தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்... பிரான்ஸில் நடந்த பயங்கர பஸ் விபத்து!

Written By:

பிரான்ஸ் நாட்டில், ஓட்டுனரின் அஜாக்கிரதையால் நடந்த பஸ் விபத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் பஸ்சின் கூரை மட்டும் தனியாக கழன்றது. இந்த விபத்து குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர்.

 தூக்க கலக்கம்

தூக்க கலக்கம்

பஸ்சின் ஓட்டுனர் முன்னால் சென்ற வாகனங்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனால், அந்த சுரங்க பாலத்தின் உயரத்தை கணக்கில் கொள்ளாமல் பஸ்சை செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

 ஸ்பெயின் மாணவர்கள்

ஸ்பெயின் மாணவர்கள்

ஸ்பெயினிலிருந்து பிரான்சிற்கு சுற்றுலா சென்ற மாணவரகளின் பஸ்தான் விபத்தில் சிக்கியுள்ளது. பஸ்சில் 59 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

கூரை பிய்ந்தது...

கூரை பிய்ந்தது...

அதிகாலை 5.30 மணிகக்கு விபத்து நடந்தது. அந்த பாலம் மிக தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் ஓட்டுனர் பஸ்சை செலுத்தியுள்ளார். அப்போது. பஸ்சின் கூரை கான்கிரீட் மீது மோதி தனியாக கழன்றது. அதாவது, பயணித்தவர்களின் இருக்கைக்கும், பாலத்தின் மேற்பகுதிக்கும் சிறிய இடைவெளி மட்டுமே இருந்துள்ளது.

பலர் காயம்

பலர் காயம்

அந்த பஸ்சில் பயணித்தவர்களில் 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள்

மீட்புப் பணிகள்

பஸ்சில் இருந்தவர்களை போலீசார் மீட்டுள்ளனர். அவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். பில்பாவோ என்ற இடத்திலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்றபோதுதான் அந்த பஸ் விபத்தில் சிக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன்.

கவனம் தேவை

கவனம் தேவை

ஜிபிஎஸ் சாதனத்தின் உதவியுடன் செல்லும்போது வழியில் உள்ள எச்சரிக்கை பலகைகளை பலர் கவனிக்க தவறுவதாலேயே இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே, நேவிகேஷன் சாதனங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டாலும், நாம் கவனமாக இருப்பதும் அவசியம் என்பதை இந்த விபத்து காட்டுகிறது. எனவே, எப்போதும் வாகனம் ஓட்டும்போது முழு கவனத்தையும் சாலையில் செலுத்துவதுடன், சமயோஜிதமாக செயல்படுவதும் அவசியம்.

Photo credit: euronews 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
More than 30 people have been injured, six of them seriously, after a coach carrying Spanish students had its roof sheared off.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark