இப்படி ஒரு சொகுசு கப்பலில் நீங்கள் நிச்சயம் பயணிக்க வேண்டும்

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் எது தெரியுமா? ராயல் கரிபியன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிம்பனி ஆப் தி சீஸ் என்ற கப்பல் தான் உலகில் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பல்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் எது தெரியுமா? ராயல் கரிபியன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிம்பனி ஆப் தி சீஸ் என்ற கப்பல் தான் உலகில் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பல்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த கப்பல் கடந்த 2015ம் ஆண்டு கட்ட துவங்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி இது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு முதன் முதலில் மிதக்கவிடப்பட்டது. இது உலகில் நான்காவது ஓயாசிஸ் வகை கப்பலாகும்

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதன் முதல் கடற்பயணத்தை கடந்த 7ம் தேதிதான் துவங்கியுள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 5,494 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யமுடியும். தற்போது சுமார் 7 நாள் பயணத்தை துவங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த கப்பல் மொத்தம் 2,30,000 கிராஸ் டன் எடை கொண்டது. இந்த கப்பல் ராயல் கரிபியன் நிறுவனத்தின் மற்றொரு கப்பலான ஹார்மோனி ஆப் சீஸ் என்ற கப்பலில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த கப்பல் முழுவதும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடன் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை சூட்ஸ், ரிலாக்ஸ், ஆக்டிவிட்டிஸ் என மூன்று பகுதிகளாக அந்நிறுவனம் பிரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சூட்ஸ் பகுதியில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தங்க பிரம்மாணடமான வீடு போன்ற அமைப்பு தரப்படுகிறது. அங்கு நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள எல்லா வசதிகளையும் பெறலாம். அந்த பகுதியில்குழந்தைகள் விளையாடுவதற்கான பல விளையாட்டுக்கள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மேலும் அங்கு உங்களுக்கான டிரிங்ஸ், அதிவேக இன்டர்நெட், உயர்தர உணவு சர்வீஸ், என ஒரு நட்சத்திர ஓட்டலிலும் இல்லாத வசதிகளை நீங்கள் அங்கு அனுபவிக்கலாம்.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ரிலாக்ஸ் பகுதில் ஸ்பா, யோகா, ஜிம், பார்க், கார்டன், 5 நீச்சல் குளம் உள்ளிட்ட நீங்கள் கற்பனையில் கூட எண்ணி பார்க்கமுடியாத ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆக்டிவிட்டிஸ் பகுதியில் முற்றிலும் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் குதுகலப்படுத்தக்கூடிய பல விளையாட்டுக்கள் இருக்கின்றன.பல த்ரில்லிங் ரைடுகள், என ஒரு தீம் பார்க்கில் இருக்கும் அத்தனையும் அங்குள்ளது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதுபோக நீங்கள் விரும்பும் விளையாட்டுக்களை ரசித்துக்கொண்ட பொழுதைகழிக்க ஸ்போட்ஸ் பார் வசதி, கடற் உணவுகளுடன் கூடிய ரெஸ்டாரெண்ட், உங்கள் குடும்பத்தினருடன் சினிமா பாா்க்க சிறிய திரையங்குகள் என பல வசதிகள் உள்ளது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மேலும் நீங்கள் கப்பல் பயணத்தின் போதே அவசர வேலை வந்தால் உங்கள் ஹெலிகாப்டரை வரவழைத்து அதில் செல்லும் வகையில் ஹெலிபேடு வசதி, என எண்ணற்ற வசதிகள் உள்ளது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த கப்பல் சொகுசை மட்டும் வழங்காமல் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கப்பல் கில்லி தான் கப்பலில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் தப்பிக்க இந்த கப்பலுக்குள்ளேயே சிறிய நீர் முழ்கி கப்பல் வசதியும் உள்ளது. இந்த கப்பல் குறித்த வீடியோவை கீழே காணுங்கள்

இந்த கப்பலை கட்ட இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ4.4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் ரூ 1 லட்சம் முதல் ரூ2 லட்சம் வரை வசூலிகப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த கப்பல் அமெரிக்காவின் மியாமி நகர துறைமுகத்தில் இருந்து செயிண்ட் மார்ட்டன் வரை சென்று மீண்டும் மியாமி நகருக்கே திரும்புகிறது. தொடர்ந்து இது மியாமி நகரை சுற்றியுள்ள பகுதிகளிலேயே அடுத்தடுத்த பயணத்தை மேற்கொள்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
WORLD LARGEST CRUISE SHIP ALL YOU WANT TO KNOW ABOUT . READ IN TAMIL
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X