ஃபைவ் ஸ்டார் ஓட்டல் போன்று வியக்க வைக்கும் விமானங்களின் முதல் வகுப்பு இருக்கைகள்... !!

நீண்ட தூர விமானங்களில் பயணிப்பவர்களுக்கு மிகப்பெரிய தலைவலி, நெருக்கடியான இருக்கைகள்தான். சில மணி நேரங்களில் சென்றடைந்தால் பரவாயில்லை. ஆனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது கிட்டத்தட்ட 20 முதல் 30 மணிநேரம் வரை பயணிக்கும் நிலை இருக்கிறது.

அப்போது, நெருக்கடியான இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும்போது பெரும் அசகவுரியத்தை உணர முடியும். சாதாரண வகுப்புகளில் பயணிப்பதற்கான கட்டணமே மிக அதிகமாக இருப்பதால், முதல் வகுப்பு பற்றி பலர் நினைத்து பார்க்க முடியாத நிலை இருக்கிறது.

இருப்பினும், பல நிறுவனங்கள் அளிக்கும் முதல் வகுப்புக்கான வசதிகள், நிச்சயம் அதில் ஒருமுறையாவது வசதியாக பயணித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. அதுபோன்று, உலகின் மிக பிரபலமான விமான நிறுவனங்கள் வழங்கும் முதல் வகுப்பு வசதிகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

09. பிரிட்டிஷ் ஏர்வேஸ்

09. பிரிட்டிஷ் ஏர்வேஸ்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தின் முதல் வகுப்பு இருக்கையைதான் இப்போது பார்க்கிறீங்கள். பார்க்கும்போதே, மிக ரம்மியமான பயண அனுபவத்தை உறுதி செய்வது போல இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

இந்த இருக்கையின் முன்னால் 23 இன்ச் திரை உள்ளது. இது பயணத்தின்போது மிகச்சிறப்பான பொழுதுபோக்கை வழங்கும். டச்ஸ்கிரீன் கன்ட்ரோல் பேனல் மூலமாக இதனை எளிதாக கட்டுப்படுத்தலாம். அதுதவிர, சொகுசான இருக்கைகள், உணவு வகைகளுடன் உங்கள் பயணத்தை சிறக்கச் செய்கின்றனர். டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்கு 5,000 டாலர்கள் கட்டணம்.

08. ஏர்பிரான்ஸ்

08. ஏர்பிரான்ஸ்

சூட் ரூம் போன்ற வசதியுடன் இருக்கும் இந்த வகுப்பில் ஒரு வழி பயணத்திற்கு ,10,000 டாலர்கள் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

இருக்கையை படுக்கையாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த இருக்கைக்கு முன்னால் பெரிய திரை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிரத்யேக பணியாளர் மூலமாக தனி கவனிப்பும் உண்டு.

07.கத்தார் ஏர்வேஸ்

07.கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதல் வகுப்பில் பயணிக்கும்போது அடுத்தவர் தொந்தரவு இல்லாத வகையில் இருக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருக்கையை படுக்கையாக மாற்றி உறங்கிக் கொண்டு செல்லலாம்.

வசதிகள்

வசதிகள்

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித் தனியாக டிவி திரை, பணியாளர்களின் உபசரிப்பு என அமர்க்களமாக பயணிக்கலாம். கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதல் வகுப்பு பயணிகளுக்கான விசேஷ பார் வசதியும் உண்டு. ஒருவழி பயணக் கட்டணமாக 5,000 டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 06. காந்தாஸ் ஏர்வேஸ்

06. காந்தாஸ் ஏர்வேஸ்

சில காந்தாஸ் ஏர்வேஸ் விமானங்களில் மிக சொகுசான இருக்கை அமைப்பு மட்டுமல்ல, விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் நேரடி உணர்வை வழங்கும் பொழுதுபோக்கு சாதனங்களுடன் பயணத்தை விரைவாக கழிக்கலாம்.

