லாரியை டோ பண்ணினு போகலாம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் பைக்குக்கு இவ்வளவு வலிமையா!

அல்ட்ராவொய்லெட் எஃப்77 (Ultraviolette F77) எலக்ட்ரிக் பைக்கை கொண்டு 50 இருக்கைகளை கொண்ட பேருந்தை இழுக்க யூடியூப்பர் ஒருவர் முயற்சித்து உள்ளார். கடைசியில் என்ன நடந்தது வாருங்கள் பார்ப்போம்.

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் வேகமாக விரிவடைந்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களை நம்பாதவர்களும் சிலர் இருக்க தான் செய்கின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதிலும் சில குறைகள் இருக்கின்றன. அதாவது, தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள முடியாது, சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும் என்பன போன்றவை.

bus pulled by ultraviolette f77

அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்களின் உடல் கட்டமைப்பின் மீதும் மக்கள் மத்தியில் சந்தேகம் இல்லாமல் இல்லை. ஏனெனில், பெரும்பாலான எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைக்கு புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என்பதால், அவை உருவாக்கும் வாகனங்களின் கட்டமைப்பு வலிமை எந்த அளவிற்கு இருக்கும் என்கிற சந்தேகம் எழுகிறது.

இந்த சந்தேகத்தை தெளிவுப்படுத்தும் வகையிலும், யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைபர்ஸை, வீடியோவிற்கு பார்வையாளர்களை பெறும் முயற்சியிலும், யூடியூப்பர் ஒருவர் அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை கொண்டு 50 இருக்கைகளை கொண்ட பேருந்தை இழுக்க முயற்சித்துள்ளார். அது நடந்ததா இல்லையா என்பது சஸ்பென்ஸ்.

bus pulled by ultraviolette f77

அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவொய்லெட் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் இதுவாகும். மேலும், இந்தியாவின் அதிவேகமான எலக்ட்ரிக் சூப்பர் பைக். கடந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கூட துவங்கிவிட்டன.

பொதுவாகவே, சூப்பர் பைக்குகளில், ஆற்றல்மிக்க என்ஜின் மூலமாக அதிக டார்க் திறன் கிடைக்கும். அதேபோல், அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கிலும் அதிக டார்க் திறன் கிடைக்கிறது. இதனை சோதிக்கும் வகையில், சுமார் 7,500க்கும் அதிகமான எடை கொண்ட சுற்றுலா பேருந்தை யூடியுப்பர் ஒருவர் அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கின் உதவியுடன் இழுக்க முயற்சித்துள்ளார்.

bus pulled by ultraviolette f77

இந்த வீடியோ, 'பைக் வித் கேர்ள்' என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. ஆம், இந்த முயற்சியை மேற்கொண்டவர் ஒரு பெண் ஆவார். இந்த சோதனையை அவர் நேரடியாக பேருந்தில் மேற்கொள்ளவில்லை. முதலில், எஃப்77 பைக்கை கொண்டு டொயோட்டா இன்னோவா காரை இழுக்க இந்த பெண் ரைடர் முயற்சித்தார். இன்னோவாவின் எடை 1700 கிலோ ஆகும்.

இன்னோவா காரை எஃப்77 பைக் எளிமையாக இழுத்து சென்றது. காரை தொடர்ந்து, 6,500 கிலோ எடை கொண்ட லாரியை இழுக்க முயற்சி நடந்தது. இந்த முயற்சியும் வெற்றியடைந்தது. அதன்பின்பே, சுற்றுலா செல்ல பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேருந்து சோதனையில் உட்படுத்தப்பட்டது. இந்த சோதனைகள் அனைத்திலும், முறையான டோ கொக்கியும், பாதுகாப்பிற்கு வாகனத்திற்கு பின்பக்கத்தில் உலோகமும் பொருத்தப்பட்டன.

bus pulled by ultraviolette f77

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் பைக்கை விட எலக்ட்ரிக் பைக்குகளின் எடை குறைவு. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களில் உடனடியாக டார்க் திறன் கிடைக்கிறது. ஆனாலும், பைக் ஒன்றை கொண்டு சுமார் 7,500 கிலோ எடை கொண்ட பேருந்தை இழுக்க முயற்சிப்பது எல்லாம் வேற லெவல். இந்த முயற்சியில் பைக்கால் பேருந்து இழுக்கப்பட்டதா என கேட்டால், சில அடி தூரத்திற்கு இழுக்கப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2023, 19:31 [IST]
English summary
Tourist bus pulled by ultraviolette f77 electric bike here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X