உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

உங்கள் வாகனத்தின் டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தால் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

உங்கள் வாகனத்தின் முக்கியமான பாகங்களில் டயர்களும் ஒன்று. வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே நேரடி தொடர்பில் இருப்பவை டயர்கள் மட்டும்தான். எனவே டயர்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பதை வாகன உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். டயர்களில் ஒருவேளை ஸ்லோ பஞ்சர் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

ஸ்லோ பஞ்சருக்கு அதன் பெயரிலேயே அர்த்தம் உள்ளது. வாகனத்தின் டயர் படிப்படியாக காற்று அழுத்தத்தை இழப்பதுதான் ஸ்லோ பஞ்சர். அதாவது பிரச்னை இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் முன்பே நீங்கள் நிறைய தூரம் பயணம் செய்திருப்பீர்கள். டயரில் காற்று வெளியேறுகிறது என்பதை நீங்கள் உணராவிட்டால் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

ஸ்லோ பஞ்சர் பிரச்னை ஏற்பட்டிருக்கும்போது, வாகனத்தை நீண்ட தூரம் ஓட்டுவது நல்லதல்ல. ஸ்லோ பஞ்சர் பிரச்னையை ஒரு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். காற்று வெளியேறுவதன் காரணமாக, வாகனம் ஒரு பக்கமாக இழுத்து செல்வதை போன்ற சூழல் ஏற்படலாம். மேலும் ஒருவிதமான சத்தத்தையும் நீங்கள் கேட்கலாம்.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

சாலையில் கிடந்த ஏதாவது குப்பை டயரை துளைத்து, டயரிலேயே சிக்கி கொண்டிருந்தால் இந்த சத்தம் கேட்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான கார்கள் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வசதியுடன் வருகின்றன. டயரில் காற்றழுத்தம் குறைவதை இந்த அமைப்பு கண்டறிந்தால், உங்களை எச்சரிக்கை செய்யும்.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

ஆனால் அனைத்து கார்களிலும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருப்பதில்லை. எனவே இந்த தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி கொண்டிருப்பது நல்லதல்ல. ஸ்லோ பஞ்சர் பிரச்னையை நீங்கள் முன்கூட்டியே கண்டறிந்து விட்டால், டயரில் இருக்கும் காற்றை வைத்து கொண்டு சிறிது தூரம் பாதுகாப்பாக பயணம் செய்து விடலாம்.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

ஆனால் பயணம் அத்தியாவசியமானது என்றால் மட்டுமே இதனை செய்ய வேண்டும். வாகனத்தின் மற்ற டயர்களுடன் ஒப்பிடும்போது ஏதாவது ஒரு டயரின் வடிவம் சற்று மாறியிருப்பது போல் இருந்தாலும், அது ஸ்லோ பஞ்சர் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிதான். இந்த அறிகுறிகளை பொறுத்து செயல்படுவதன் மூலம் நீங்கள் பிரச்னையில் சிக்கி கொள்வது தவிர்க்கப்படும்.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஸ்லோ பஞ்சர் பிரச்னை ஏற்பட்டிருந்தால் வாகனம் ஒரு பக்கமாக இழுத்து செல்லலாம். இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக காரை நிறுத்தி விட்டு டயரை பரிசோதிப்பது நல்லது. அதன்பின்பு அங்கிருந்து புறப்படலாம். அதேபோல் டயரில் காற்றழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

உங்க வண்டி டயரில் ஸ்லோ பஞ்சர் இருந்தா எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா பீ கேர்ஃபுல்!

இதுதவிர நீங்கள் வீட்டில் இருந்து எங்கே புறப்படுவதாக இருந்தாலும் வாகனத்தை ஒரு முறை சிறிய அளவில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பயணத்தின் நடுவழியில் நீங்கள் தேவையில்லாமல் சிரமப்படுவதை இதன் மூலமாக தவிர்க்கலாம். எனவே எங்கு செல்வதாக இருந்தாலும் வாகனத்தை பரிசோதித்து பார்த்து விட்டு புறப்படுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top Tips: How To Spot A Slow Puncture. Read in Tamil
Story first published: Saturday, June 26, 2021, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X