் வியக்க வைத்தது.

01. புகாட்டி வேரான்

01. புகாட்டி வேரான்

உலகின் மிக அதிவேக காராக பெயர் பெற்ற கார் மாடல் புகாட்டி வேரான். 2006ல் இதன் உற்பத்தி துவங்கப்பட்டது. வெய்ரான் காரின் சூப்பர் ஸ்போர்ட் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 431.072 கிமீ வேகத்தை தொட்டு வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் மாடல்களில் அதிவேக கார் என்ற பெருமையை பெற்றது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் 1,000எச்பி பவருக்கு மேல் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 2.46 வினாடிகளில் கடந்துவிடும். இதன் சூப்பர் ஸ்போர்ட் மாடல் இதே வேகத்தை 2.2 வினாடிகளில் எட்டும்.

அம்பாசடர்

அம்பாசடர்

இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் ஓர் சிறந்த கார் மாடல் என்ற பெருமை அம்பாசடரையே சாரும். ஆண்டி முதல் அரசன் வரை, பட்டணம் முதல் பட்டிதொட்டி வரை பயணித்த ஒரு கார் மாடல் உண்டு என்றால் அது அம்பாசடராக மட்டுமே இருக்க முடியும். இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ் 3 மார்க் 1 மாடலில் சில மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 1958ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட இந்த கார் மாடல் கடந்த ஆண்டுடன் உற்பத்தி நிறைவடைந்தது.

Picture credit: Redsimon / Wiki Commons

 
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
Story first published: Monday, March 23, 2015, 17:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark