அதிசய கார்... இந்த டொயோட்டா தயாரிப்பு எத்தனை லட்சம் கிமீ ஓடியிருக்கு தெரியுமா? அதான் மக்கள் முழுசா நம்பறாங்க!

இந்தியா உள்பட உலகம் முழுவதும், டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தின் கார்கள் உரிமையாளர்களுக்கு எந்த பிரச்னையும் கொடுக்காமல் பல லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடுவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார், 10 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக ஓடிய செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், டொயோட்டா கரோல்லா (Toyota Corolla) கார் ஒன்று, 20 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் ஓடியுள்ள செய்தி தற்போது வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டில்தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா தயாரிப்பு எத்தனை லட்சம் கிமீ ஓடியிருக்கு தெரியுமா? அதான் மக்கள் முழுசா நம்பறாங்க!
Image Courtesy: Twitter/JaMtoka

டொயோட்டா கரோல்லா, மிக நீண்ட காலமாக விற்பனையில் உள்ள கார் ஆகும். இந்த காரை பற்றி இதற்கு முன் நீங்கள் எதையும் கேள்விபட்டிருக்கவில்லை என்றால், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உடன் ஒப்பிட்டு கொள்ளுங்கள். அந்த அளவிற்கு இதுவும் வரலாற்று சிறப்புமிக்க கார்தான். டொயோட்டா கரோல்லா காரின் உற்பத்தி கடந்த 1966ம் ஆண்டு தொடங்கியது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், டொயோட்டா கரோல்லா கார் இன்னமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவரின், 1993 மாடல் டொயோட்டா கரோல்லா கார் வெகு சமீபத்தில் 20 லட்சம் கிலோ மீட்டர்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 30 வயதான இந்த டொயோட்டா கரோல்லா காரின் உரிமையாளரின் பெயர் க்ரீம் ஹெப்லி ஆகும். இவருக்கு 72 வயதாகிறது. 20 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்துள்ள நிலையிலும், இந்த டொயோட்டா கரோல்லா காரின் இன்ஜின் இன்னமும் நல்ல கண்டிஷனில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே வரும் காலங்களிலும் இந்த காரை தொடர்ந்து ஓட்ட முடியும் என க்ரீம் ஹெப்லி நம்புகிறார். க்ரீம் ஹெப்லி நியூசிலாந்தில் செய்தி தாள் டெலிவரி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இந்த அதிசய காரை, க்ரீம் ஹெப்லி யூஸ்டு கார் மார்க்கெட்டில்தான் வாங்கியுள்ளார். கடந்த 2000ம் ஆண்டில், க்ரீம் ஹெப்லி இந்த காரை தன் சொந்தமாக்கினார். அப்போது இந்த கார் 80 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியிருந்தது. தற்போது 20 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இத்தனைக்கும் பெரிதாக எந்தவொரு பிரச்னையையும் ஏற்படுத்தாமல், டொயோட்டா கரோல்லா கார் இந்த மைல்கல்லை கடந்துள்ளது. ஆனால் சீரான கால இடைவெளிகளில் க்ரீம் ஹெப்லி இந்த காரை சர்வீஸ் செய்து விடுவார். க்ரீம் ஹெப்லி இந்த காரை வாங்கி 22 வருடங்கள் ஆகிறது. இந்த 22 வருடங்களும் தவறாமல் காரை அவர் சர்வீஸ் செய்து வருகிறார். அத்துடன் காரில் பெரிதாக எந்த மாற்றங்களையும் அவர் செய்யவில்லை. வீல் பேரிங்குகள் மற்றும் காம்பெல்ட் போன்றவற்றை மட்டும் அவ்வப்போது மாற்றி வந்துள்ளார்.

தொடர்ச்சியாக ஒரே காரை ஓட்டி கொண்டிருப்பதால் எந்தவிதமான சோர்வும் ஏற்படவில்லை எனவும் க்ரீம் ஹெப்லி கூறியுள்ளார். இந்த டொயோட்டா கரோல்லா காரில், தொடர்ந்து லாங்-டிரைவ் அடிக்க க்ரீம் ஹெப்லி திட்டமிட்டுள்ளார். க்ரீம் ஹெப்லியின் டொயோட்டா கரோல்லா காரில், 1.8 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவரையும், 156 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கார் பெரிதாக எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் 20 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடுவது என்பதெல்லாம், சாதாரண விஷயமல்ல. இதன் காரணமாகவே டொயோட்டா நிறுவனத்தின் கார்களை வாடிக்கையாளர்கள் முழுமையாக நம்புகின்றனர். ஆனால் க்ரீம் ஹெப்லியை போல், கார்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் முறையாக சர்வீஸ் செய்வது அவசியம். அப்போதுதான் கார் தனது முழு திறனையும் வெளிப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 14, 2022, 7:56 [IST]
English summary
Toyota corolla clocks over 20 lakh kilometers
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+