குடும்பத்தினர் உடன் விலையுயர்ந்த காரை டெலிவிரி எடுத்த முன்னணி நடிகர் - வேறு யாரிடமும் இல்லாத பிஎம்டபிள்யூ கார்
கேரளத்துக் காரர்கள் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது கூடுதல் ஆர்வம் கொண்டவர்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. கேரளாவில், பழமையான கிளாசிக் கார்களை பல வருடங்களாக இப்போதும் பாதுகாப்பு வைத்திருப்பவர்களும் இருக்கின்றனர், அதேநேரம் அவ்வப்போது புது, புது வாகனங்களை வாங்குபவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, மலையாள சினிமா ஸ்டார்கள் தங்களை அப்டேட்டாக காட்டிக் கொள்ள அடிக்கடி புதிய கார்களை வாங்குகின்றனர். அந்த வகையில், மலையாள சினிமாவின் இளம் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் டோவினோ தாமஸ் புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஹைப்ரீட் காரை வாங்கியுள்ளார்.
பெட்ரோல் என்ஜின் + எலக்ட்ரிக் மோட்டார் உடன் இரண்டும் கலந்த கலவையில் கிடைப்பவையே ஹைப்ரீட் கார்கள் ஆகும். இத்தகைய கார்களை பெட்ரோலிலும் இயக்கலாம், அதேநேரம் முழுவதுமாக எலக்ட்ரிக் பவரிலும் இயக்கலாம். இதற்காக நீங்கள் காரினுள் வழங்கப்படும் பேட்டரியை சார்ஜ் ஏற்ற வேண்டியிருக்கும். ஹைப்ரீட் கார்களுக்கு மார்க்கெட் இந்தியாவில் பெரிய அளவில் இல்லை.

மாருதி சுஸுகி, டொயோட்டா போன்ற மிகவும் சில கார் நிறுவனங்கள் மட்டுமே குறைந்த விலையில் ஹைப்ரீட் கார்களை விற்பனை செய்கின்றன. ஆனால், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற லக்சரி கார் நிறுவனங்கள் நிறைய ஹைப்ரீட் கார்களை விற்பனை செய்கின்றன. ஆனால், அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் நிறைய பேர் வாங்குவதில்லை.
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் போன்ற சில செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர். இந்த நடிகர் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் கார் ஆகும். பொதுவாகவே, ஹைப்ரீட் கார்கள் சற்று விலைமிக்கவை ஆகும். நடிகர் டோவினோ தாமஸ் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் ஹைப்ரீட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.2.6 கோடியாக உள்ளது.

மின்னல் முரளி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக உயர்ந்த டோவினோ தாமஸ், மற்ற மலையாள நடிகர்களை போன்று கார்களிலும், பைக்குகளிலும் ஆர்வமிக்கவர் ஆவார். பெரும்பாலும் தான் செல்லும் கார்களை தானே ஓட்ட விரும்புபவர். இத்தகைய நடிகர் புதியதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் காரை டெலிவிரி பெற்றதை ஓர் சிறிய நிகழ்ச்சி போல் நடத்தி இருந்தனர்.
இந்த கார் டெலிவிரி நிகழ்ச்சியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் டோவினோ தாமஸ் கலந்துக் கொண்டார். மேலும், டோவினோ தாமஸ் காரை டெலிவிரி எடுத்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. குடும்பத்தினரை அமர வைத்து, ஷோரூமில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் காரை நடிகர் டோவினோ தாமஸ் ஓட்டிச் சென்றார்.

கேரள சினிமா வட்டாரத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்.எம் காரை வாங்கிய முதல் ஆள் நடிகர் டோவினோ தாமஸ் என கூறப்படுகிறது. ஜெர்மனி கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் எக்ஸ்.எம் ஹைப்ரீட் காரை இந்தியாவில் ரூ.2.6 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்தாலும், இந்த காரின் கொச்சி ஆன்-ரோடு விலை ரூ.3.26 கோடி ஆக உள்ளது.
22-இன்ச் எம் ஸ்பெக் அலாய் சக்கரங்கள் அல்லது 23-இன்ச் அலாய் சக்கரங்கள் உடன் இந்த காரை வாங்கலாம். நடிகர் டோவினோ தாமஸ் 22-இன்ச் எம் ஸ்பெக் அலாய் சக்கரங்களுடன் காரை வாங்கியுள்ளார். இவை எம் ஸ்பெக் சக்கரங்கள் என்பதால், 23-இன்ச் அலாய் சக்கரங்களை விட இவை சிறந்தவை ஆகும். 4.4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 25.7kWh பேட்டரி கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் இந்த காரில் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற பிஎம்டபிள்யூ கார்களை காட்டிலும் எக்ஸ்.எம் ஆனது கொஞ்சம் ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய காரை தான் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.3 கோடியை தாண்டி போனாலும், இந்த காரை வாங்குவது டோவினோ தாமஸ் போன்றோர்க்கு பெரிய விஷயமே கிடையாது.


Click it and Unblock the Notifications









