அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை மடக்கும் போலீஸாருக்கு, சமீப காலமாக அதிர்ச்சியான தகவலே கிடைத்து வருகின்றது. அந்தவகையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

நாம், தற்போது நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இதற்கு உதாரணம் நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களே முக்கிய சாட்சியாகும். அந்தவகையில், நாட்டில் இயங்கும் அனைத்து துறைகளும் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. ஏன், நமது பாரத பிரதமர் மோடி கூட டிஜிட்டல் இந்தியாவைத் தான் ஊக்குவித்து வருகிறார்.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

இவ்வாறு, டிஜிட்டல் நாடே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்க, ஏன் உலகமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்க, அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க காவல்துறையினரும் டிஜிட்டல் மயமாதலுக்கு திணிக்கப்பட்டனர். அதனடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் சிசிடிவி கேமிரா. இது ஆரம்பத்தில் தனியார் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், தற்போது அரசே, சாலை மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தி வருகின்றனர். இதனால், பல்வேறு குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படுகின்றன.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

மேலும், குற்றச் சம்பவங்கள் நடந்திருந்தால், அதில் தீர்வு காண்பதில் இந்த சிசிடிவி கேமிராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சிசிடிவி கேமிராக்கள் தற்போது அதிகபட்சமாக, போக்குவரத்து விதிமுறையில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கே ஆப்பு வைக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

அந்தவகையில், விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை, சிக்னல் மற்றும் சாலையேரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் பதிவு செய்து, அவர்களுக்கான அபராத நோட்டிஸை, போலீஸார் அனுப்பி வைத்து வருகின்றனர். அதேசமயம், வாகன ஓட்டிகளின் முறைகேடுகளை, வாஹன் எனப்படும் சர்வரில் டேட்டாக்களாக சேகரித்தும் வைத்துக் கொள்கின்றனர். இதன்மூலம் வாகன ஓட்டிகளின் நடவடிக்கை அனைத்தும் அழியாமல் சேகரித்து, பிற்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள பயன்படுத்த முடியும்.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

அதேசமயம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள், அவர்களுக்கென தனித்துவமான சர்வரை தயார் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகா போலீஸார் முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகவே மாறிவிட்டனர். அந்தவகையில், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை, அவர்களது கையில் இருக்கும் டிஜிட்டல் கேமிரா மூலம் படம் பிடித்து இ-செலான் மூலம் அபராத ரசீதினை வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுகின்றனர்.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

இதுபோன்று, இ-செலானை பெறும் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள்ளாக அவர்கள் அந்த அபாரதத் தொகையினை செலுத்திவிட வேண்டும். ஆனால், சிலர் இந்த இ-செலானை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் தான் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்தில் அரங்கேறியுள்ளது.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

தமிழ்நாடு வாகன பதிவெண்ணைக் கொண்ட டொயெட்டா இடியோஸ் காரை, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஹைதராபாத் போலீஸார் மடக்கியுள்ளனர். அப்போது, அவருக்கான அபராதத்தை வழங்கும் வகையில், இ-செலான் கருவியில் காரின் பதிவெண்ணை போக்குவரத்து போலீஸார் பதிவிட்டுள்ளனர். அதில்கிடைத்த தகவலானது, அந்த போலீஸுக்கு தலை சுற்றலையே ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

அந்தவகையில், குறிப்பிட்ட அந்த இடியோஸ் காரின் மீது மட்டுமே 78க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது. இதில், அபராதத் தொகை மட்டுமே ரூ. 96,830 நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு மலைத்துபோன போன போலீஸார் அந்த கார் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

பின்னர், இதுகுறித்த வழக்குப் பதிவு செய்த போலீஸார், காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். மேலும், நிலுவையில் இருக்கும் அபராதத்தொகையை செலுத்திவிட்டு காரை திரும்ப பெற்றுச் செல்லுமாறு அந்த இடியோஸ் காரின் உரிமையாளரிடம் கூறப்பட்டது.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

இதேபோன்றதொரு சம்பவம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அதில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஹோண்டா ஜாஸ் உரிமையாளர் ரூ. 1.82 லட்சம் அபராதத் தொகை நிலுவையுடன் சிக்கினார். மேலும், அந்த கார் அதுவரை 127க்கும் மேற்பட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவும், ஹைதராபாத் மாநில போலீஸாராலே கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி தொடர்ச்சியாக பல்வேறு இதுபோன்ற சம்பவங்கள் அந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

வாகன ஓட்டிகள் சிலர் தங்களை அறியாமலேயே, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது உண்டு. மேலும், சிலர் தெரிந்தே விதிமுறையில் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்களின் அவசரமே காரணமாக இருக்கின்றது. இதுபோன்ற நபர்களிடம் இருந்து அபராதம் பெறும் விதமாக இ-செலான் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இந்த இ-செலான் முறையாக வந்து சேர்வதில்லை. இதன்காரணமாக, சிலர் இதுகுறித்து அறியாமலேயே அடுத்தமுறை போலீஸிடம் சிக்கும்போது, தேவையற்ற பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.

அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா!

ஆகையால், ஒவ்வொரு வாகன ஓட்டிகளும், அவர்களது மாநிலங்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல் துறை (வாஹன்) இணையதளத்திற்கு சென்று, அவர்களின் வாகனம் தகவல்களை சரி பார்த்துக்கொள்ளலாம். இதன்மூலம், தேவையற்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்படும்.

source: Cartoq

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2019, 11:34 [IST]
English summary
Toyota Etios Owner Fined Nearly Rs1-lakh. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+