டொராய்டியன்... ஒரு மெகாவாட் திறன் கொண்ட ஹைப்பர் எலக்ட்ரிக் கார்!

Written By:

பின்லாந்து நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிசக்திவாய்ந்த ஹைப்பர் எலக்ட்ரிக் கார் மாடலை தயாரித்துள்ளது.

டொராய்டியன் என்று அழைக்கப்படும் இந்த மின்சார கார் 100 விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அதிசக்திவாய்ந்த காரின் கூடுதல் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

லீமான்ஸ் ரேஸ்

லீமான்ஸ் ரேஸ்

உலக புகழ்பெற்ற லீமான்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நோக்குடன் இந்த ஹைப்பர் எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளதாக, டொராய்டியன் நிறுவனத்தின் சிஇஓ., பாசி பென்னானென் கூறியிருக்கிறார்.

பவர்

பவர்

முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் இந்த காரில் இருக்கும் மின் மோட்டார்கள் ஒன்றுசேர்ந்து அதிகபட்சமாக 1,341 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

கடந்த 4 ஆண்டுகால உழைப்பில் இந்த காரையும், இதற்கான புதிய பேட்டரி தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளனர். மேலும், 15 தொழிலாளர்களுடன் இந்த நிறுவனம் இந்த அதிசக்திவாய்ந்த ஹைப்பர் எலக்ட்ரிக் காரை தயாரித்து அசத்தியிருக்கிறது.

விற்பனை

விற்பனை

லீமான்ஸ் கார் பந்தயத்திற்காக உருவாக்கப்பட்டாலும், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான அம்சங்களுடன் மாற்ற முடியும். மேலும், முதல் லாட்டில் 100 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும் டொராய்டியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலாதி சப்தம்

அலாதி சப்தம்

மின்சார கார்கள் என்றாலே, சப்தமின்றி ஓடும் என்ற கருத்து இருக்கிறது. ஆனால், பிற ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார்கள் போன்று இந்த கார் சப்தம் எழுப்பும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சார்ஜ் செய்வது எளிது

சார்ஜ் செய்வது எளிது

இந்த காரின் பேட்டரியை தனியாக கழற்றி எடுத்து வீட்டிற்குள் வைத்தே சார்ஜ் செய்ய முடியும். வெளியிடங்களுக்கு செல்லும்போது பிற எலக்ட்ரிக் கார்களை போன்றே சார்ஜ் பாயிண்ட்டுகள் மூலமாக சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

சுய நிதி சாத்தியம்

சுய நிதி சாத்தியம்

இந்த காருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்களை பிற நிறுவனங்களுக்கு விற்கும்போது, அதிலிருந்து கிடைக்கும் நிதியை வைத்தே இந்த காரை வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேகம்

வேகம்

இந்த ஹைப்பர் எலக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 201 கிமீ வேகம் வரை தொடக்கூடிய வல்லமை கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், டெஸ்லா எலக்ட்ரிக் காரின் செயல்திறனை விரும்புவோர் இந்த காரையும் கை நீட்டி வரவேற்பர் என்று டொராய்டியன் சிஇஓ., கூறியிருக்கிறார்.

விலை

விலை

இந்த டொராய்டியன் ஹைப்பர் எலக்ட்ரிக் கார்1.5 மில்லியன் டாலர் முதல் 3.5 மில்லியன் டாலர் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. அதிகளவில் தயாரிக்கும்போது, நிச்சயம் விலை வெகுவாக குறையும் என்றும் டொராய்டியன் தெரிவித்துள்ளது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Finland based car maker is developing an electric car that has so much horsepower that it makes a Tesla look like a go-cart.
Story first published: Thursday, August 13, 2015, 12:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark