ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலை பார்த்த உடனே கொல நடுங்கி இருக்கும்.. மாவீரனை பற்றிய இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

84 ஆயிரம் டன் சரக்குகளுடன் பயணித்த சரக்கு கப்பல் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கப்பல் கடத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியதும் இந்தியாவில் இருந்து பெரும் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டது.

அப்படியாக இந்த மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலும் அடங்கும். எதிரிகளை கொல நடுங்க செய்யும் திறன் கொண்ட மிக சிறந்த போர் கப்பலே இந்த ஐஎன்எஸ் சென்னை ஆகும். இந்த கப்பல் என்ன மாதிரியான திறன்மிக்கது? எதிரிகள் இதன் பெயரை சொன்னாலே ஏன் கொல நடுங்குவார்கள்? என்பதற்கான காரணங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Mv lila norfolk

நேற்று (வெள்ளிக்கிழமை) 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்கள் உடன் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக இந்திய கப்பல் படைக்கு தகவல் வந்தது. இந்த தகவலைத் தொடர்ந்து, கப்பலையும், அதில் இருக்கும் பணியாளர்களையும் மீட்டெடுக்க இந்திய கப்பல் படை தன்னுடைய பெரும் மீட்புப் படையை அனுப்பி வைத்தது.

கப்பற்படைக்கு சொந்தமான போர் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் எம்க்யூ98 வகை ட்ரோன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையிலேயே கப்பலில் இருந்து 84 ஆயிரம் டன் சரக்கு, 21 பணியாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக இந்திய கப்பற்படை தெரிவித்து உள்ளது. மேலும், கப்பலை மீட்டெடுக்கும் வீடியோவையும் அது வெளியிட்டு இருக்கின்றது.

Hijacked ship

சரக்கு கப்பலில் இருந்து இந்திய கப்பற்படைக்கு வந்த திடீர் அழைப்பின் பேரிலேயே இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அடையாளம் தெரியாத ஐந்து முதல் ஆறு பேர் வரை கப்பலில் ஆயுதங்களுடன் நுழைந்ததாக அந்த அழைப்பில் கூறப்பட்டது. இதனடிப்படையிலேயே கடற்படை போர்கப்பல் ஐஎன்எஸ் சென்னை, அதன் கடற்கொள்ளையர் தடுப்பு ரோந்து பணியில் இருந்து திசை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இது ஓர் அதி நவீன போர் கப்பல் ஆகும். முக்கியமாக நவீன ஆயுதங்களும், சென்சார்களும் இந்த கப்பலில் நிரம்பிக் காணப்படுகினஅறன. இதனால்தான் இந்த கப்பல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றது. இந்த கப்பல் எதிரி போர் கப்பல்களை மட்டுமல்ல எதிரி நாட்டுகளின் விமானங்களையும் தாக்கும் வல்லமை வாய்ந்தது.

இதற்கான ஏவுகணை அம்சங்களும் இந்த கப்பலில் உளஅளன. செங்குத்தாக ஏவுகணைகளை ஏவுதல், நீண்ட தூரத்தில் இருக்கும் எதிரிகளை அழித்தல் உள்ளிட்டவற்றிற்கான தற்காக்கும் கருவிகள் பல ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலில் உள்ளன. இதனால்தான், இதன் நடமாட்டம் இந்திய கடற்பகுதியில் ஓர் காட்டு ராஜாவின் நடமாட்டத்தைப் போல் காட்சியளிக்கின்றது.

இதுவே, எதிரிகளையும் கொல நடுங்கச் செய்யச் செய்கின்றது. இந்த போர் கப்பல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். டிஆர்டிஓ-வின் இணைவுடன் தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. கப்பலில் நான்கு ஏகே-630 துப்பாக்கிகள் இடம் பெற்றிருக்கும். இவை முயல் வேகத்தில் குண்டுகளை எதிரியை நோக்கி வீசும் திறன் கொண்டது.

Ins chennai

இத்துடன் எம்ஆர் துப்பாக்கி வசதியையும் இந்த கப்பல் தாங்கி இருக்கின்றது. இதுதவிர, கப்பலில் இரட்டை துளைகள் கொண்ட டோர்பெடோ லாஞ்சர்களும் உள்ளன. இத்துடன், ராக்கெட் லாஞ்சர்களும் உள்ளன. மேலும், இந்த கப்பலை சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்துச் செல்லும் வகையில் இந்தியா வடிவமைத்திருக்கின்றது.

ஆகையால், எப்போர்பட்ட போர் சூழலாக இருந்தாலும் இந்த கப்பல் சமாளித்துவிடும். இத்தகைய திறன் வாய்ந்த போர் கப்பலையே கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்கு கப்பலையும், 21 மாலுமிகளையும் மீட்டெடுக்க இந்தியா அனுப்பி இருக்கின்றது. மீட்டெடுக்கப்பட்ட கப்பலை மீண்டும் இயங்க ஐஎன்எஸ் சென்னையே உதவி இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, அந்த கப்பல் அதன் அடுத்தகட்ட பயணத்தை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் துபாயைச் சேர்ந்த லிலா குளோபல் நிறுவத்திற்கு சொந்தமானது ஆகும். கப்பலை பத்திரமாக மீட்டெடுத்ததற்காக நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் குன்ஸர் இந்திய கடற்படைக்கு நன்றிகளை தெரிவித்து இருக்கின்றார்.

சோமாலியா கடற்கரை அருகிலேயே கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சம்பவம் அரங்கேறியதை அடுத்து அந்த வழியாக வந்த மற்ற கப்பல்கள் வழிமாற்றி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. சில கப்பல்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட நிலைமை சீரான பின்னர் மீண்டும் அந்த வழியில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் திறம் வாய்ந்த ஓர் போர் கப்பலே ஐஎன்எஸ் சென்னை ஆகும். 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே இது சேவையில் முதல் முறையாக இணைக்கப்பட்டது. 163 மீட்டர் நீளம், 17.4 மீட்டர் அகலம், 7500 டன் எடை என பிரமாண்டமான தோற்றம் கொண்டதே இந்த கப்பல் ஆகும்.

இதனால், மணிக்கு 30 க்நாட் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த கப்பல் நான்கு பவர்ஃபுல் கேஸ் டர்பைன்களால் இயக்கப்படுகின்றது. மாடர்ன் சர்வலைன்ஸ் ரேடார்களே இந்த கப்பலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது ராக்கெட்டுகளை துள்ளியமாக ஏவ மற்றும் எதிரிகளின் ராக்கெட்டுகளை துள்ளியமாக அழிக்க உதவும்.

இதுதவிர, இந்த கப்பல் ஆட்டோமேட்டட் பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஃபோல்டபிள் ஹேங்கர் டோர்கள், ஹீலோ டிராவெர்சிங் சிஸ்டம், ஆக்சிலியரி கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் அது தாங்கி இருக்கின்றது. இந்த கப்பலில் சுமார் 45 அதிகாரிகள் மற்றும் 395 பணியாளர்கள் உள்ளனர். இந்த கப்பல் மிக சிறந்த போர் திறன் கொண்டது மட்டுமல்ல பணியாளர்களின் வசதியை மேம்படுத்தும் அம்சங்களையும் தாங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 11:51 [IST]
English summary
Top things to know about missile destroyer ins chennai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X