டொனால்டு ட்ரம்ப்பின் நிழலை கூட தொட முடியாது! யாருக்கும் தெரியாத 'தி பீஸ்ட்' காரின் உறைய வைக்கும் மர்மங்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் (US Presidential Election Results) தற்போது வெளியாகி கொண்டுள்ளன. இதில், டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) கை ஓங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டை (Tamil Nadu) பூர்வீகமாக கொண்டவரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) பின்னடைவை சந்தித்து வருகிறார். எனவே அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க போவது உறுதியாகி விட்டது. இதன் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம், டொனால்டு ட்ரம்ப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும், 'தி பீஸ்ட்' (The Beast) என செல்லமாக அழைக்கப்படும் காரில்தான் பயணம் செய்வார்கள். எனவே அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவி ஏற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப்பும் இனி 'தி பீஸ்ட்' காரில்தான் பயணம் செய்வார். அந்த காரை பற்றிய பிரம்மிக்க வைக்கும் தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Top Secrets Of US President Donald Trump Car

இது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கேடிலாக் (Cadillac) நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். அதே அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகப்புகழ் பெற்ற ஜென்ரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் கேடிலாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம்தான், கேடிலாக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் (Parent Company) ஆகும். தீவிரவாதிகளால் நெருங்கவே முடியாத அளவிற்கு பிரம்மிக்க வைக்கும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன், அமெரிக்க அதிபருக்கான 'தி பீஸ்ட்' காரை கேடிலாக் நிறுவனம் தயாரித்துள்ளது.

The Beast

அமெரிக்க அதிபரின் 'தி பீஸ்ட்' காரில், 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இந்த காரின் நீளம் 18 அடி ஆகும். அதாவது 3 மனிதர்களின் ஒட்டுமொத்த உயரத்தை காட்டிலும், அமெரிக்க அதிபரின் 'தி பீஸ்ட்' கார் நீளமானது. இதன் எடை 6,800-9,100 கிலோ வரை இருக்கும்.

அலுமினியம், ஸ்டீல் மற்றும் செராமிக் ஆகியவற்றின் கலவையின் மூலமாக 'தி பீஸ்ட்' கார் உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ரசாயன தாக்குதல்களை நடத்தினாலும் கூட, 'தி பீஸ்ட்' காரின் உள்ளே இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாது. இரவு நேரத்திலும் தெளிவாக பார்க்க உதவி செய்யும் டிவைஸ்களை 'தி பீஸ்ட்' கொண்டுள்ளது.

அத்துடன் தீவிரவாதிகளின் வாகனங்கள் பின் தொடர்ந்தால், அவர்களால் மேற்கொண்டு முன்னேற முடியாதபடி, சாலையில் எண்ணெய்யை பீய்ச்சி அடிக்கும் வசதியும், 'தி பீஸ்ட்' காரில் உள்ளது. மேலும் புகை மண்டலத்தை ஏற்படுத்தி விட்டு, தீவிரவாதிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிப்பதற்கான வசதியையும், 'தி பீஸ்ட்' கொண்டுள்ளது.

இது போன்ற வசதிகளை எல்லாம் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். 'தி பீஸ்ட்' காரின் ஒவ்வொரு கதவின் எடையும், போயிங் 757 விமானத்துடைய கதவின் எடைக்கு இணையானவை. எனவே இதனை சாதாரண காராக கருதி விட முடியாது. இந்த காரின் ஜன்னல் கண்ணாடிகள் பல அடுக்களால் ஆனவை. அவற்றின் தடிமன் 5 இன்ச்கள் ஆகும்.

வெடிகுண்டு தாக்குதலையும் தாங்க கூடிய சக்தி அவற்றுக்கு உண்டு. அவசியம் ஏற்பட்டால், இந்த காரின் டோர் ஹேண்டில்களில், மின்சாரத்தை பாய்ச்சலாம். தீவிரவாதிகள் உள்ளே நுழைவதை தடுப்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சர் ஆனால் கூட, தொடர்ந்து பயணம் செய்யும் வல்லமை, 'தி பீஸ்ட்' காருக்கு உண்டு.

துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் உள்பட ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆயுதங்களும், 'தி பீஸ்ட்' காரில் வைக்கப்பட்டிருக்கும். ஒரே வரியில் சொல்வதென்றால், அமெரிக்க அதிபரின் இந்த 'தி பீஸ்ட்' கார் உண்மையிலேயே நாச வேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனம்தான்!

இது போன்ற சிறப்பம்சங்களுடன், சாட்டிலைட் போன் ஒன்றும், 'தி பீஸ்ட்' காரில் இருக்கும். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் அமெரிக்க துணை அதிபருடன் இந்த சாட்டிலைட் போன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் அமெரிக்க அதிபருக்கு ஏற்ற ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் எல்லாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க அதிபர் உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும், 'தி பீஸ்ட்' காரையும் விமானத்தில் ஏற்றி கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் சாலையில் ஒரே ஒரு 'தி பீஸ்ட்' கார்தான் பயணிக்கும் என நினைத்து விட வேண்டாம். ஒரே பதிவெண் பலகையுடன், ஒன்றுக்கும் மேற்பட்ட 'தி பீஸ்ட்' கார்கள் சாலையில் பயணிக்கும்.

அமெரிக்க அதிபர் எந்த காரில் உள்ளார்? என்ற குழப்பத்தை தீவிரவாதிகளுக்கு ஏற்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 15 வினாடிகளிலேயே இந்த கார் எட்டிவிடும். குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த காரை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள்.

அப்போது பல்வேறு புதிய வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். இந்த காருக்கு உள்ளே, வெளிப்புற சத்தம் எதுவும் நுழையாது. இந்த காரை பின் தொடர்ந்து வரும் மற்ற கார்களில் அமெரிக்க அதிபருக்கான ராணுவ டாக்டர் உள்ளிட்டவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். பெயருக்கு ஏற்றபடி இந்த கார் உண்மையிலேயே 'தி பீஸ்ட்தான்' என்பதில் சந்தேகமில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை எல்லாம் ஒரு சில பாதுகாப்பு சிறப்பம்சங்கள் மட்டுமே. ஆனால் இன்னும் கற்பனைக்கு எட்டாத பல்வேறு பாதுகாப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு கருதி, அந்த தகவல்கள் எல்லாம், ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 17:08 [IST]
English summary
Top secrets of us president donald trump car the beast
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+