மனித குலத்திற்கே இழிவான செயல் இதெல்லாம்!! காருக்குள் வளர்ப்பு நாய்க்கு நடந்த கொடுமை - ஆக்ராவில் பரபரப்பு
தாஜ்மஹாலை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகள் தங்களுடன் அழைத்துவந்த நாயை காருக்குள் அடைத்து வைத்துவிட்டு வெளியே சென்ற சம்பவம் ஆக்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் அந்த நாய்க்கு என்ன ஆனது? மூடிய காருக்குள் ஏன் இவ்வாறு பிராணிகளை விட்டுவிட்டு செல்லக்கூடாது? என்பதற்கான பதில்களை இனி பார்க்கலாம்.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் இந்தியா சூடான நாடு என்பதை மறுப்பதற்கில்லை. இதனாலேயே குறிப்பாக, பயணம் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, வேகமாக குறையும் நீர்ச்சத்தை மீட்டெடுக்க எப்போதும் பயணத்தின்போது இருப்பில் குடிக்க நீர் வைத்திருக்க வேண்டும் என்பன போன்றவை ஆகும்.

காரில் பயணிக்கிறீர்கள் என்றால், அதற்கேற்ப சில உதவி பொருட்களை கையோடு எடுத்து செல்வது நல்லது. அதேபோல், கார் பயணத்திற்காக சில விஷயங்களை தெரிந்து வைத்திருத்தலும் அவசியம் ஆகும். அதாவது, ஜன்னல் கண்ணாடிகள் மூடப்பட்ட, ஆஃப் செய்யப்பட்ட காருக்குள் குழந்தைகள் அல்லது சிறுவர்/ சிறுமியரை விட்டு செல்லக்கூடாது என்பது போன்ற விஷயங்களை.
குழந்தைகள் மட்டுமின்றி, செல்லப்பிராணிகளையும் சிலர் காருக்கு உள்ளே விட்டு, கதவுகளை லாக் செய்துவிட்டு கிளம்பிவிடுவர். இது ஓர் மோசமான செயலாகும். ஏனெனில், மூடப்பட்ட காருக்குள் ஆக்ஸிஜனின் அளவு குறைய ஆரம்பிக்கும். கார் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் ஏசி காற்று கிடைக்காது. இவற்றுடன், மேற்கூரையில் இருந்து இறங்கும் வெப்பமும் சேர்ந்தால் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை மயக்கமடைய செய்துவிடும்.

அவ்வாறு மயக்கமடைந்தவர்களை நீண்ட நேரத்திற்கு மீட்காமல் விட்டால், அவர்கள் உயிரிழப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. இதையெல்லாம் ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், இதேபோன்றதான ஓர் சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தாஜ்மஹாலை காண ஆக்ராவிற்கு காரில் தங்களது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் ஆக்ராவை அடைந்ததும், நாயை காருக்கு உள்ளேயே விட்டுவிட்டு தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். காருக்குள் நீர் இல்லை, காற்றோட்டமான வசதியும் இல்லை. இவற்றை விட முக்கியமாக, நேரம் ஆக ஆக காருக்குள் வெப்பத்தின் அளவு அதிகமாகியது. இந்த இன்னல்கள் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளே இருந்த நாய் ஒரு கட்டத்தில் சுருண்டு தரையில் விழுந்துள்ளது.
@agrapolice - Kindly look into it.
— UP POLICE (@Uppolice) July 2, 2023
காருக்குள் நாய் இந்த நிலையில் இருப்பதை வெளியில் இருந்து கண்ட ஒருவர் நாயை எப்படியாவது காப்பாற்ற நினைத்துள்ளார். ஆனால் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துதான் காப்பாற்ற முடியும் என்பதால், தன்னால் இயன்ற உதவியாக காருக்குள் நாயின் நிலைமையையும், பதிவெண் உடன் காரையும் தனது மொபைலில் படம் பிடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ஆக்ரா போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பதிலளித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தாஜ்மஹாலில் நாய் போன்ற வளர்ப்பு பிராணிகள் அனுமதிக்கப்படாது. இதனாலேயே இந்த ஹரியானா குடும்பம் தங்களது நாயை காருக்குள் அடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். ஒன்று, தாஜ்மஹாலுக்குள் வளர்ப்பு பிராணிகள் அனுமதிக்கப்படுமா என்பதை இணையத்தில் தேடி அறிந்திருக்க வேண்டும். அல்லது, மூடிய காருக்குள் வளர்ப்பு பிராணிகளை அடைத்து வைத்தால் என்ன ஆகும் என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