மசாஜ்

மசாஜ்

பொழுதுபோக்கு, பார், வசதியான இருக்கை மட்டுமின்றி, இந்த விமானங்களில் மசாஜ் நிலையமும் உள்ளது. ஆனால், இதனை முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

 05. தாய் ஏர்வேஸ்

05. தாய் ஏர்வேஸ்

மஹாராஜா இருக்கைகள் போன்ற விசாலமான இருக்கைகள், டிவி திரை, சிறிய டேபிள் உள்ளிட்ட பல வசதிகள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

இந்த இருக்கைகளில் அமரும்போது நெருக்கடியாக இருக்காது என்பதுடன், பிறருக்கும் தொந்தரவாக இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகின் சிறந்த முதல் வகுப்பு விமானங்களை இயக்குவதில் தாய் ஏர்வேஸ் நிறுவனமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

04. கத்தே பசிஃபிக் ஏர்வேஸ்

04. கத்தே பசிஃபிக் ஏர்வேஸ்

இந்த விமானத்தின் முதல் வகுப்பில் பயணிப்பதற்கு ஒரு வழிக்கட்டணமாக அதிகபட்சமாக 28,000 டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சகல வசதிகளுடன் கூடிய சிறிய அறையில் அமர்ந்திருப்பது போன்ற சுகத்தை தரும்.

வசதிகள்

வசதிகள்

தனியாக டிவி, விதவிதமான தாய்லாந்து ஸ்பெஷல் உணவு வகைகள், பிரத்யேக பணியாளர்களுடன் சிறப்பாக உபசரிக்கப்படுவீர்கள். இதனால், பயணம் அலுப்பில்லாமல் நிறைவடையும்.

 03. எமிரேட்ஸ்

03. எமிரேட்ஸ்

உலகின் மிகச்சிறந்த வசதிகளையும், சேவைகளையும் வழங்குவதில் எமிரேட்ஸ் பெயர் பெற்ற நிறுவனம். அபுதாபியிலிருந்து நியூயார்க் நகருக்கு முதல் வகுப்பில் பயணிக்க ஒரு வழிக்கட்டணமாக 9,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

தனி படுக்கை வசதி, பொழுதுபோக்கு வசதி என 18 மணி நேர பயணமும் மிகச்சிறப்பாக அமையும். அலுப்பும், சலிப்பும் இல்லாத பயண அனுபவத்தை பெற முடியும். அத்துடன், ஒவ்வொரு பயணியின் இருக்கையிலுமே மினி பார் ஒன்றும் உள்ளது. மேலும், இந்த வகுப்பில் பயணிப்பவர்களுக்கு குளியல் அறையும், ரெஸ்ட் ரூமும் உள்ளது.

 02. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

02. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களின் முதல் வகுப்பில் 35 இன்ச் அகலமும், 82 இன்ச் நீளமும் கொண்ட விசாலமான படுக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது வீட்டிலுள்ள படுக்கைகளில் உறங்குவது போன்ற அனுபவத்தை கொடுக்கும்.

வசதிகள்

வசதிகள்

இருவருக்கான தனி அறைகளும் உண்டு. இதனால், உயர்தரமான பயண அனுபவத்தை வழங்கும். இருவழிக்கட்டணமாக 18,400 டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

01. எதிஹாட் ஏர்வேஸ்

01. எதிஹாட் ஏர்வேஸ்

எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் ரெசிடென்ஸ் என்ற முதல் வகுப்பு இருக்கை மிக மிக உன்னதமான பயண அனுபவத்தை வழங்கும். நட்சத்திர விடுதி அறைகளுக்கு இணையான வசதிகளை கொண்டது.

வசதிகள்

வசதிகள்

ஒவ்வொரு பயணிக்கும் தனி பணியாளர் மூலமாக உபசரிப்பு, டிவி, தனி ரெஸ்ட்ரூம் என அசத்துகிறது. இந்த வகுப்பில் பயணிப்பதற்கு ரூ.30,000 டாலர்கள் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மும்பையிலிருந்து அபுதாபிக்கு இந்த வகை ரெசிடென்ஸ் வகுப்பு கொண்ட விமானத்தை எதிஹாட் இயக்குகிறது.

அனுபவம்

அனுபவம்

பல விமான சேவை நிறுவனங்களில் நீங்கள் பயணித்திருக்கும் அனுபவம் இருக்கும். அதில், சிறந்த இருக்கை அமைப்புடைய விமான சேவை நிறுவனங்கள் குறித்த உங்களது கருத்துக்களை கருத்துப் பெட்டியில் குறிப்பிடலாம்.

பாதுகாப்பான சேவையை வழங்கும் உலகின் டாப் 20 விமான நிறுவனங்கள்!

பாதுகாப்பான சேவையை வழங்கும் உலகின் டாப் 20 விமான நிறுவனங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top most luxurious first-class cabins in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X