தொடுதிரை வசதிக்கொண்ட கார் கன்ணாடிகள்: டொயோட்டா அறிவிப்பு

கார் தயாரிப்புகளில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள டொயோட்டா மோட்டார்ஸ், கார் கண்ணாடிகளை புதுமையான தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளது, அதைக்குறித்து இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

கார் கண்ணாடிகளும் இனி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கின்றன. டொயோட்டா நிறுவனம் 'Window to the World' என்ற பெயரில் தொடுதிரை வசதிக்கொண்ட கார் கண்ணாடிகளை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தை கார் கண்ணாடிகள் வழியாக பார்க்கும் டொயோட்டா

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தனித்துவத்தோடும் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டும் வாகனங்களை தற்போது உருவாக்கத் தொடங்கியுள்ளன.

எதிர்காலத்தை கார் கண்ணாடிகள் வழியாக பார்க்கும் டொயோட்டா

முக்கியமாக குரல் உதவியுடனான தொலைப்பேசி அழைப்பு செயல்பாடு, தனிப்பட்ட இணைய வானொலி சேவை ஆகியவை இன்றையை காலகட்டத்தில் பெரும்பாலான கார்களில் சர்வசாதரணமாக கிடைக்கின்றன.

எதிர்காலத்தை கார் கண்ணாடிகள் வழியாக பார்க்கும் டொயோட்டா

இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு பிறகு இன்று உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா மோட்டார், கார் கண்ணாடிகளில் புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது.

எதிர்காலத்தை கார் கண்ணாடிகள் வழியாக பார்க்கும் டொயோட்டா

டொயோட்டா நிறுவனத்தின் ஐரோப்பிய கிளை ஒன்று, தொடர்பு சாதன பொருட்களை வடிவமைத்து வரும் கோபென்ஹெகன் நிறுவனத்துடன் இணைந்து தொடுதிரை வசதிகளுடன் கூடிய கார் கண்ணாடிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

டொயோட்டாவின் தொடுதிரை கார் கண்ணாடிகள், பயணிகளின் ஆக்கத்திறனுக்கு ஏற்றவாறு, கண்ணாடி மூலம் வெளியே தெரியும் காட்சிகளை அதன் மேலேயே வரைந்துக்கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தை கார் கண்ணாடிகள் வழியாக பார்க்கும் டொயோட்டா

‘Window to the World' அதாவது 'உலகிற்கான கார் கண்ணாடிகள்' என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த தொழில்நுட்பம் கிட்டத்தட்ட பயணிகளுக்கு ஒரு விளையாட்டு திறன் போல வடிவமைக்கப்படுகிறது.

எதிர்காலத்தை கார் கண்ணாடிகள் வழியாக பார்க்கும் டொயோட்டா

காரில் வெளியே தெரியும் காட்சிகளை திருத்தமாக வரைய நாம் வரையக்கூடிய பகுதிக்கு காரின் இருக்கையில் இருந்தவாரே, ஜூம் செய்து பார்த்து துல்லியமாக குறிப்புகளை எடுக்கக்கூடிய வசதியையும் டொயோட்டா தனது தொடுதிரை கார் கண்ணாடிகளில் உருவாக்கவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota is working on a concept named as the 'Window to the World'. This new concept turns a normal window into a smart touchscreen
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X