அரைகுறை ஆடை, பீர் பாட்டில்! 2 ஆண்களுடன் நடுரோட்டில் இளம்பெண் செய்த காரியம்! காட்டு தீ போல் பரவும் வீடியோ!
கோவா என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது பார்ட்டிதான். இந்தியாவின் பார்ட்டி டவுன் என்ற பெருமை கோவாவிற்கு உண்டு. ஆனால் வாகனங்களை ஓட்ட கூடியவர்களும் கண்மூடித்தனமாக மது அருந்துவதால், கோவாவில் நிறைய சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சிலர் கடற்கரைகளில் வாகனங்களை ஓட்டி சிக்கி கொண்ட நிகழ்வுகளும் கூட அரங்கேறியுள்ளன.
இந்த வரிசையில் கோவாவில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் வேகமாக செல்லும் ஒரு காரின் மேற்கூரையில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதே நேரத்தில் காரின் வலது பக்க ஜன்னல் வழியாக ஒரு பெண், பாதி உடலை வெளியே நீட்டி கொண்டு பயணம் செய்வதையும் நாம் பார்க்கலாம். இதுதவிர இடது பக்க ஜன்னல் வழியாகவும், ஒருவர் பாதி உடலை வெளியே நீட்டி கொண்டு பயணம் செய்கிறார். இவர்கள் இருவரின் கையிலும் பாட்டில்கள் இருக்கின்றன.
அனேகமாக அவை பீர் பாட்டில்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் மூவரும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தது, மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) கார் ஆகும். இந்த காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
கார்களில் இதுபோன்ற முறையில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தால், படுகாயங்கள் ஏற்படலாம். உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. எனவேதான் கார்களில் இதுபோன்ற முறையில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
கார்களில் பயணம் செய்யும்போது, சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது நல்லது. அதுதான் விதிமுறையும் கூட. சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே, சாலை விபத்துக்களின்போது படுகாயங்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அதை விடுத்து விட்டு, இந்த வீடியோவில் இருப்பவர்களை போல் பயணம் செய்தால், தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகலாம். ஆனால் இந்த வெளிநாட்டவர்கள் மீது காவல் துறை தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய மண்ணில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கையை ஓரளவிற்காவது குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








