டொயோட்டா காருக்கு 20 ஆயிரம் அபராதம்! காரணத்தை கேட்டதும் கொந்தளித்த மக்கள்! அதிகாரிங்க மேல டென்ஷன் ஆயிட்டாங்க!

இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் (Delhi), காற்றின் தரம் அவ்வப்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடுகிறது. எனவே அங்கு காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 10 ஆண்டுகளை கடந்த டீசல் (Diesel) வாகனங்களையும், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் (Petrol) வாகனங்களையும் இயக்குவதற்கு தடை (Ban) விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால் ஒரு டீசல் வாகனம் 10 ஆண்டுகளை கடந்து விட்டாலே, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பயன்படுத்த முடியாது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) மற்றும் உச்ச நீதிமன்றம் (Supreme Court) ஆகிய சக்தி வாய்ந்த அமைப்புகளின் உத்தரவிற்கு இணங்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா காருக்கு 20 ஆயிரம் அபராதம்! காரணத்தை கேட்டதும் கொந்தளித்த மக்கள்! அதிகாரிங்க மேல டென்ஷன் ஆயிட்டாங்க!

அப்பப்ப தடை வேற!

இதுதவிர அவ்வப்போது வாகனங்களுக்கு தற்காலிக தடைகளையும் டெல்லி அரசு விதித்து வருகிறது. இதன்படி சமீபத்தில் ஒரு தற்காலிக தடை உத்தரவை டெல்லி அரசு பிறப்பித்திருந்தது. ''பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்களை, ஜனவரி 12ம் தேதி வரை டெல்லி சாலைகளில் இயக்க கூடாது'' என இந்த தற்காலிக தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு செல்லும்போதெல்லாம், இதுபோன்ற தற்காலிக தடை உத்தரவுகள் அமலுக்கு கொண்டு வரப்படும். காற்றின் தரம் மேம்பட்டதும், தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படும். இந்த வரிசையில்தான் சமீபத்திலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த தடை உத்தரவை மீறி, தனது பிஎஸ்-3 பெட்ரோல் டொயோட்டா கரோல்லா அல்டிஸ் காரை ஓட்டிய ஒருவருக்கு அதிகாரிகள் அதிரடியாக அபராதம் (Fine) விதித்துள்ளனர். அவரது காருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா காருக்கு 20 ஆயிரம் அபராதம்! காரணத்தை கேட்டதும் கொந்தளித்த மக்கள்! அதிகாரிங்க மேல டென்ஷன் ஆயிட்டாங்க!

தனக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறித்த தகவல்களை அந்த நபர் சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு, சமூக வலை தளங்களில் தற்போது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அரசாங்கள் அபராதமாக விதிப்பது என்பது நியாயமற்றது என நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் திடீர் திடீரென்று விதிக்கப்படும் இதுபோன்ற தற்காலிக தடைகளால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

மக்கள் சிரமப்பட்றாங்க!

பஸ் (Bus), ரயில் (Train) போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியாது, சொந்த வாகனத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள்தான் இதனால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த நபர், சமூக வலை தளங்களில் பதிவிட்டதால், விஷயம் வெளியே தெரிந்தது. இவரை போல், இன்னும் நிறைய பேர் 20 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தியிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசின் தரப்பில் இருந்தும் இந்த பிரச்னையை நாம் அணுக வேண்டியுள்ளது.

உங்ககிட்ட சொல்யூஷன் இருக்கா?

எனவே அரசு இப்படி திடீர் திடீரென தடை உத்தரவை அமலுக்கு கொண்டு வருவதும், இவ்வளவு அபராதங்களை விதிப்பதும் சரியா? அல்லது வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பதற்கு பதில் அரசு வேறு என்ன விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். இதற்கிடையே இந்த பிரச்னைகளே வேண்டாம் என்று, டெல்லியை சேர்ந்த பலர் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி வருகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவை என்பதால், அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அரசும் ஆர்வமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் அதிக செலவு வைக்காது என்பதால், அவற்றை பயன்படுத்துவதில் தற்போது பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். எனவே எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் இடத்தை எலெக்ட்ரிக் வாகனங்கள் பிடிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, January 16, 2023, 12:25 [IST]
English summary
Toyota corolla altis owner fined rs 20000 here is why
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+