பறக்கும் கார்களை தயாரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

டொயோட்டா நிறுவனம் பறக்கும் கார்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் வடிவமைத்த பறக்கும் காருக்கு, காப்புரிமை பெற அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. பறக்கும் கார்கள் குறித்து பல்வேற

டொயோட்டா நிறுவனம் பறக்கும் கார்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் வடிவமைத்த பறக்கும் காருக்கு, காப்புரிமை பெற அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. பறக்கும் கார்கள் குறித்து பல்வேறு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அதனுடன் டொயோட்டா நிறுவனமும் சேர்ந்துள்ளது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், வீல் மற்றம் ரோட்டர் கொண்ட இரண்டு மோடு வாகனத்திற்கான காப்புரிமையை கோரியுள்ளது. கிட்டத்தட்ட பறக்கும் காரை போன்று டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த வாகனம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பார்க்கலாம் வாருங்கள்.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

டொயோட்டா நிறுவனம் இந்த பறக்கும் கார் குறித்த காப்புரிமைக்கான படத்தை வெளியிட்டது. அதன்படி பார்த்தால் இந்த வாகனம் ஒரு பறக்கும் ட்ரோன் போன்ற காட்சியமைப்பில் உள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டில் உபேர், போயீங், சுபுரூ ஆகிய நிறுவனங்கள் இணைந்து பறக்கும் காருக்கான தொழிற்நுட்பத்தை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

தற்போது டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் உள்ளபடி இதில் நிரந்தரமாக பொருத்தப்பட்ட இறக்கைகள் உள்ளன. மேலும் வாகனம் செல்வதற்காக வீல்களும் உள்ளது. இதில் ரோட்டர்கள் வாகனத்தை மேலே பறக்க வைக்கும்போது வீல்கள் வாகனத்தை தரையில் செயல்பட வைக்கும் போது பயன்படுகிறது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

இந்த வாகனம் பறக்கும் போது பெல் போயீங் வி-22 ஓஸ்பிரே விமானத்தை போல காட்சியளிக்கிறது. ஓஸ்பிரே விமானம் என்பது டில்ட் ரோட்டர் மிலிட்டரி விமானமாகும். இது அமெரிக்க ராணுவ விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

இந்த ஓஸ்பிரே விமானம் விடிஒஎல் எனப்படும் இருந்த இடத்தில் இருந்த டேக் ஆப் செய்யும் திறனையும், ரன்வேயில் சென்று டேக் ஆஃப் செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

இந்த வாகனத்தில் வீல்கள் நேரடியாக தரையுடன் இருந்து வாகனத்தை தரையில் ஓட்ட உதவி செய்யம். அதே நேரத்தில் இந்த வாகனத்தின் பொஷிஷன்கள் எல்லாம் மைய நோக்கு விசையை நோக்கி அமைந்திருக்கும். விமானத்தை பிளைட் மோட்டிற்கு மாற்றிய பின்னர்தான் அதில் உள்ள ரோட்டார்கள் வேலை செய்யும் எனவும், வீல்களை விட அகலமான இடத்தில்தான் ரோட்டார் அமைந்திருக்கும் எனவும் இதன் காப்புரிமை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

இதன் மூலம் ஒரு பட்டனை அழுத்துவதால் இந்த வாகனத்தில் உள்ள இறக்கைகள் விரிவடைந்து ரோட்டார்கள் சுற்ற துவங்கும். இது முற்றிலும் கேஸ் டர்பைன் ஜெனரேட்டர், ஹைட்ரஜன் பியூயல் செல், மற்றும் பெரிய பேட்டரி பேக் ஆகியவற்றை கொண்டு இயங்குகிறது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

தற்போது வெளியாகியுள்ள இந்த வரைபடத்தில் பெரிய அளவில் இந்த வாகனம் குறித்த தகவல்கள் இல்லை. இதனால் இது எப்பொழுது தயாராகி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல்களையும் கணிக்க முடியாது.

பறக்கும் கார்களை தயரிக்கும் டொயோட்டா… டிராபிக்கை கட்டுப்படுத்த புதிய யோசனை

எனினும் டொயோட்டா நிறுவனம் புதிய ரக வாகனங்களை தயாரிப்பதில் முனைப்பை காட்டியிருப்பது வரவேற்க்கத்தக்கது. எதிர்கால போக்குவரத்து துறையில் பெரும்பாலும் பறக்கும் வாகனங்களே ஆக்கிரமிக்கப்போகின்றன என்றும், நிலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திறந்த வெளி ஆகாயத்தில் பயணிப்பதை மக்கள் விரும்புவர் எனவும் பேசப்படுகிறது.

Most Read Articles

மஹிந்திரா நிறுவனம சமீபத்தில் வெளியிட்ட மராஸ்ஸோ காரை வெளியிட்டது அதன் புகைப்பட ஆல்பத்தை இங்கே காணுங்கள்...

மேலும்... #டொயோட்டா
English summary
Toyota applied patent for flying cars.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X