உங்கள் வாகனத்தை டோவ் செய்யும் முன் இதைக் கொஞ்சம் பாருங்களேன்!

Written By:

சில சமயம் கார்களில் எதிர்பாராத விதமாக இயந்திரக் கோளாறு அல்லது சேற்றில் சிக்கிக்கொள்ளும் போது டோவ் செய்யும் வாகனம் அல்லது அவசரத்திற்கு மற்றொரு வாகனத்தை கொண்டு கட்டி இழுத்து அதனை மீட்டு விடுவோம்.

இது அனைத்து நேரங்களிலும் வெற்றிகரமாக அமைவதில்லை. சமூக வலைத்தளங்களில் வலம் வரும் ஒரு வீடியோ இதைப் போன்று டோவ் செய்வோர்க்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

அந்த வீடியோவில், ஜீப் டேங்லர் ஒன்று ஆள் அரவமற்ற பகுதியில் உள்ள சேற்றுப்பகுதியில் கடுமையாக சிக்கிக்கொள்கிறது. சேற்றில் சிக்கிய ஜீப்பை மீட்க அதன் மேல்பகுதியில் உள்ள இரும்பு பாரில் கயிற்றால் கட்டி மறுமுனையை மற்றொரு வாகனத்தில் இணைத்து அதன் மூலம் ஜீப்பை மீட்க முயல்கின்றனர்.

ஆனால், இவர்களின் முயற்சி விபரீதமாக முடிகிறது. மற்றொரு வாகனத்தில் கட்டப்பட்ட கயிற்றில் இணைந்த ஜீப்பின் டாப் மட்டும் கழன்று வந்துவிட்டது. ஆனால் சிக்கிய ஜீப் நகரக்கூட இல்லை.

இனி, இதுபோன்ற சம்பவங்களில் உங்கள் வாகனமும் சிக்கிக்கொண்டால் சற்று கவனமுடன் தான் கையாளவேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.

சேற்றில் சிக்கிய காரை மீட்கும் வீடியோ:

ஆஃப் ரோடிங்கில் கலக்கும் புதிய ஃபோர்டு எண்டேவர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்: 

English summary
towing goneThey could have yanked that Jeep from the leaf springs or axles or front bumper or anything connected directly to the frame. Anything but the body.
Story first published: Sunday, March 12, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos